A refined thought on a unique subject. I would like to add and detail more as under:
On Fri, 10 Oct 2025 at 12:40, Venkatachalam Subramanian < [email protected]> wrote: > மயிலின் தத்துவம், > > முதல் மயூரம்- > *வேத மயில்* > > விநாயகப் பெருமானுக்காக வேத வேள்வியிலிருந்து வெளிப்பட்ட மயில், பின்னாளில் > முருகனுக்கு அவரால் தரப்பட்டதை விநாயக புராணத்தால் அறிய முடிகிறது. > > அனைத்து வேதங்களின் சாரமும் உள்ளடங்கிய பிரணவ மந்திரத்தின் பொருளாக முருகன் > இருப்பதை உணர்த்துகின்றது. இதையே அருணகிரிநாதர் 'ஆன தனிமந்திர ரூபமயில்' > என்கிறார். பாம்பன் சுவாமிகளுக்கு இந்தக் கோலத்தில் முருகன் காட்சியளித்ததாக > கூறப்படுகிறது (குக ரகசியம், தகராலய ரகசியம்) > > இரண்டாம் மயூரம் - > *இந்திர மயில்* > > சூரனுடன் முருகன் போர் நிகழ்த்தியபோது, சூரன் அவருடைய ஆற்றலுக்கு எதிர்த்து > நிற்க முடியாமல் சக்ரவாகப் பட்சியாக உருவமெடுத்து ஓடினான். அவனைத் துரத்திச் > செல்ல முருகன் எண்ணியபோது, இந்திரன் அழகிய மயிலாகி, அவரைத் தாங்கியதாக > கூறப்படுகின்றது. > > இந்திரன் என்பது பல மெய்யுணர்வுகளின் தொகுப்பு (Collective Consciousness) > நம்முள் வேகமாக தோன்றும் அசுர உணர்வுகள் எண்ணங்களுக்கு இந்திரமயில் அவசியம்😊 > > மூன்றாம் மயூரம்- > *சக்தி மயில்* > பராசக்தியே மயில் வடிவம் தாங்கி குமரனுடன் ஆடி மகிழ்கிறாள். மயிலாகி இறைவனைப் > பூசிப்பதும், குமரனோடு விளையாடுவதும் அன்னையின் கருணையைக் குறிக்கும். இதனால் > இறைவிக்கு, `மயிலம்மை’ என்பது பெயராயிற்று. இம்மயில் முருகனைவிடச் சற்றுப் > பெரியதாக விளங்க, முருகன் இளையவனாக அருகில் இருந்து அதை ஆரத்தழுவி மகிழ்வதாக > கூறப்படுகிறது. (மயிலை கட்டியணைத்து கொண்டிருக்கும் முருகனை > பார்த்திருக்கிறீர்களா?) > > நான்காம் மயூரம் - > *அசுர மயில்* > இது நாம் அனைவரும் அறிந்த > சூரபத்மன், நம்மை வதைக்கும் அசுர குணங்கள் கந்தனின் கருணையினால் அவரை ஏந்தி > பறக்கும் வண்ணமயிலாகும் என்பது உறுதி. > > இன்னும் பல மயூரங்கள் கந்தன் வசமுண்டு 😊 > > *நாத மயில்* > இந்த மயில் பார்வைக்குக் கிட்டாத மயில். மந்திர உபதேசத்தின்போது முருகன் இந்த > மயில் மீதிருந்து உபதேசம் செய்கிறான். இம்மூர்த்தியை தியானிப்பது மட்டுமே > வழக்கம். சிலையாக அமைப்பதில்லை. > > *ஔஷதமயில்* > > இதுவே நம் உடல் நோய் தீர்க்கும் ஔஷத மணியையும், ரச மணியையும் குறிக்கிறது. > பிறவிப்பிணியாகிய நோயைத் தீர்க்கும் மயிலாகும். > > இதில் முருகன் அருவமாக எழுந்தருளியிருப்பதால், மயில்மீது அவனுடைய சக்திவேல் > மட்டுமே இருப்பதை நாம் பார்க்கலாம். > > நாட்டு > வைத்தியர்களை கேட்டால் மயில் தோகையின் அளவற்ற மருந்து பலன்களை சொல்லுவார்கள் > 😊 > > ஆன்ம மயில் > முருகனின் ஆலயங்களில் கொடி மரத்துக்கு அருகே அமையும் மயிலை `ஆன்ம மயில்' > என்கின்றனர். > புற அழகு நான் என்னும் கர்வத்தாலும், குலச்செருக்கு, கல்விச்செருக்கு என்னும் > செருக்குகளாலும் களித்திருக்கின்ற ஆன்மா, இறைவனை உணர்ந்த பின்னர் அடங்கி, > ஒடுங்கி நிற்பதையே இம்மயில் சுட்டுகிறது. > > இனி நாம் அனைவரும் முருகன் கோயிலுக்கு சென்றால் அங்கிருக்கும் மயில் எதை > குறிக்கிறது என்று பார்ப்பதிலேயே நேரம் ஒதுக்கவேண்டும்😃😃 > > -- > You received this message because you are subscribed to the Google Groups > "Thatha_Patty" group. > To unsubscribe from this group and stop receiving emails from it, send an > email to [email protected]. > To view this discussion visit > https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdtDC%3D3FiyccjnLB7Tw3hchxUF5kzEQVM%3DfOh-3%3DC_MXxQ%40mail.gmail.com > <https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdtDC%3D3FiyccjnLB7Tw3hchxUF5kzEQVM%3DfOh-3%3DC_MXxQ%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer> > . > -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopDGkrEos5iDab4SuPFK5vkv4A6ZQTB-VD3TfbhC2n4TA%40mail.gmail.com.
Our National Bird.docx
Description: MS-Word 2007 document
