மயிலின் தத்துவம், முதல் மயூரம்- *வேத மயில்*
விநாயகப் பெருமானுக்காக வேத வேள்வியிலிருந்து வெளிப்பட்ட மயில், பின்னாளில் முருகனுக்கு அவரால் தரப்பட்டதை விநாயக புராணத்தால் அறிய முடிகிறது. அனைத்து வேதங்களின் சாரமும் உள்ளடங்கிய பிரணவ மந்திரத்தின் பொருளாக முருகன் இருப்பதை உணர்த்துகின்றது. இதையே அருணகிரிநாதர் 'ஆன தனிமந்திர ரூபமயில்' என்கிறார். பாம்பன் சுவாமிகளுக்கு இந்தக் கோலத்தில் முருகன் காட்சியளித்ததாக கூறப்படுகிறது (குக ரகசியம், தகராலய ரகசியம்) இரண்டாம் மயூரம் - *இந்திர மயில்* சூரனுடன் முருகன் போர் நிகழ்த்தியபோது, சூரன் அவருடைய ஆற்றலுக்கு எதிர்த்து நிற்க முடியாமல் சக்ரவாகப் பட்சியாக உருவமெடுத்து ஓடினான். அவனைத் துரத்திச் செல்ல முருகன் எண்ணியபோது, இந்திரன் அழகிய மயிலாகி, அவரைத் தாங்கியதாக கூறப்படுகின்றது. இந்திரன் என்பது பல மெய்யுணர்வுகளின் தொகுப்பு (Collective Consciousness) நம்முள் வேகமாக தோன்றும் அசுர உணர்வுகள் எண்ணங்களுக்கு இந்திரமயில் அவசியம்😊 மூன்றாம் மயூரம்- *சக்தி மயில்* பராசக்தியே மயில் வடிவம் தாங்கி குமரனுடன் ஆடி மகிழ்கிறாள். மயிலாகி இறைவனைப் பூசிப்பதும், குமரனோடு விளையாடுவதும் அன்னையின் கருணையைக் குறிக்கும். இதனால் இறைவிக்கு, `மயிலம்மை’ என்பது பெயராயிற்று. இம்மயில் முருகனைவிடச் சற்றுப் பெரியதாக விளங்க, முருகன் இளையவனாக அருகில் இருந்து அதை ஆரத்தழுவி மகிழ்வதாக கூறப்படுகிறது. (மயிலை கட்டியணைத்து கொண்டிருக்கும் முருகனை பார்த்திருக்கிறீர்களா?) நான்காம் மயூரம் - *அசுர மயில்* இது நாம் அனைவரும் அறிந்த சூரபத்மன், நம்மை வதைக்கும் அசுர குணங்கள் கந்தனின் கருணையினால் அவரை ஏந்தி பறக்கும் வண்ணமயிலாகும் என்பது உறுதி. இன்னும் பல மயூரங்கள் கந்தன் வசமுண்டு 😊 *நாத மயில்* இந்த மயில் பார்வைக்குக் கிட்டாத மயில். மந்திர உபதேசத்தின்போது முருகன் இந்த மயில் மீதிருந்து உபதேசம் செய்கிறான். இம்மூர்த்தியை தியானிப்பது மட்டுமே வழக்கம். சிலையாக அமைப்பதில்லை. *ஔஷதமயில்* இதுவே நம் உடல் நோய் தீர்க்கும் ஔஷத மணியையும், ரச மணியையும் குறிக்கிறது. பிறவிப்பிணியாகிய நோயைத் தீர்க்கும் மயிலாகும். இதில் முருகன் அருவமாக எழுந்தருளியிருப்பதால், மயில்மீது அவனுடைய சக்திவேல் மட்டுமே இருப்பதை நாம் பார்க்கலாம். நாட்டு வைத்தியர்களை கேட்டால் மயில் தோகையின் அளவற்ற மருந்து பலன்களை சொல்லுவார்கள் 😊 ஆன்ம மயில் முருகனின் ஆலயங்களில் கொடி மரத்துக்கு அருகே அமையும் மயிலை `ஆன்ம மயில்' என்கின்றனர். புற அழகு நான் என்னும் கர்வத்தாலும், குலச்செருக்கு, கல்விச்செருக்கு என்னும் செருக்குகளாலும் களித்திருக்கின்ற ஆன்மா, இறைவனை உணர்ந்த பின்னர் அடங்கி, ஒடுங்கி நிற்பதையே இம்மயில் சுட்டுகிறது. இனி நாம் அனைவரும் முருகன் கோயிலுக்கு சென்றால் அங்கிருக்கும் மயில் எதை குறிக்கிறது என்று பார்ப்பதிலேயே நேரம் ஒதுக்கவேண்டும்😃😃 -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdtDC%3D3FiyccjnLB7Tw3hchxUF5kzEQVM%3DfOh-3%3DC_MXxQ%40mail.gmail.com.
