பாடியவர்: இராமலிங்க வள்ளலார்
மா, பலா, வாழை என்ற முக்கனிகளையும் தனித்தனியே சாறு பிழிந்து, வடிகட்டிச்
சக்கைகளை நீக்கி, அவற்றை ஒன்றாகக் கலந்து, அந்தக் கலவையில் சர்க்கரையும்
கற்கண்டுப் பொடியையும் நிறையச் சேர்த்து, அசுத்தம் இல்லாத நல்ல தேனை அதில்
ஊற்றி, பசும்பாலும் தேங்காய்ப் பாலும் சேர்த்து, இடித்த பாசிப்பருப்பைப்
போட்டுக் கிளறி, இனிப்பான, நல்ல நெய்யையும் சேர்த்துக் கொதிக்கவைத்து இளம்
சூட்டில் இறக்கி ஆறவிட்டுப் பின்னர் அதிலிருந்து ஒரு துண்டு எடுத்து வாயில்
போட்டால் எப்படி இருக்கும்? அந்தச் சுவைக்கட்டியைவிட அதிகம் இனிப்பான
தெள்ளமுது, என் இறைவனாகிய நீ!
Sung by: Ramalinga Vallalar
What would happen if you squeezed the juice of three fruits, namely mango,
jackfruit, and banana, strained them, removed the husks, mixed them
together, added plenty of sugar and ground cloves to the mixture, poured
good honey without impurities into it, added cow's milk and coconut milk,
added crushed fenugreek seeds, stirred it, added sweet, good ghee, boiled
it over low heat, cooled it, and then took a piece from it and put it in
your mouth?
My Lord, you are sweeter than that delicious piece of food!
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியேநீ யெனக்குச்
சங்கத் தமிழ் மூன்றுந்தா   *-ஒளவையார்*
More or less similarly said by Avvayar that she will offer Vinayaga,
Milk+Honey+jaggery+nuts  in exchange for request for iyal isai
natakam-three tamil branches. K Rajaram IRS 7525
---------- Forwarded message ---------
From: Srinivasan Sridharan <[email protected]>
Date: Wed, 7 May 2025 at 00:20
Subject: Fwd: THIRU ARUTPA 6-37-17
To: Rajaram Krishnamurthy <[email protected]>


This one was included in my Tamil text book in SSLC in 1953! Gone are such
good old days!  Sridharan,

*From:* Srinivasan Sridharan <[email protected]>
*Subject:* *THIRU ARUTPA 6-37-17*



  தனித்தனி முக்கனி பிழிந்து வடித்தொன்றாக்கூட்டி ,
சர்க்கரையும் கற்கண்டின் பொடியும் மிகக்கலந்தே ,
தனித்த நறுந்தேன் பெயது  பசும்பாலும் தெங்கின்  ,
தனிப்பாலும்  சேர்த்து  ஒரு தீம்பருப்பிடியும்  விரவி,
 இனித்த நறுநெய்யளைந்தே இளஞ்சூட்டில் ,
 இறக்கி எடுத்த  சுவைக்கட்டியினும்
இனித்திடும்  தெள்ளமுதே !
அநித்தமர திருப்பொதுவில்  விளங்கு  நடத்தரசே  !
அடிமலர்க்கென்  சொல்லணியாம்  அலங்கணிந்தருளே  !

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoqKPe3Ex4Zhr%3D4vj%3D-zvHk9-qSFp%3DLbj5dEFN0wuAGEog%40mail.gmail.com.

Reply via email to