பல வருடங்களுக்கு முன்பு இந்திரா அவர்களிடம்  மோகமுள் பற்றி எழுதியதாக ஞாபகம்
அப்பொழுது அவர்கள் அந்த நாவலை படிக்கவில்லை என்றார்கள் அப்புறம் படித்தார்
போல் இருக்கிறது.
இன்றும் யமுனா, பாபு

On Thu, Oct 17, 2024, 10:13 Rajaram Krishnamurthy <[email protected]>
wrote:

> 1
>
> மோகத்தைக் கொன்றுவிடு,
> அல்லாலென்தன் மூச்சை நிறுத்திவிடு;
> தேகத்தைச் சாய்த்துவிடு,
> அல்லாலதில் சிந்தனை மாய்த்து விடு யோகத் திருத்திவிடு
> அல்லாலென்தன் ஊனைச் சிதைத்துவிடு;
>
> ஏகத் திருந்துலகம் இங்குள்ளன
> யாவையும் செய்பவளே!
> பந்தத்தை நீக்கிவிடு அல்லாலுயிர்ப்
> பாரத்தைப் போக்கிவிடு;
>
> சிந்தை தெளிவாக்கு அல்லாலிதைச்
> செத்த உடலாக்கு; இந்தப் பதர்களையே
> நெல்லாமென எண்ணி இருப்பேனோ?
>
> எந்தப் பொருளிலுமே உள்ளே
> நின்று இயங்கி யிருப்பவளே.
> உள்ளம் குளிராதோ?
> பொய்யாணவ ஊனம் ஒழியாதோ?
>
> கள்ளம் உருகாதோ? அம்மா!
> பக்திக் கண்ணீர் பெருகாதோ?
> வெள்ளைக் கருணையிலே
>
> இந்நாய் சிறு வேட்கை தவிராதோ?
> விள்ளற் கரியவளே
> அனைத்திலும் மேவி இருப்பவளே!
>
>
> மோக முள் ஒரு உயிர்ப்போடு இன்றும் விளங்கும் காவியம். மோகம் பாரதியையே நிலை
> தடுமாற வைத்தது  எனில் சாதாரண மக்கள் எவ்வாறு? தி ஜானகிராமன் எனக்கு நன்கு
> தெரிந்த மைலாப்பூவாசி என் நண்பன் சாகேதராமன் தந்தை . டெல்லி சென்றவர். என்னை
> ஆல் இந்தியா ரேடியோ செய்தி  வாசிப்பாளர் வேலை தேடி தந்தவர்; உடனே என் ஆல்
> இந்தியா சேவை ,ரேடியோ சேவையை ரத்து  செய்தது. அவரைப் பார்த்தாலே எழுதுபவர் எனக்
> கூற இயலாது . மோகமுள் எனது புத்தக சாலையில் இரு மலர் .
> K RAJARAM IRS 171024
>
> ---------- Forwarded message ---------
> From: Chittanandam V R <[email protected]>
> Date: Thu, 17 Oct 2024 at 07:36
> Subject: Fwd: IndhiraPriyatharshini - Thorn
> To:
>
>
>
> *முள்*
>
> *இந்திரா ப்ரியதர்ஷிணி *
>
> *முள் என்றால் குத்துவது குடைவது என்றெல்லாம் சொல்வதைக் காட்டிலும், நம்மை
> இருக்கவிடாமல் செய்வதே முள். எது சதா நம்மை பீடிக்கிறதோ அது முள்.  *
>
> *இந்த வரையறை தோன்றியது ஒரு பெரிய விருக்ஷத்தின் அடியில். அந்த மரத்தின்
> அடியில் ஒரு மேடை இருந்தது. அதில் யாரும் அமரக் கூடாது என்று முள் ஆணிகளை
> அடித்து வைத்திருந்தனர். அந்தக் காலத்தில் வழிப்போக்கர் கிடக்க திண்ணை இருந்த
> வீடுகள் போய் யாரும் அயர்வு தீர அமர்வதைத் தடை செய்வார்களா என்று தோன்றியது.
> மனதை மிகவும் பாதித்தது. கலியுகம்.*
>
> * மோகமுள் என்ற சிறந்த கதை தமிழில் தி.ஜா.ராவுடையது. இதில் மோகம் எனும் முள்
> உறுத்த அதைக் களைந்த பின் இவ்வளவுதான் என்று சொல்லும் கதைப் போக்கு. *
>
> *தைக்கும் முட்களில் சொல்லால் ஆன முள் மிகவும் ஆழமானது. வடு ஏற்படுத்தக்
> கூடியது. முள் என்ற சொல்லிற்கு செடி மரத்தின் கூரிய குச்சி போன்ற பகுதி என்று
> விளக்கம்.  முட்களில் பல வகை உண்டு. தராசு முள், கடிகார முள் எல்லாம் இதை
> ஒட்டியதே. பலா முள், முள்ளம் பன்றி முள், அன்னாசி முள், ரோசா முள் என
> இனிப்பும் குத்தும் சேர்ந்தே வாழ்வில் இருக்கின்றன. புறாவின் ஆண் குறி
> முள்தான். அகராதி விளக்கம்.  நெருஞ்சி முள் ஒரு மாதிரி பச்சையாய் பூவாய்த்
> தோன்றும் முள். மிகவும் கவர்ச்சியான பலவும் இப்படித்தான். *
>
> *முள் ஒரு இயல்பான சௌகரியம் இன்மையைக் குறிக்கும். அரச பதவி முள் கிரீடம்.
> இதன் நேரெதிர் சிறகு. லகுவான சுதந்திரம் காட்டும் குறியீடு. கவலை கூட
> முள்தான். குற்றம் முள்தான். துன்ப நினைவு கூட. நெருடும் எதுவும் முள்தான்.
> "நெறியைப் படைத்தான் நெருஞ்சில் படைத்தான்" திருமந்திரம். முள்ளை எடுத்துக்
> களைந்தாலும் அற்ப சொற்ப நேரம் அதன் நினைவூட்டல் இருக்கும்.*
>
> *முட்கள் பாதையில் நிரம்ப இருப்பதால் மலர் தூவ முற்படுதல் நல்லது. சொற்களும்
> செய்கைகளும் சிறகுகள் போல இதமாக இருக்க இறை அருள்க. *
>
> *-- இந்திரா ப்ரியதர்ஷிணி*
>
> ******************************
> *சித்தானந்தம் *
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "Thatha_Patty" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to [email protected].
> To view this discussion on the web visit
> https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoo_mPQ9TRraBfm_%3D0omCP79KELCABuKEXz8_zTP_CoSow%40mail.gmail.com
> <https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoo_mPQ9TRraBfm_%3D0omCP79KELCABuKEXz8_zTP_CoSow%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer>
> .
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJiWWoJB7_ogxE7Dp%3DB5gre_gukP6A0yDqgaoRTnbvXm%2BwvbXw%40mail.gmail.com.

Reply via email to