> From: Srinivasan Sridharan <[email protected]> > Date: December 4, 2025 > Subject: வள்ளுவர்காட்டிய வழி - பாகம் 2 > > > அந்த அந்தணன் தர்மவ்யாதனைத்தேடிச்சென்றபோது அவனை ஒரு கசாப்புக்கடையில் கண்டு > வியப்படைந்தான்! > தர்மவாதன் அந்தணனைப்பார்த்து வாரும்! உம்மை வாசுகி அம்மையார் அனுப்பிறாரா? > என்றுகேட்டான்! > அந்தணனுக்கு வியப்பு அதிகமாகியது! > பிறகு அவனை பணிவுடன்வணங்கி தனக்கு நல்லுபதேசம் செய்து அருளும்படி > வேண்டிக்கொண்டான்! > தர்ம வ்யாதனும் அந்த அந்தணனைத் தன் வீட்டிற்கு அழைத்துவந்தான். > அங்கு அந்தணனை இருக்கையில் அமரச்செய்து விட்டு தான்உள்ளே சென்று நீராடி நல்ல > உடைஅணிந்து வந்து , அந்தணனைத்தனது முதிய தாய்தந்தையரிடம் அழைத்துச்சென்றான். > அங்கு அலன் தனது பெற்றோர்களை அன்புடன் பல்வகையிலும் பேணி உபசரித்து > எல்லாபணிவிடைகளையும் செய்து விட்டு பிறகு அந்தணனைப்பர்த்துக்கூறினான். > ஐயனே! நான் படிப்பறிவில்லாதவன். எனது குலத்தொழிலாகிய இறைச்சி வியாபாரம் > செய்துவருகிறேன். என்னைத்தேடிவருபவரை அன்புடன் உபசரித்து என்னால் முடிந்த > உதவிகளை அவர்களுக்குச்செய்து , எனது பெற்றோர்களையே கடவுளால் நினைத்து > அவர்களுக்கு எல்லா பணிவிடைகளையும் செய்கிறேன்! அதன் பலன்தான் எனக்கு > வாழ்க்கையில் உண்மையான இன்பமும > அமைதியும்கிட்டியுள்ளன! ஆகையால் அத்தகைய வாழ்க்கையையே தாங்களும் கடை > பிடிக்கச்சொல்கிறேன் என்று உபதேசித்தான். > அந்தணனும் அதைக்கேட்டுத்தனது கர்வம் கோபம் எல்லா ற்றையும் விட்டு நல்வழியில் > நடந்து உய்ந்துபோனான். > > ் > >
-- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/4055A3B2-F7CC-4A5A-9EC3-64AD60413068%40gmail.com.
