aishwaryam in sanskrit revealed all the write ups in your article KR IRS
26125

On Sun, 26 Jan 2025 at 17:45, Rama <[email protected]> wrote:

> *ஐஸ்வர்யம் என்றால் பணக் கட்டுகளோ லாக்கரில் இருக்கும் தங்கமோ அல்ல*
>
> வீட்டு வாசலில் பெண் பிள்ளையின் கொலுசு ஒலி *ஐஸ்வர்யம்* !
>
> வீட்டிற்கு வந்தவுடன் சிரிப்போடு எதிரில் வரும் மனைவி *ஐஸ்வர்யம்* !
>
> எவ்வளவு வளர்ந்தாலும் அப்பா திட்டும் திட்டு *ஐஸ்வர்யம்* !
>
> அம்மா கையால் உணவு *ஐஸ்வர்யம்* !
>
> மனைவி பார்க்கும் ஓரக்  கண் பார்வை *ஐஸ்வர்யம்* !
>
> பசுமையான மரங்கள் பயிர் நிலங்கள் *ஐஸ்வர்யம்* !
>
> இளஞ்சூடு சூரியன் *ஐஸ்வர்யம்* !
>
> பவுர்ணமி தினத்தில் நிலவு  *ஐஸ்வர்யம்* !
>
> உலகில் நம்மை தழுவிக்கொண்டிருக்கும்  இந்த பஞ்ச பூதங்கள் *ஐஸ்வர்யம்* !
>
> பால் வடியும் குழந்தையின் சிரிப்பு *ஐஸ்வர்யம்* !
>
> இயற்கை அழகு *ஐஸ்வர்யம்* !
>
> உதடுகளால் சிரிக்கும் உண்மையான சிரிப்பு *ஐஸ்வர்யம்* !
>
> அவசரத்தில் உதவும் நண்பன் *ஐஸ்வர்யம்* !
>
> புத்தியுள்ள குழந்தைகள் *ஐஸ்வர்யம்* !
>
> குழந்தைகள் படிக்கும் படிப்பு *ஐஸ்வர்யம்* !
>
> கடவுள் கொடுத்த உடல் ஆரோக்கியம் *ஐஸ்வர்யம்* !
>
> ஒருவருக்காவது உதவி செய்யும் மனசு *ஐஸ்வர்யம்* !
>
> ஐஸ்வர்யம் என்றால் கையால் எண்ணும் பணக்கட்டு அல்ல !
>
> கண்ணால் பார்க்கும் உலகம் *ஐஸ்வர்யம்* !
>
> மனசு அடையும் சந்தோஷம் *ஐஸ்வர்யம்*...!
>
> *நம்மை சுற்றி  நல்ல உண்மையான நண்பர்கள் இருந்தால் ஐஸ்வர்யம்...*
>
> My list of *Aishwaryams* :-
>
> எத்தனை வயது ஆனாலும் உரிமையுடன் போடா வாடா எனப்பேசும் பால்ய நண்பர்கள்
> *ஐஸ்வர்யம்*...!!!
>
> கணவன் மனதில் ஒரு பொருளை  நினைக்கும் போதே (கேட்காமல்) கொண்டு வரும் அன்பான
> மனைவி *ஐஸ்வர்யம்*...!!!
>
> ஆயுள் இறுதி வரையிலும் சின்ன வயதில் உடன் பிறப்புகளுக்கு செய்த நல்லவைகளை
> அவர்கள் மறக்காமல் மதிப்பது *ஐஸ்வர்யம்*...!!!
>
> வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்ந்து இருந்தாலும், வாழ்க்கை
> இறுதிக்கட்டத்தில் சொந்தமாக ஒரு பாதுகாப்பு இருப்பது *ஐஸ்வர்யம்*...!!!
>
> பெற்ற பிள்ளைகளை பாசமுடன் வளர்ப்பதும், நல்ல கல்வி அளிப்பதும், பின் பணியில்
> அமர்வதும், அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பதும் *ஐஸ்வர்யம்* !
>
>     பெற்றோர் எவ்வளவு செல்லமாகவும், பாசமாகவும்  பிள்ளைகளை வளர்த்தார்களோ, அதை
> விட பாசமாக தன் பெற்றோரை அவர்களின் வயோதிக வயதில் பிள்ளைகள் பேணி காப்பது உலக
> லேயே மிக பெரிய                                    *ஜஸ்வர்யம்*
>
>
>                                               பேரப்பிள்ளைகள் பெறுவதும்,
> அவர்கள் தாத்தா-பாட்டியுடன் விளையாடி வளர்வதும் *ஐஸ்வர்யம்* !
>
> நோயற்ற வாழ்வும், இறுதிவரை யாருக்கும் சிரமம் கொடுக்காமல், வாழ்க்கைப் பயணம்
> முடிவதும் *ஐஸ்வர்யம்* !                                       வாழ்க
> வளமுடன்....
> Cheers
> Rama
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZorVyarZeUk70t1Pi0oZn4QEiFc3Mo3iPCRuwG%3DYhCLoSw%40mail.gmail.com.

Reply via email to