1

மோகத்தைக் கொன்றுவிடு,
அல்லாலென்தன் மூச்சை நிறுத்திவிடு;
தேகத்தைச் சாய்த்துவிடு,
அல்லாலதில் சிந்தனை மாய்த்து விடு யோகத் திருத்திவிடு
அல்லாலென்தன் ஊனைச் சிதைத்துவிடு;

ஏகத் திருந்துலகம் இங்குள்ளன
யாவையும் செய்பவளே!
பந்தத்தை நீக்கிவிடு அல்லாலுயிர்ப்
பாரத்தைப் போக்கிவிடு;

சிந்தை தெளிவாக்கு அல்லாலிதைச்
செத்த உடலாக்கு; இந்தப் பதர்களையே
நெல்லாமென எண்ணி இருப்பேனோ?

எந்தப் பொருளிலுமே உள்ளே
நின்று இயங்கி யிருப்பவளே.
உள்ளம் குளிராதோ?
பொய்யாணவ ஊனம் ஒழியாதோ?

கள்ளம் உருகாதோ? அம்மா!
பக்திக் கண்ணீர் பெருகாதோ?
வெள்ளைக் கருணையிலே

இந்நாய் சிறு வேட்கை தவிராதோ?
விள்ளற் கரியவளே
அனைத்திலும் மேவி இருப்பவளே!


மோக முள் ஒரு உயிர்ப்போடு இன்றும் விளங்கும் காவியம். மோகம் பாரதியையே நிலை
தடுமாற வைத்தது  எனில் சாதாரண மக்கள் எவ்வாறு? தி ஜானகிராமன் எனக்கு நன்கு
தெரிந்த மைலாப்பூவாசி என் நண்பன் சாகேதராமன் தந்தை . டெல்லி சென்றவர். என்னை
ஆல் இந்தியா ரேடியோ செய்தி  வாசிப்பாளர் வேலை தேடி தந்தவர்; உடனே என் ஆல்
இந்தியா சேவை ,ரேடியோ சேவையை ரத்து  செய்தது. அவரைப் பார்த்தாலே எழுதுபவர் எனக்
கூற இயலாது . மோகமுள் எனது புத்தக சாலையில் இரு மலர் .
K RAJARAM IRS 171024

---------- Forwarded message ---------
From: Chittanandam V R <[email protected]>
Date: Thu, 17 Oct 2024 at 07:36
Subject: Fwd: IndhiraPriyatharshini - Thorn
To:



*முள்*

*இந்திரா ப்ரியதர்ஷிணி *

*முள் என்றால் குத்துவது குடைவது என்றெல்லாம் சொல்வதைக் காட்டிலும், நம்மை
இருக்கவிடாமல் செய்வதே முள். எது சதா நம்மை பீடிக்கிறதோ அது முள்.  *

*இந்த வரையறை தோன்றியது ஒரு பெரிய விருக்ஷத்தின் அடியில். அந்த மரத்தின்
அடியில் ஒரு மேடை இருந்தது. அதில் யாரும் அமரக் கூடாது என்று முள் ஆணிகளை
அடித்து வைத்திருந்தனர். அந்தக் காலத்தில் வழிப்போக்கர் கிடக்க திண்ணை இருந்த
வீடுகள் போய் யாரும் அயர்வு தீர அமர்வதைத் தடை செய்வார்களா என்று தோன்றியது.
மனதை மிகவும் பாதித்தது. கலியுகம்.*

* மோகமுள் என்ற சிறந்த கதை தமிழில் தி.ஜா.ராவுடையது. இதில் மோகம் எனும் முள்
உறுத்த அதைக் களைந்த பின் இவ்வளவுதான் என்று சொல்லும் கதைப் போக்கு. *

*தைக்கும் முட்களில் சொல்லால் ஆன முள் மிகவும் ஆழமானது. வடு ஏற்படுத்தக்
கூடியது. முள் என்ற சொல்லிற்கு செடி மரத்தின் கூரிய குச்சி போன்ற பகுதி என்று
விளக்கம்.  முட்களில் பல வகை உண்டு. தராசு முள், கடிகார முள் எல்லாம் இதை
ஒட்டியதே. பலா முள், முள்ளம் பன்றி முள், அன்னாசி முள், ரோசா முள் என
இனிப்பும் குத்தும் சேர்ந்தே வாழ்வில் இருக்கின்றன. புறாவின் ஆண் குறி
முள்தான். அகராதி விளக்கம்.  நெருஞ்சி முள் ஒரு மாதிரி பச்சையாய் பூவாய்த்
தோன்றும் முள். மிகவும் கவர்ச்சியான பலவும் இப்படித்தான். *

*முள் ஒரு இயல்பான சௌகரியம் இன்மையைக் குறிக்கும். அரச பதவி முள் கிரீடம்.
இதன் நேரெதிர் சிறகு. லகுவான சுதந்திரம் காட்டும் குறியீடு. கவலை கூட
முள்தான். குற்றம் முள்தான். துன்ப நினைவு கூட. நெருடும் எதுவும் முள்தான்.
"நெறியைப் படைத்தான் நெருஞ்சில் படைத்தான்" திருமந்திரம். முள்ளை எடுத்துக்
களைந்தாலும் அற்ப சொற்ப நேரம் அதன் நினைவூட்டல் இருக்கும்.*

*முட்கள் பாதையில் நிரம்ப இருப்பதால் மலர் தூவ முற்படுதல் நல்லது. சொற்களும்
செய்கைகளும் சிறகுகள் போல இதமாக இருக்க இறை அருள்க. *

*-- இந்திரா ப்ரியதர்ஷிணி*

******************************
*சித்தானந்தம் *

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoo_mPQ9TRraBfm_%3D0omCP79KELCABuKEXz8_zTP_CoSow%40mail.gmail.com.

Reply via email to