கம்பன் பாடல்கள் ஆழ்ந்த அர்த்தமுள்ளவை. தாரையைப் பார்த்ததும் மூன்று தாயாரைத் தான் நினைக்க தோன்றியவனுக்கு, தார் குலம் என்கிற அர்த்தத்தில், பூ மாலை அணிந்து என்று பத பிரயோகம் கம்பன் செய்துள்ளான் என்பது அறிவுக்கு பொருந்தாது. மெட்ராஸ் யூனிவர்சிட்டி அகராதி குறிக்கும் இரு அர்த்தங்கள் தான் இதற்குப் பொருந்தும் என்று நான் நினைக்கிறேன்.
தூசிப்படை, முன்னணி படை, போரில் முன்னே சென்று தாக்கும் படைப்பிரிவினர். University of Madras Lexicon தார் . Rank and file of anarmy, troops; சேனை (சூடா.) தாரொடுங்கல்செல்லா (கம்பரா. மந்தரை 13). 10. Orderliness;ஒழுங்கு. தாரருந் தகைப்பின் (பதிற்றுப். 64, 7 இலக்குவன் வந்தது முன்னணி படை போல் இருக்கிறது. எனவே தார்குலம் என்று கம்பன் கூறியிருக்கலாம். இலக்குவன் ஒரு அதிரடிப்படை தான். அல்லது, கம்பன் பிறிதொரு இடத்திலும் இந்த வார்த்தையைப் பயன்படுத்தி உள்ளான். தாரொடுங்கல்செல்லா (கம்பரா. மந்தரை 13). 10. Orderliness; ஒழுங்கு. தாரருந் தகைப்பின் . பிடர் மயிர் தாரணியெருத்தின் அரிமான் (பதிற்றுப்.12, 4). எனவே இங்கு மலர் என பொருள் கூறுவது சரியல்ல என நினைக்கிறேன். ஹனுமான் ராவணனிடம் சென்ற முன்படை போல; இலக்குவன் சுக்ரீவனிடம் முன்படை போல சென்றுள்ளதால் கார்குல பொருத்தமாகும். கோபத்தில் பிடரிமயிர் முன்னால் விழுந்து அலங்கரித்தால், தார்குல கருவண்ண மேனியுடவனாய் இருக்கலாம். அல்லது சுக்ரீவனை ஒழுங்கு முறை செய்ய வந்தவனாக இலக்குவனை கற்பனை செய்திருக்கலாம். (மந்தரை சருக்கம் போல தாரையை நோக்கின் தாயாரை எண்ணியவன், மலர் மாலை சூடி இருந்தான் என்பது ஏற்புடையது அல்ல. K Rajaram IRS 14 4 25 ---------- Forwarded message --------- From: Chittanandam V R <[email protected]> Date: Mon, 14 Apr 2025 at 05:47 Subject: Fwd: Tamilnayagam - Kamba Ramayanam - Thaarai, Vaali's Consort (14) To: இராமாயணம் - தாரையின் ஆளுமை (14) - தாயரை நினைந்து நைந்தான். *தமிழ்நாயகம் * கோபத்தோடு வந்த இலக்குவன் முன் தாரை வந்து நிற்கிறாள். "நீ எப்படி இராமனை விட்டுப் பிரிந்து வந்தாய்" என்று கேட்டாள். அப்படி கேட்டதும் இலக்குவனுக்கு கோபம் எல்லாம் போய் விட்டது. அண்ணனை நினைத்த உடன் சீற்றம் போய், அருள் வந்தது. அருளோடு தாரையைப் பார்த்தான். நிலவு போல் இருக்கிறாள். அவளைப் பார்த்தவுடன் இலக்குவனுக்கு அவன் தாயின் நினைவு வந்தது. நம் அம்மாவும் இப்படித்தானே விதவைக் கோலத்தில் சோகமாக இருப்பாள் என்று எண்ணினான்... வருந்தினான் பாடல் ஆர் கொலோ உரைசெய்தார்? ‘என்று அருள் வர, சீற்றம் அஃக, பார்குலாம் முழுவெண் திங்கள், பகல் வந்த படிவம் போலும் ஏர்குலாம் முகத்தினாளை, இறைமுகம் எடுத்து நோக்கி, தார்குலாம் அலங்கல் மார்பன், தாயரை நினைந்து நைந்தான். இந்த மாதிரி பாடல்களுக்கு உரை எழுதுவது, அதுவும் நான் எழுதுவது , அந்தப் பாடலுக்கு செய்யும் அவமரியாதை என்றே நினைக்கிறேன். எவ்வளவு அழகான பாடல் , எளிமையான, தெளிவான சொற்கள், ஆற்றொழுக்கான நடை....