I read the writing talents of the writer. Yet I differ from
certain thoughts based on the convictions one may carry. Dharmam is only
one; but interpreted according to the conveniences of the individuals of
the society; like when one offends the wife of the third man,
noninterference the right gesture as no one knows whether that lady
deserved it or not; but when his wife is offended, and the general thoughts
are like the thought he had on the third man’s wife incident, he feels
that, it is not dharma. THAT IS THE INTERPRETATIONS OF THE INDIVIDUAL
DHARMA. Et dharma is constant and consistent.  Killing is bad is the
dharma; Killing for survival is inevitable where the killing is permitted,
is defence; and killing for the sake of a common purpose as dictated by the
King is pure since it is done in the name of the Lord.  All are destined to
be killed and all were dead already is the verse of the B G. In short,
arathirkke anbu sarba -Marathirkkum akdhe thunai.  So there is no ind
dharma but each has to follow individually the dharma; failure to do so
ends in sins and may have to wait for the RTATA SAPTAMI DAY. Tirukkural
explained it as from the Vedas.  K Rajaram IRS 3225



அறன்வலியுறுத்தல்    குறள் பாடல்

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு

ஆக்கம் எவனோ உயிர்க்கு.   (௩௰௧ - 31)

அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்க்கு
அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு யாது? (௩௰௧)

அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை

மறத்தலின் ஊங்கில்லை கேடு.   (௩௰௨ - 32)

ஒரு வருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை: அறத்தை போற்றாமல்
மறப்பதை விடக்கொடியதும் இல்லை. (௩௰௨)

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே

செல்லும்வாய் எல்லாஞ் செயல்.   (௩௰௩ - 33)

செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப்
போற்றிச் செய்ய வேண்டும். (௩௰௩)

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

ஆகுல நீர பிற.   (௩௰௪ - 34)

ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். அறம் அவ்வளவே:
மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை. (௩௰௪)

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்.   (௩௰௫ - 35)

பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும்
இடங்கொடுக்காமல் அவற்றைக் கடித்து ஒழுகுவதே அறமாகும். (௩௰௫)

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது

பொன்றுங்கால் பொன்றாத் துணை.   (௩௰௬ - 36)

இளைஞராக உள்ளவர், பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய
வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியா துணையாகும். (௩௰௬)

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை

பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.   (௩௰௭ - 37)

பல்லக்கை சுமப்பவனும் அதன்மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே
அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா. (௩௰௭)

அறவழியில் நடப்பவர்கள் பல்லக்கில் உட்கார்ந்து செல்பவர்களைப் போல வாழ்க்கையில்
வரும் இன்ப துன்பங்கள் இரண்டையும் எளியவாகக் கருதி மகிழ்வுடன் பயணத்தை
மேற்கொள்வார்கள் தீய வழிக்குத் தங்களை ஆட்படுத்திக் கொண்டவர்களோ பல்லக்கைத்
தூக்கிச் சுமப்பவர்களைப் போல இன்பத்திலும் அமைதி கொள்ளாமல், துன்பத்தையும்
தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவமின்றி வாழ்வையே பெரும் சுமையாகக் கருதுவார்கள்

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்

வாழ்நாள் வழியடைக்கும் கல்.   (௩௰௮ - 38)

ஒருவன் அறம் செய்ய தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தை செய்வானானால் அதுவே அவன்
உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும். (௩௰௮)

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்

புறத்த புகழும் இல.   (௩௰௯ - 39)

அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன
எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை. (௩௰௯)

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு

உயற்பால தோரும் பழி.   (௪௰ - 40)

ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்து
கொள்ளத்தக்கது பழியே. (௪௰)

---------- Forwarded message ---------
From: Chittanandam V R <[email protected]>
Date: Mon, 3 Feb 2025 at 06:49
Subject: Fwd: Indira Piyadarshini - Dharma
To:




