No doubt.

On Sat, Feb 1, 2025, 10:39 Rajaram Krishnamurthy <[email protected]>
wrote:

> நகாசு வேலை செய்ய தெரிந்த நகைத் தொழிலாளி. நகையின் குறை நாகசுவில் மறையும்.
> அம்மணி கலோரி வேளச்சேரியில் உண்டு ஆனால் முதல்வர் கோலோச்சும் கல்லூரி அல்ல;
> ஸ்டெல்லா மாரீஸ் முதல்வர் பொருந்துவர். IIT  முக்கிய பதவியை கைப்பற்றுதல்
> முடையன சாப வர்க்கத்தைச் சேர்ந்த அந்தண பிறப்பிற்கே உரியன. இது அதாவது
> இவ்வெழுத்துக்கள் வஞ்சப்புகழ்ச்சி அணியா அல்லது கமலஹாச வரி வடிவமா?  கல்கி
>  கிருஷ்ணமூர்த்தி yum  சாவியும் ஜெயகாந்தனும் ஏன் மோகமுள் ஜானகி ராம
> வரிவடிவங்கள் மிக்க ஒளிரும் சுவையுள்ளது. கற்பனை புனைவுகளில் நிஜ தரிசனம்
> செய்விப்பது போன்ற ஒரு மாயத்தோற்றம்.
> A jeweler who knows how to work with a nagasu. The flaws of the jewel are
> hidden in the nagasu. Ammani college is in Velachery but the principal was
> not a college-tyrant ; Stella Maris is the one where the mother
> superior had cred. . IIT entry and getting after the important posts,
> are assigned to the only cursed brahmin community.  This mean that these
> letters are a deceitful outfit or a Kamalahasa line pattern? The writings
> of Kalki Krishnamurthy Savi and Jayakanthan,- why the charm of Janaki Raman
> Mogamul line patterns, are very bright and delicious.On the contrat sujatha
> lines are , an illusion like making a real vision in fantasy fiction.  K
> Rajaram IRS 1225
>
> ---------- Forwarded message ---------
> From: Chittanandam V R <[email protected]>
> Date: Sat, 1 Feb 2025 at 05:36
> Subject: Fwd: Sujatha Snippets
> To:
>
>
>
>
> "வேளச்சேரி ரோட்டில் பவர் ஸ்டேஷனைத் தாண்டிக் குறுக்கிடும் பாதையில் போனால்
> அம்மணி காலேஜ் வரும். காலேஜைச் சுற்றி சுல்தான் கோட்டை மாதிரி உயரமாகக் கல்
> சுவர் எழுப்பி, அதன் உச்சியில் கம்பிவேலி. படிப்பில் முதன்மையான காலேஜ்.
> பிரின்ஸிபால் டாக்டர் கஸ்தூரி ஷெட்லூர், பொல்லாத பெண்மணி. வருஷா வருஷம்
> யுனிவர்சிடி ராங்க் வரவில்லை என்றால் கண்ணீர் விடுவாள். ஹாண்ட்பால்,
> பாஸ்கெட்பால், வாலிபால் போன்ற விளையாட்டுகளில் இந்தக் காலேஜ் டீம்கள்
> தென்மண்டல சாம்பியன்.
>
> தினம் ஒரு திருக்குறள் மனப்பாடம் பண்ணியே ஆகவேண்டும். (காமத்துப்பால்
> தவிர்த்து!) கல்லூரிக்குள் நடக்கும்போது பாவாடையில்  'ஸ்விஷ்' சத்தம் கூடக்
> கேட்காமல் நடக்கவேண்டும். அத்தனை கெடுபிடி."
>
>                       @@@@@@@@@@@@@@@@@@@@
>
> "அம்மாவுக்கு அப்பாதான் எல்லாம். அவர் அரைக்கிலோவோ, கால்கிலோவோ எவ்வளவு
> பீன்ஸ் வாங்கினாலும் அதற்குள் சமைத்துப் போடவேண்டியது அம்மாவின் கடமை. அவர்
> கொண்டுவரும் பணத்துக்குள் குடித்தனம் பண்ணவேண்டியது... வாங்கிவரும் தீபாவளிப்
> புடவையை உடுத்த வேணடியது...வாங்கி வரும் பூவைச் சூடவேண்டியது...அவர் போட்ட
> டிவி சானலை, அது எம்.டி.வியாக இருந்தாலும், பார்க்க வேண்டியது....கொடுத்த
> கர்ப்பத்தை ஏற்றுக்கொண்டு அபார்ஷனோ, முழுசோ சகிக்க வேண்டியது!"
>                     @@@@@@@@@@@@@@@@@@@@@
>
> "சீதாராமன், சைக்கிளுக்கு பஞ்ச கல்யாணி குதிரைக்குச் செய்வது போல
> அலங்காரங்கள் பண்ணிவைத்திருந்தான். பரீட்சை பாஸ் பண்ணி கனரா பாங்கில்
> கிளார்க்காக இருக்கின்றான். மேலும் பரீட்சைகள் எழுதி எதிர்காலத்தில் அதன்
> சேர்மனாகும் உத்தேசம் (அ) உத்வேகம் உள்ளவன்."
>
>                        @@@@@@@@@@@@@@@@@@@@@@
>
> "சுரேஷ் உதாரண அமெரிக்க மாப்பிள்ளை. எட்டாம் வகுப்பிலிருந்தே ஐ.ஐ.டி. கனவுகள்
> புகட்டப்பட்டவன். அதற்காக பிரில்லியண்ட், அகர்வால் என்று தபால் மூலமும்,
> நேரிலும் தயார் செய்து கொண்டு பல் தேய்ப்பதிலிருந்து படுக்கை வரையில்
> ஐ.ஐ.டி.யை ஸ்மரித்தவன்.  .......அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் ஜாதகங்களைச்
> சேர்த்தவன். இந்தக் கோஷ்டிக்கு திருநெல்வேலி தெரியாது-லூசியானா, ஒக்லஹாமா
> தெரியும். புறநானூறு தெரியாது - பாப் மியூஸிக், பாய் ஜார்ஜ் தெரியும்! அது ஒரு
> தனி வர்க்கம்."
>
>        @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
>
> சுஜாதாவின் "அனிதாவின் காதல்கள்" நாவலிலிருந்து.
>
> எப்பேர்ப்பட்ட உணர்ச்சிகள்! எப்பேர்ப்பட்ட வரிகள்! அத்தனையும் முத்துகள்.
> சுஜாதா சுஜாதாதான்!
>
> *சித்தானந்தம் *
>
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "Thatha_Patty" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to [email protected].
> To view this discussion visit
> https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopsvqSzdKpbiYp8-Rksxyp89UJNKJ%3D0pGc8s_MyKdC2Yg%40mail.gmail.com
> <https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopsvqSzdKpbiYp8-Rksxyp89UJNKJ%3D0pGc8s_MyKdC2Yg%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer>
> .
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJiWWoLWOR_p1%3DfTY8awkZaVBT-NKCLr-YPC6zLX7DZ43VhHYA%40mail.gmail.com.

Reply via email to