சூர்ய பகவானுக்கு பல்லால்கடித்துச்சாப்பிடும் பண்டங்கள் நைவேத்யம் கூடாது! ஏன் என்றால் சூர்யனுக்குப் பல் கிடையாது! முன்பு தக்ஷன்்செய்த யாகத்தின்போது அங்கே வ ந்த வீரபத்ரரை பார்த்து சூர்யன் பல்லைக்காட்டி பலமாகச் சிரித்தான். அதனால் கோபம் கொண்ட வீரபத்ரர் சூர்யனை ஓங்கி அறைந்ததில் சூர்யனின் பற்கள்யாவும் உடைந்துவிழுந்துவிட்டன! இந்த நிகழ்ச்சியை தமிழில் தக்கயாகப்பரணி என்னும் நூலிலும் காணலாம்! ஶ்ரீதரன். *ஸ்ரீ மித்ர ஸப்தமி அல்லது நந்த ஸப்தமி.*
நாளை *(27.11.2025 - வியாழக்கிழமை) ஸ்ரீமித்ர ஸப்தமி*
*மார்கசிர மாதம் சுக்ல பக்ஷ ஸப்தமி திதியில் தான் அதிதிக்கும் கச்யப மஹரிஷிக்கும் ஶ்ரீ ஸூர்யன் புத்ரனாக பிறந்தார்*.
*அதித்யாம் கச்யபாஜ் ஜக்ஞே மித்ரோ நாம திவாகர:| ஸப்தம்யாம் தேந ஸாக்யாதா லோகேஸ்மின் மித்ர ஸப்தமி||*
பகல் முழுவதும் பூமிக்கு வெளிச்சம் கொடுப்பதால் *திவாகரன்* எனப்பெயர். அனைவருக்கும் நெருங்கிய நண்பனாவதால் *மித்ரன்* எனப்பெயர்.
நாளைய தினம் பலவித புஷ்பங்களால் சூரியனை பூஜை செய்ய வேண்டும் *சூரிய காயத்ரி, சூரிய நமஸ்காரம், ஆதித்ய ஹ்ருத்யம், கோளறு பதிகம். போன்ற ஸ்தோத்திரங்கள் பாராயணம் செய்யலாம்*.
*நாநா குஸும ஸம்பாரைர் பக்ஷ்யை: பிஷ்டமயை: சுபை:| மது நா ச ப்ரசஸ்தேந ---போஜயேத்….தீநாநாதாம்ஸ்ச மாநவான்|*
என்பதாக ஸூர்யனின் ப்ரீதிக்காக மாவினால் நெய்யுடன் சேர்ந்து செய்யப்பட்ட பக்ஷணங்களை ஸூர்யனுக்கு தேனுடன் நிவேதனம் செய்து ஏழைகளுக்கு கொடுத்து சாப்பிட செய்து ஸந்தோஷிக்க செய்ய வேண்டும்.
இதனால் *ஆரோக்கியம் பாஸ்கராதிச்சேத்* என்பதாக *தீராத அனைத்து நோய்களும் தீரும். ,ஆரோக்கியம், ஆயுஸும் ஏற்படும்*.
--
You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected].
To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdujesckWpnrmOnOjiDFDHgjG-n7FkfaF3rgSrCKCKjSqw%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected].
To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/8FC49AC7-D837-411B-9677-3858CB8AC578%40gmail.com.
|
- [no subject] Venkatachalam Subramanian
- Re: Srinivasan Sridharan
- Fwd: Rajaram Krishnamurthy
-