அடடா... இருப்பினும், எனக்குத் தெரிந்ததை சொல்கிறேன்... பொருள்: யார் அது சொன்னது என்று அருள் வர சீற்றம் விலக, உலகுக்கு எல்லாம் முழுமையான பௌர்ணமி நிலவு பகலில் வந்தது போல அழகான முகம் கொண்ட தாரையை தன் முகத்தை எடுத்து நோக்கி மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையை அணிந்த மார்பை உடைய இலக்குவன் தன்னுடைய தாய்மார்களை நினைத்து நைந்தான். இந்த பாடலில் சில நுணுக்கம் உள்ளது. கணவனை இழந்த தாரை விதவைக் கோலத்தில் வருகிறாள். அவளைப் பார்த்து முழு நிலவு மாதிரி இருக்கிறாள் என்று கம்பன் வர்ணிக்கிறான். இது சரியா? சோகத்தில் இருக்கும் பெண்ணை, விதவையான ஒரு பெண்ணை வர்ணிப்பது அவ்வளவு சரியா என்று கேட்டால் சரி இல்லைதான். ஆனால், கம்பன் அதில் நுணுக்கம் செய்கிறான். "முழுவெண் திங்கள், பகல்வந்த படிவம் போலும்" பகலில் வந்த நிலவு போல என்று கூறுகிறான். நிலவுதான், அழகுதான், ஆனால் அது பகலில் வந்தால் எப்படி ஒளி குன்றி, அழகு தெரியாமல் இருக்குமோ அப்படி இருந்தது என்கிறான். அதே போல இன்னொரு வரி, இலக்குவன் மாலை அணிந்து இருந்தான் என்று சொன்னது. "தார்குலாம் அலங்கல் மார்பன்" அண்ணியைக் காணோம். அண்ணன் துயரத்தில் இருக்கிறான். சுக்ரீவன் சொன்ன சொல்லை காப்பாற்றவில்லையே என்ற கோபம். இவற்றிற்கு நடுவில் மாலை அணிந்து கொண்டு வருவானா? கம்பன் எப்படி அப்படிச் சொல்லலாம் ? இலக்குவன் ஊருக்குள் வரும்போது மாலை அணிந்து வரவில்லை. அவன் பெண்களை ஏறெடுத்தும் பார்க்காமல் இருந்தபோது , அண்ணனின் பெயரைச் சொன்னதும் கோபம் அகன்று அருள் பிறந்தபோது , விதைவையான தாரையைப் பார்த்ததும் தன் தாயை நினைந்து வருந்திய அவனின் உயர்ந்த குண நலன்களைப் பாராட்டி, அவனுக்குக் கம்பன் அணிவித்த மாலை அது என்று நயப்புச் சொல்வார்கள். மனைவியைப் பிரிந்து இருக்கிறான். வாலிபன். அழகான பெண்ணைப் பார்த்தவுடன் மனைவின் நினைப்பு வரவில்லை. தாயின் நினைவு வந்தது என்றால் அவனுக்கு ஒரு மாலை போட வேண்டாமா? அண்ணன் மேல், தாயின் மேல் அன்பு கொண்ட ஒரு பாத்திரத்தை படைத்துக் காட்டுகிறான் கம்பன். வருங்கால சந்ததிகள், இளைஞர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம் தருகிறான். இவற்றை எல்லாம் சிறு வயதில் சொல்லித் தந்தால் பிள்ளைகள் மனதில் உயர்ந்த விஷயங்கள் எளிதில் பதியும். நாமும் படிக்கவில்லை. நம் பிள்ளைகளுக்கும் சொல்லித் தரவில்லை. *-- தமிழ்நாயகம் * ******************************** *சித்தானந்தம் * -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZor7dP3ZPdib_PsMW68WFZ3rAGf-1EKFhryXWRk-4X718g%40mail.gmail.com.
