அணி aṇi n. அணி-. [K. M. aṇi.]1. Embellishment, decoration; ஒப்பனை (பிங்.)2. Beauty; அழகு (பிங்.) 3. Ornament, jewel;ஆபரணம். (தொல். சொல் 45,
ஆணி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே என்பதும் சரியாக இருக்கலாம். ஆணி முத்து என்பது அலங்காரமாக அணியும் பொருள்; ஆடை இன்றும் நகை கடைகள் உள்ள மதுரை ஆவணி வீதியில் வாங்கினேன் என்றும் கூறலாம். K Rajaram IRS 31725 ---------- Forwarded message --------- From: Chittanandam V R <[email protected]> Date: Thu, 31 Jul 2025 at 06:23 Subject: Fwd: ஆனைமுத்து To: ஆணி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே அள்ளிவைத்துப் பார்த்திருந்தேன் அழகு கைகளிலே (கண்ணதாசன், பாமா விஜயம்) ஆணி முத்து அல்லவாம், ஆனை முத்துவாம். கீழ்க் கண்டதைப் படிக்கவும். This line intrigued me. I thought pearls come from oysters from the sea. Not heard of pearls from elephant. An online search for this led me to fascinating discoveries. So I think in translation it should be ஆனைமுத்து not ஆணிமுத்து. யானை தந்தத்திலிருந்து கிடைக்கும் முத்து, தந்த முத்து அல்லது கஜமுத்து என்று அழைக்கப்படுகிறது. இது யானையின் தந்தத்தில் மிக அபூர்வமாகக் கிடைக்கும் ஒரு பொருள் ஆகும். வயதான யானைகளின் நீண்ட தந்தங்களில் இவை உருவாகின்றன என்று கூறப்படுகிறது. இந்த முத்துக்கள் மிகவும் அபூர்வமாகக் கிடைப்பதால், இவை விலைமதிப்பற்றதாகக் கருதப்படுகின்றன. யானை தந்தத்தில் இருந்து முத்துக்கள் உதிர்வது பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களிலும் காணப்படுகின்றன. பேயாழ்வார், மூன்றாந் திருவந்தாதி, திவ்ய பிரபந்தம் 2326 *புரிந்து மதவேழம் மாப்பிடியோடூடி* *திரிந்து சினத்தால் பொருது, விரிந்த சீர்* * வெண்கோட்டு முத்து உதிர்க்கும் வேங்கடமே, மேலொரு நாள்* *மண் கோட்டுக் கொண்டான் மலை.* (மத்த கஜமானது தனது பேடையொடு கூடிக் குலாவி, பின்னர் ஊடி இங்குமங்கும் திரிந்து கோபத்தினால் வெளுத்த கொம்புகளினின்று சிறந்த முத்துகளை வெளியிடப் பெற்ற திருவேங்கட மலை. இப்பாசுரத்தின் வரிகள் முன்பே படித்திருப்பினும், இன்று தான் முழுதாகப் புரிந்தது *Dr.ராமகிருஷ்ண ஈஸ்வரன்* **************************************** *சித்தானந்தம் * -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoq310zZtwqqiumUyCF-P2z%3DjhQhyXBG-F6AA-f_0L6trQ%40mail.gmail.com.
