PANDYA INSCRIPTIONS INSCRIPTION OF THE EARLY PANDYAS No. 49.(A. R. No. 287 of 1923.)Tirukkottiyur, Tiruppattur Taluk, Ramanathapuram District.On a slab in the store-room of the Samyanarayana-Perumal temple
This Vatteluttu record which is let into the wall of the store-room and is kept bottom up, is dated in the 2 + 1st year of Sadiya-Maran. The secondary loop is attached to the top of the respective consonants and not to the side. The record, which may be assigned to the time of Rajasimha, must have belonged to Siva temple at the village, though it is now found embedded in the wall of the Vishnu temple. It registers a gift of a perpetual lamp by a certain Anukki Sundaravalli of Kannikudi in Kil-Iraniyamuttam to the god Periya-Srikoyil-Bhatara of Tirukkottiyur. Above this record is another short one, registering a gift of cows and sheep for a lamp by a merchant named Kannan-Sankaranarayanan, and belonging to about the same period. The damaged portion consisting of a few Sanskrit verses is not decipherable, and as only a few words are legible here and there, such as Srigoshthinatha in line 6, no continuous sense can be made out. K Rajaram IRS 5825 ---------- Forwarded message --------- From: Chittanandam V R <[email protected]> Date: Tue, 5 Aug 2025 at 04:59 Subject: Fwd: Andaman Krishnamurthi - Rajendra Cholan's Consort To: *சோழனின் அணுக்கி* *அந்தமான் கிருஷ்ணமூர்த்தி * இராசேந்திர சோழன் தன் அணுக்கியான பரவை நாயகியிடம் பேசிய உரையாடல்களின் யூடியூப் கிடைக்க வாய்ப்பில்லை. (அணுக்கியின் பொருள் வேண்டுவோர் பரமக்குடியாரைத் தொடர்பு கொள்ளவும்). ஆனால் ஓரளவு பிரியசகி அவர்களின் கவிதை ஒத்துப் போகிறது. பாதைகள் அறியாமல் புயலோடு திரிந்தவனை பூவுக்கே தெரியாமல் தேன் சுவைக்க மாற்றினாய்! உன் கண்களுக்குள் தொலைந்து போகிறேன்.. கரை சேரும் கனவே இல்லாமல்... அன்பே...காதல் தவறே ஆகட்டும்! உன் கண்களால் என்னை கைது செய்! இமைக்குள் என்னை சிறை வை! கடைக்கண் பார்வையில் தூக்கிலிடு! அதற்கும் ஏங்கி காத்திருப்பேன்... அணுஅணுவாய் அனுபவிக்க.......! இப்படி உருகிய சோழராசாவிடம் அந்தப் பரவை நாயகி வைத்த கோரிக்கை என்ன தெரியுமா? திருவாரூரில் செங்கற்களால் கட்டப்பட்ட கோவிலை, கற்கோவிலாக மாற்ற வேண்டும். (அம்மணி குரல்: ஒரு ராசாவிடம் கேட்கின்ற மேட்டரா இது? பிழைக்கத் தெரியாத ஆளா இருந்திருக்கே!) திருமதி இராசேந்திர சோழனின் பெயரை வரலாறு மறந்து விட்டது. ஆனால் இந்தக் கோரிக்கை மூலம் பரவையின் புகழ் நினைத்து நின்று விட்டது. மேலும் விபரங்களுக்கு பாலகுமாரனின் கங்கை கொண்ட சோழன் (நான்கு