*தனி மனித அறம் (Vs) பொது அறம்*

*இந்திரா ப்ரியதர்ஷிணி *

*கலியில் அறத்தில் பல வித நிறங்கள் மனிதனால் வகுக்கப்படுகின்றன. எல்லாம் என்
வழி நோக்கியால் அறமே என்ற சாதிப்பு மனிதரிடம் அதிகம். **உண்மையில் தேர்ந்த
அறத்தின் பாட்டை ஒன்று தான். நல்லோர் பெரியோர் வகுக்கும் எல்லார்க்கும்
பொதுவான நீதி. பெரியோர் சான்றோர் என்பது நீதி நெறியில் நிற்கும் அவர்
நேர்மையால் மட்டுமே வரையறுக்கப்படுவது. அதில் எளியோரின் நலமிருக்கும்.
இயற்கைக்கு காப்பிருக்கும். நல்லோர் வாழ்விருக்கும். தீமைக்கு மாற்றிருக்கும்.
வலியாரில் நேர்மை இருக்கும். அவர்க்கு கொடையிருக்கும். யாவர்க்கும் சமநீதி
இருக்கும். *

*இதெல்லாம் இல்லாத ஒன்று சாத்திரம் இல்லை. அப்படி வரையறுப்பவர் மேலோரும்
அன்று. இப்படி ஒரு அமைப்பு இல்லாத தளத்தில் மேலே சொன்ன அறக் குழப்பம்
நிலவுகிறது. பாரதி சொல்கிறான். "நால்வகைக் குலத்தார் நண்ணுமோர் சாதியில்,
அறிவுத் தலைமை யாற்றிடும் தலைவர் மற்றிவர் வகுப்பதே சாத்திரமாகும்.
சாத்திரமின்றேல் சாதி இல்லை."பொய்ம்மைச் சாத்திரம் புகுந்திடும் மக்கள்
பொய்ம்மையாகிப் புழுவென மடிவர்". *

*எது பொய்ம்மை யார் மேலோர் எது நீதி என்பது குறித்து எப்போதும் கலியில்
தர்க்கங்கள் உண்டு. கம்ப ராமாயணத்தில் இந்தக் குழப்பமும் நம்முடைய அரை
வேக்காடு அறிவை வைத்து வாதம் அல்ல விதண்டாவாதம் செய்தலும் உண்டு. வாலி வதம்,
பிராட்டி அக்னிப் பிரவேசம், அகலிகை சாப விமோசனம், ரேணுகை சாபம், இந்திரஜித்
வதம் எனப் பலவும். அதில் ஒன்று, விபீஷணன் (Vs)  கும்பகர்ணன். எது பெரியது?
செஞ்சோற்றுக் கடன் தீர்த்த  கும்பகர்ணன் அறமா, விபீஷணன் பேரறமா? ஒன்று
இருவரிடையே உள்ள தனிமனித அறம். மற்றது பொது அறம். *

*இறை எப்போதும் தனி மனித அறம் கடந்து நிற்கும். எல்லார்க்கும் பாெது அன்றோ?
இதனால் இறை சார்ந்து நிற்பவர் நிறையத் தியாகம் செய்ய நேரிடும். இது இராமபிரான்
சகாேதரன்மார் பிராட்டியார்க்கும் பொருந்தும். தனி மனித அறம் எளிதில்
வெளிப்படும். புரியும். மெச்சப்படும். பேரறம் காலம் கடந்து நின்று
போற்றப்படும்.*

*கர்ணன் அறம் தனி மனித அறம். பார்த்தன் அறம் பொதுவானது. நமது புராணங்கள்
எல்லாம் இக்கட்டான நிலையில் நாம் எங்ஙனம் இருக்க வேண்டும் என்று சொல்கின்றன.
பெரு நெறி பொதுமை அற நெறிதான். வள்ளலார் சுவாமிகள் சொல்வது. காமாலைக் கண்
கொண்டு பார்த்தால் அது எத்து பலவீனம் எனத் தோன்றும். ஆழ்ந்து நோக்கினால்
புரியும். மிக வலுவானது. *

