*ஸ்ரீ மித்ர ஸப்தமி அல்லது நந்த ஸப்தமி.*

நாளை *(27.11.2025 - வியாழக்கிழமை) ஸ்ரீமித்ர ஸப்தமி*

*மார்கசிர மாதம் சுக்ல பக்ஷ ஸப்தமி திதியில் தான் அதிதிக்கும் கச்யப
மஹரிஷிக்கும் ஶ்ரீ ஸூர்யன் புத்ரனாக பிறந்தார்*.

*அதித்யாம் கச்யபாஜ் ஜக்ஞே மித்ரோ நாம திவாகர:| ஸப்தம்யாம் தேந ஸாக்யாதா
லோகேஸ்மின் மித்ர ஸப்தமி||*

பகல் முழுவதும் பூமிக்கு வெளிச்சம் கொடுப்பதால் *திவாகரன்* எனப்பெயர்.
அனைவருக்கும் நெருங்கிய நண்பனாவதால் *மித்ரன்* எனப்பெயர்.

நாளைய தினம் பலவித புஷ்பங்களால் சூரியனை பூஜை செய்ய வேண்டும்
*சூரிய காயத்ரி, சூரிய நமஸ்காரம், ஆதித்ய ஹ்ருத்யம், கோளறு பதிகம். போன்ற
ஸ்தோத்திரங்கள் பாராயணம் செய்யலாம்*.

*நாநா குஸும ஸம்பாரைர் பக்ஷ்யை: பிஷ்டமயை: சுபை:| மது நா ச ப்ரசஸ்தேந
---போஜயேத்….தீநாநாதாம்ஸ்ச மாநவான்|*

என்பதாக ஸூர்யனின் ப்ரீதிக்காக மாவினால் நெய்யுடன் சேர்ந்து செய்யப்பட்ட
பக்ஷணங்களை ஸூர்யனுக்கு தேனுடன் நிவேதனம் செய்து ஏழைகளுக்கு கொடுத்து சாப்பிட
செய்து ஸந்தோஷிக்க செய்ய வேண்டும்.

இதனால் *ஆரோக்கியம் பாஸ்கராதிச்சேத்* என்பதாக *தீராத அனைத்து நோய்களும்
தீரும். ,ஆரோக்கியம், ஆயுஸும் ஏற்படும்*.

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdujesckWpnrmOnOjiDFDHgjG-n7FkfaF3rgSrCKCKjSqw%40mail.gmail.com.

Reply via email to