தொகுதிகளும்) படிக்கவும். பாலகுமாரனின் நாவல்களில் கதையினை விட, அதைக் கொண்டு செல்லும் பாங்கும், அதில் உலா வரும் பாத்திரங்களுமே மனதில் நிற்பவை. பெரும்பாலும் அறிவு ஜீவிகள். அதிலும் அதில் வரும் பெண்கள் எல்லாருமே அதிபுத்திசாலிகளாக வலம் வருவர். (வீட்டு அம்மணிக்கு பாலகுமாரனைப் பிடிக்காது. இதுவும் ஒரு காரணமாய் இருக்குமோ!). சோழன் பரவையின் கண் பார்த்து மிரண்டு போயிருக்க, பாலா குதிரையின் கண்களைப் பார்த்து அதிசயிக்கிறார். நிலம் பரவி கால்கள் நீட்டி, கன்னத்துப் பக்கம் அழுந்த குதிரைகள் தூங்குவதில்லை ஏனைய உயிர்கள் போல. நிற்கையில் கண்கள் மூடி களைப்பினைப் போக்கும் குதிரை, தொட்டதும் விழித்துக் கொள்ளும். தொடுதலைப் புரிந்து கொள்ளும். தூங்குதல் பெரிய பாவம். தூங்கவா பிறந்தீர் இங்கு? வாழ்வதோ சிறிதுநாட்கள். அதில் சாவினை நிகர்த்த தூக்கம். புரிபவர் பெரியோர் அல்லர். வாழ்பவர் தூங்க மாட்டார். புணர்ந்த பின் குதிரைகள் ஒரு நாளும் தூங்கியதில்லை. (டயர்டே ஆகாதா? அடேங்கப்பா… கண் துவங்கி காமம் வரை… பாலா..பாலா தான்) ஏன் கண்களுக்கு இம்புட்டு ஈர்ப்பு? பெண்களின் கண்களுக்கான சாமுத்திரிகா இலட்சனம் என்ன சொல்கிறது தெரியுமா? (ஆண்களின் கண்கள் என்ன அவுட் ஆஃப் சிலபஸா? – கோவை சதாசிவம் கேள்வி கேட்பார்) நீண்டு அகண்ட பெரிய கண்களை உடையவர்கள் செயல்வீரர்களாகவும், நினைத்த காரியத்தை, நினைத்த நேரத்தில் செய்து முடிக்கும் அசகாய சூரர்களாகவும் இருப்பர். (பரவையின் கண்ணும், பாலாவின் கண்ணில் பட்ட கண்களும் அப்படிப்பட்ட இரகமாய் இருக்குமோ!) கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது பாடல் ஒன்றிலும் நீணெடுங்கண்ணாள் என்று நெய்தல் நில பரதர் மகளின் அழகினைப் பற்றிய குறிப்பு சொல்கிறது. கம்பனிடம் கேட்டால், கண் நீளமானதா? மார்பு நீளமானதா என்று அவரின் ஒரு பாடல் பட்டிமன்றம் நடத்தி வருகின்றது. நீளமான கண் போலவே, நீளமான பெயர். *தாள் உயர் தாமரைத் தளங்கள் தம்மொடும் கேள் உயர் நாட்டத்துக் கிரியின் தோற்றத்தான்* - நாளத்தோடு கூடி உயர்ந்த செந்தாமரை மலரின் இதழ்களுடன் ஒளி சிறந்து விளங்கும் கண்களையும் மலை போன்று சிறந்து விளங்கும் தோற்றத்தையும் உடைய இராமன்; இதோ பாடல்: *தாள் உயர் தாமரைத் தளங்கள் தம்மொடும்* *கேள் உயர் நாட்டத்துக் கிரியின் தோற்றத்தான்* *தோளொடு தோள் செலத் தொடர்ந்து நோக்குறின்,* *நீளிய அல்ல கண்; நெடிய, மார்பு!' என்பாள்.* இராமனது ஒரு தோளோடு மற்றொரு தோளை அளாவத் தொடர்ச்சியாகப் பார்த்தால், என் கண்கள் நீண்டன அல்ல. அவன் மார்பு நீண்டு பரந்துள்ளது என்று சொல்வாள். (2844 ஆரணிய காண்டம் – சூர்ப்பனகைப் படலம்) *அந்தமான் கிருஷ்ணமூர்த்தி* ************************************************ *சித்தானந்தம் * -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoofg1z%2BtNEdberOZi%2BE%3DXqSYVPPmjehhA5Z-kcmZQTbKQ%40mail.gmail.com.