*ஒருமுறை நான் கண்பார்வைக் குறைந்த ஒரு மாணவனுக்கு "ஸ்க்ரைப்" அல்லது "எழுதி"
ஆகப் பணி செய்தேன். அப்போது இந்த அறக்குழப்பம் இருந்தது. இரண்டாமாண்டு மாணவன்.
ஜூலியஸ் ஸீசர் ஆங்கில இலக்கியம் மொழித் தாள். நன்றாக நினைவிருக்கிறது.
சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு மறுநாள். கோவை அரசு கலைக் கல்லூரி வளாகம். அவன்
தாய் ஏதோ கூலி வேலைக்கு செல்பவர். இந்தக் "கழுதை" படிக்கவே இல்லை. முதல் நாள்
மூன்று பேராக இரு சக்கர வாகனத்தில் மருதமலை ஊர் சுற்றி விட்டு நேரே தேர்வுக்கு
வந்து விட்டது. இதில் கெத்து வேறு. இரண்டு அறை விடலாம் என்று தோன்றியது.
பொறுமை காத்தேன். விடை தெரிந்தாலும் என்னால் எழுத முடியவில்லை. பின் தேர்வு
முடியும் வரை பொறுமையாக ஊக்குவித்து தாஜா செய்து ஏதேதோ சொல்லி ஒரு மாதிரி
குறைந்த பக்ஷ மதிப்பெண் வாங்க எழுதினோம். நான் மட்டும் இல்லை எனில் ஒரு மணி
நேரத்தில் எழுதாமல் விடைத்தாள் கொடுத்துப் போயிருப்பான். கெஞ்சி கொஞ்சி எழுத
வைத்த நினைவு. வெளியே வந்து என்னிடம் வாங்கிய வசையில் இனி "ஸ்க்ரைப்" வேண்டாம்
என்று முடிவு கட்டி இருப்பான். *

*இது எங்கள் தொழிலிலும் உண்டு. அறியாது பிள்ளைகள் சில நேரம் அவசரத்தில் பல
முறை படிப்பித்தும் தரவுகளை வலையில் பாதுகாப்பு விதிகளுக்கு முரணாக எடுத்து
விடுவார்கள். அங்கு ஒன்றுமே செய்ய இயலாது. சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு
பொறுமையாக பிள்ளைகளை மன்னிப்புக் கோரி எழுதும்படி செய்துதான் விடுவிக்க
வேண்டும். முதலில் நாம் உதவாததால் வில்லனாகத் தான் தோன்றுவோம். அப்புறம்தான்
புரியும்.பேரறப் பாட்டையின் நடுவே தனி்அறம் காட்டி நியாயப்படுத்த முடியாது.
அதன் அற்றம் தான் அவன் மட்டும் செய்யவில்லையா வாதம். *

*கலியில் உலகில் பொது அறம் குறைவாகப் பின்பற்றப்படுவதால் தனி மனித அறம்
போற்றப் படுகிறது. பல பிரிவினை வாதங்களும் வன்முறைக்குப்  பதில் வன்முறை
செயல்களும் ஏதோ பெரிய ஹீரோயிஸமாக அசகாய சூரத்தனமாகத்  தோன்றுகின்றன. சரியாக
சாலை விதி பின்பற்றுபவன் முட்டாள். அதி சாமர்த்தியமாய் முந்துபவன் கெட்டி.
இந்த ஒரு விவாதத்தில் மிகவும் சமீப காலமாக நிந்திக்கப்படும் ஒரு மஹான் காந்தி
தான். அவர் தன் வீட்டுக்கு நியாயம் செய்யவில்லை. ஒரு சாராருக்கு அநீதி
இழைத்தார் என்று எல்லாம் அவர் மேல் அவதூறுகள். ஆனால் அவர் மட்டும் பேரறம் என்ற
பாட்டை எடுக்காதிருந்தால் நாம் எப்போதோ பல துண்டாகி இருப்போம் என்பது என்
தாழ்மையான கருத்து. அவரின் ஆதர்சக் கடவுள் இராமன். அதனால் இராமனைப் போலே
அவரும் பல பழிச்சொல் கேட்கிறார் என்று தோன்றும். அவருக்கு ஒரு குறையும் இல்லை.
நமக்குத்தான் மஹான்களின் பஞ்சம் வந்து விட்டது. *

*இந்த தனி மனித பொது அற இக்கட்டு வாழ்வின் ஒவ்வொரு தளத்திலும் உண்டு. திடீரென
நம் ஊடகங்களில் காணும் போலி அறச்சீற்றம் சிந்தனையைத் தூண்டியது. இரண்டையும்
வசதிக்கேற்ப கையிலெடுத்து ஆடுவார்கள் சுயநலமிகள்.  சிந்தித்துப் பாருங்கள்.
நாள் இனியது. *

*இந்திரா ப்ரியதர்ஷிணி *
************************************************************

*சித்தானந்தம் *

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZor5qTz%3DiZJTf5%3D6voT0BSGm6VqF04j9xs-iJE7FcvNR6w%40mail.gmail.com.

Reply via email to