மந்திர மாவது நீறுஅ௫ளியவர் : திருஞானசம்பந்தர்திருமுறை : இரண்டாம்-திருமுறை பண் : காந்தாரம்நாடு :பாண்டியநாடு தலம் : ஆலவாய் (மதுரை) சிறப்பு: — திருநீற்றுப்பதிகம் Odhuvarசற்குருநாத ஓதுவார்சற்குருநாத ஓதுவார்மதுரை முத்துக்குமரன்திருத்தணி சுவாமிநாதன்Odhuvar Songமந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே. 1 வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு ஓதத் தகுவது நீறு உண்மையி லுள்ளது நீறு சீதப் புனல்வயல் சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே. 2 முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு சித்தி தருவது நீறு திருஆல வாயான் திருநீறே. 3 காண இனியது நீறு கவினைத் தருவது நீறு பேணி அணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு சேணந் தருவது நீறு திருஆல வாயான் திருநீறே. 4 பூச இனியது நீறு புண்ணிய மாவது நீறு பேச இனியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம் ஆசை கெடுப்பது நீறு வந்தம தாவது நீறு தேசம் புகழ்வது நீறு திருஆல வாயான் திருநீறே. 5 அருத்தம தாவது நீறு அவலம் அறுப்பது நீறு வருத்தந் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண் ணீறு திருத்தகு மாளிகை சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே. 6 எயிலது வட்டது நீறு விருமைக்கும் உள்ளது நீறு பயிலப் படுவது நீறு பாக்கிய மாவது நீறு துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு அயிலைப் பொலிதரு சூலத் தாலவா யான் திருநீறே. 7 இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு பராவண மாவது நீறு பாவ மறுப்பது நீறு தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு அராவணங் குந்திரு மேனி ஆலவா யான்திரு நீறே. 8 மாலொ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு ஆலம துண்ட மிடற்றெம் மாலவா யான்திரு நீறே. 9 குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமுங்கூட கண்டிகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு எண்டிசைப் பட்ட பொருளார் ஏத்துந் தகையது நீறு அண்டத்த வர்பணிந் தேத்தும் ஆலவா யான்திரு நீறே. 10 ஆற்றல் அடல்விடை யேறும் ஆலவா யான்திரு நீற்றைப் போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன் தேற்றித் தென்னனுடலுற்ற தீப்பிணி யாயின தீரச் சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே. K RAJARAM IRS 91225 ---------- Forwarded message --------- From: Narayanaswamy Sekar <[email protected]> Date: Tue, 9 Dec 2025 at 11:22 Subject: Fwd: Fwd - Sri Kripanand Varrior Swamigal To: thatha patty <[email protected]>
---------- Forwarded message --------- From: N Sekar <[email protected]> Date: Tue, Dec 9, 2025 at 9:06 AM Subject: Fwd - Sri Kripanand Varrior Swamigal To: Kerala Iyer <[email protected]>, Narayanaswamy Sekar < [email protected]>, Suryanarayana Ambadipudi <[email protected]>, Rangarajan T.N.C. <[email protected]>, Chittanandam V. R. < [email protected]>, Mathangi K. Kumar <[email protected]>, Mani APS <[email protected]>, Rama (Iyer 123 Group) <[email protected]>, Srinivasan Sridharan <[email protected]> “ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கிறீர்கள்?” – நக்கலுக்கு வந்த நெத்தியடி ஞானப் பதில்! ஒரு நாள்… மகான் கிருபானந்த வாரியார் சுவாமிகள் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார்... அந்த காலை நேரம். தூக்கம் தெளிந்து எழுந்தவர்… கை, கால், முகம் சுத்தமாகக் கழுவி, தன்னுடைய இருக்கைக்கு வந்து அமைதியாக அமர்ந்தார். பின்னர், தன் கையில் திருநீற்றைக் கை நிறைய எடுத்து, நெற்றி முழுவதும் அழகாகப் பூசிக்கொண்டார்... அவர் எதிரில், ஒரு இளைஞன் அமர்ந்திருந்தான். அவர் திருநீறு பூசுவதைப் பார்த்ததும், அவனின் முகத்தில் ஒரு நக்கல் சிரிப்பு… அவன் சற்றும் மரியாதையில்லாமல் கேட்டான்... “பெரியவரே… ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கிறீர்கள்?” அந்தக் கேள்வியின் பின்னால் இருந்தது நக்கல்… இதை பணிவோடு பக்தியுடன் கேட்டிருந்தால், திருநீற்றின் மகிமை, சைவ தத்துவம், ஆன்மீக அர்த்தம், எல்லாவற்றையும் அழகாக விளக்கிக் கூறியிருப்பார், வாரியார் சுவாமிகள்... ஆனால்… இது அறிவு தேடும் கேள்வி அல்ல… அவமதிக்கும் நக்கல் கேள்வி... வாரியார் சுவாமிகளின் நெத்தியடி ஞானப் பதில்... நிதானமாக அந்த இளைஞனைப் பார்த்த வாரியார் சுவாமிகள், அவனுடைய மொழியிலேயே, மிக அமைதியாகச் சொன்னார்: “தம்பி… குடியிருக்கும் வீட்டிற்குத்தான் வெள்ளை அடிப்பார்கள். என் நெற்றிக்குள் இறையன்பு குடியிருக்கிறது… நல்லுணர்வு குடியிருக்கிறது… ஆகவேதான், நான் வெள்ளையடித்தேன்... காலி வீட்டுக்கு, யாரும் வெள்ளையடிக்க மாட்டார்கள்”... அந்த நொடியில்… அந்த இளைஞனின் சிரித்த முகம் சுருண்டது… நக்கல் நாக்கு மடங்கியது… கேள்வி கேட்ட வாயே மூடப்பட்டது… அவமானப்படுத்த வந்தவன், ஞானத்தின் முன் தலை குனிந்தான்... கதையின் ஆழ்ந்த தத்துவம்... திருநீறு வெறும் சாம்பல் அல்ல… அது அகங்காரம் எரிந்த தடம்... “நான் இல்லை… இறைவன் தான் எல்லாம்” என்ற பணிவின் சின்னம்... நெற்றியில் இருக்கும் வெள்ளை நிறம், மனதில் இருக்கும் தூய்மையின் வெளிப்பாடு... சிவாய நம... Yahoo Mail: Search, Organize, Conquer <https://mail.onelink.me/107872968?pid=nativeplacement&c=US_Acquisition_YMktg_315_SearchOrgConquer_EmailSignature&af_sub1=Acquisition&af_sub2=US_YMktg&af_sub3=&af_sub4=100002039&af_sub5=C01_Email_Static_&af_ios_store_cpp=0c38e4b0-a27e-40f9-a211-f4e2de32ab91&af_android_url=https://play.google.com/store/apps/details?id=com.yahoo.mobile.client.android.mail&listing=search_organize_conquer> -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81ZfaGLfwfswZfxb3G61VsSOwub1a%3D--LWiVDrwbF8-_6pg%40mail.gmail.com <https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81ZfaGLfwfswZfxb3G61VsSOwub1a%3D--LWiVDrwbF8-_6pg%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer> . -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoppceOzq%3DNFTn6EkqWB7O%2BgDyWxLXTe5pEawnukwhHZ8A%40mail.gmail.com.
