நகாசு வேலை செய்ய தெரிந்த நகைத் தொழிலாளி. நகையின் குறை நாகசுவில் மறையும்.
அம்மணி கலோரி வேளச்சேரியில் உண்டு ஆனால் முதல்வர் கோலோச்சும் கல்லூரி அல்ல;
ஸ்டெல்லா மாரீஸ் முதல்வர் பொருந்துவர். IIT  முக்கிய பதவியை கைப்பற்றுதல்
முடையன சாப வர்க்கத்தைச் சேர்ந்த அந்தண பிறப்பிற்கே உரியன. இது அதாவது
இவ்வெழுத்துக்கள் வஞ்சப்புகழ்ச்சி அணியா அல்லது கமலஹாச வரி வடிவமா?  கல்கி
 கிருஷ்ணமூர்த்தி yum  சாவியும் ஜெயகாந்தனும் ஏன் மோகமுள் ஜானகி ராம
வரிவடிவங்கள் மிக்க ஒளிரும் சுவையுள்ளது. கற்பனை புனைவுகளில் நிஜ தரிசனம்
செய்விப்பது போன்ற ஒரு மாயத்தோற்றம்.
A jeweler who knows how to work with a nagasu. The flaws of the jewel are
hidden in the nagasu. Ammani college is in Velachery but the principal was
not a college-tyrant ; Stella Maris is the one where the mother
superior had cred. . IIT entry and getting after the important posts,
are assigned to the only cursed brahmin community.  This mean that these
letters are a deceitful outfit or a Kamalahasa line pattern? The writings
of Kalki Krishnamurthy Savi and Jayakanthan,- why the charm of Janaki Raman
Mogamul line patterns, are very bright and delicious.On the contrat sujatha
lines are , an illusion like making a real vision in fantasy fiction.  K
Rajaram IRS 1225

---------- Forwarded message ---------
From: Chittanandam V R <[email protected]>
Date: Sat, 1 Feb 2025 at 05:36
Subject: Fwd: Sujatha Snippets
To:




"வேளச்சேரி ரோட்டில் பவர் ஸ்டேஷனைத் தாண்டிக் குறுக்கிடும் பாதையில் போனால்
அம்மணி காலேஜ் வரும். காலேஜைச் சுற்றி சுல்தான் கோட்டை மாதிரி உயரமாகக் கல்
சுவர் எழுப்பி, அதன் உச்சியில் கம்பிவேலி. படிப்பில் முதன்மையான காலேஜ்.
பிரின்ஸிபால் டாக்டர் கஸ்தூரி ஷெட்லூர், பொல்லாத பெண்மணி. வருஷா வருஷம்
யுனிவர்சிடி ராங்க் வரவில்லை என்றால் கண்ணீர் விடுவாள். ஹாண்ட்பால்,
பாஸ்கெட்பால், வாலிபால் போன்ற விளையாட்டுகளில் இந்தக் காலேஜ் டீம்கள்
தென்மண்டல சாம்பியன்.

தினம் ஒரு திருக்குறள் மனப்பாடம் பண்ணியே ஆகவேண்டும். (காமத்துப்பால்
தவிர்த்து!) கல்லூரிக்குள் நடக்கும்போது பாவாடையில்  'ஸ்விஷ்' சத்தம் கூடக்
கேட்காமல் நடக்கவேண்டும். அத்தனை கெடுபிடி."

                      @@@@@@@@@@@@@@@@@@@@

"அம்மாவுக்கு அப்பாதான் எல்லாம். அவர் அரைக்கிலோவோ, கால்கிலோவோ எவ்வளவு பீன்ஸ்
வாங்கினாலும் அதற்குள் சமைத்துப் போடவேண்டியது அம்மாவின் கடமை. அவர்
கொண்டுவரும் பணத்துக்குள் குடித்தனம் பண்ணவேண்டியது... வாங்கிவரும் தீபாவளிப்
புடவையை உடுத்த வேணடியது...வாங்கி வரும் பூவைச் சூடவேண்டியது...அவர் போட்ட
டிவி சானலை, அது எம்.டி.வியாக இருந்தாலும், பார்க்க வேண்டியது....கொடுத்த
கர்ப்பத்தை ஏற்றுக்கொண்டு அபார்ஷனோ, முழுசோ சகிக்க வேண்டியது!"
                    @@@@@@@@@@@@@@@@@@@@@

"சீதாராமன், சைக்கிளுக்கு பஞ்ச கல்யாணி குதிரைக்குச் செய்வது போல அலங்காரங்கள்
பண்ணிவைத்திருந்தான். பரீட்சை பாஸ் பண்ணி கனரா பாங்கில் கிளார்க்காக
இருக்கின்றான். மேலும் பரீட்சைகள் எழுதி எதிர்காலத்தில் அதன் சேர்மனாகும்
உத்தேசம் (அ) உத்வேகம் உள்ளவன்."

                       @@@@@@@@@@@@@@@@@@@@@@

"சுரேஷ் உதாரண அமெரிக்க மாப்பிள்ளை. எட்டாம் வகுப்பிலிருந்தே ஐ.ஐ.டி. கனவுகள்
புகட்டப்பட்டவன். அதற்காக பிரில்லியண்ட், அகர்வால் என்று தபால் மூலமும்,
நேரிலும் தயார் செய்து கொண்டு பல் தேய்ப்பதிலிருந்து படுக்கை வரையில்
ஐ.ஐ.டி.யை ஸ்மரித்தவன்.  .......அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் ஜாதகங்களைச்
சேர்த்தவன். இந்தக் கோஷ்டிக்கு திருநெல்வேலி தெரியாது-லூசியானா, ஒக்லஹாமா
தெரியும். புறநானூறு தெரியாது - பாப் மியூஸிக், பாய் ஜார்ஜ் தெரியும்! அது ஒரு
தனி வர்க்கம்."

       @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

சுஜாதாவின் "அனிதாவின் காதல்கள்" நாவலிலிருந்து.

எப்பேர்ப்பட்ட உணர்ச்சிகள்! எப்பேர்ப்பட்ட வரிகள்! அத்தனையும் முத்துகள்.
சுஜாதா சுஜாதாதான்!

*சித்தானந்தம் *

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopsvqSzdKpbiYp8-Rksxyp89UJNKJ%3D0pGc8s_MyKdC2Yg%40mail.gmail.com.

Reply via email to