pEOPLE 80% ARE ONLY ENAMOURED BY SEXUAL AND LOW GRADE FILMS AND ATTRACTIVE
DYING ON THAT DAY FLOWERS AND STORIES AND NOVELS. If people did not like
Ponniyin selvan,  Yavana Rani or jaya kanthan and jumped to Sujatha who
wrote arts then copied ideas stories , like staircase pictures in the
middle, with letters avan padiyeri-ponan. ;then it is the low standard ,
attracting people with "stree" dances and Ms Shankar in Tamil films apart
from a lot of exposure of the women.  Varieties are division of the society
but good things cannot be set aBLAZE. KR IRS 12 924
---------- Forwarded message ---------
From: Chittanandam V R <[email protected]>
Date: Thu, 12 Sept 2024 at 05:53
Subject: Fwd: That is Sujatha
To:




*அதுதான் சுஜாதா!!*
*(நன்றி: அனுராதா சேகர் - மங்கையர் மலர் - ஏப்ரல் 2008)*


*"சத்தியப் பாதை", 'மாடப்புறாக்கள்" என்றெல்லாம் சலிப்பேற்றும் தலைப்புகள்
வந்து கொண்டிருந்த நேரத்தில், "பத்து செகண்ட் முத்தம்", "நிர்வாண நகரம்".
"அனிதா இளம் மனைவி" என இளமை பொங்கும் தலைப்புகள் வந்தால் படிக்கவே பரபர
என்றிருக்காதோ !!*

*கதையின் ஓட்டம்... அது ரோலர்கோஸ்டரில் ஏறி அமர்ந்த மாதிரி...... **மேம்போக்கான
கிண்டலும், இன்டெலக்சுவல் கதாசிரியனின் உயர் ஸ்தானமும் தெளிவாகவே தெரியும்.
நாவலோ, சயன்ஸ் ஃபிக்ஷன் கட்டுரையோ... எழுத்தும் நடையும் தீக்குச்சி உரசியது
போல பற்றிக் கொள்ளும். கதையின் முடிவு அய்யோ" என்று பதற வைக்கும். அல்லது ஹி
என்று மலர வைக்கும் நினைப்பு என்னவோ நிச்சயம்.*

*சுஜாதா, ஒரு மல்டி மீடியா ஐகன்!! ஊடகத்தின் அத்தனை சாத்தியங்களையும் நலமாக
தொட்டவர். வசீகரிக்கும் அந்த இளமையும் புதுமையும் சொல்லிவிடும். இது சுஜாதா
செய்தது என்று!*

*பத்திரிகை விற்பனை கொஞ்சம் டல்லடிக்கும் போதெல்லாம் "சுஜாதா எழுதினால் ஏறும்
ஸார் !!" என்று சர்க்குலேஷன் பிரிவில் சொல்வார்கள்.*

*அவர் தொடர்கதைதான் எழுதணும் என்றில்லை. அவரைப் பற்றி ஏதாவது ஐடெக்ஸ் மை டப்பா
சைஸில் துணுக்கு வந்தாலும் போதும். **சுஜாதா வீட்டுச் சலவைக் கணக்கு என்றுகூட
ஒரு பத்திரிகை வெளியிட்டது. அதில் இருந்த "ரத்தக்கறை படித்த கர்சீப்-1" என்ற
வரியே வாசகர்களுக்கு க்ரைம் கதைகள் மூடைக் கிளப்பிவிடும். **சுஜாதா வீட்டில்
நாய் வளர்த்தால் நியூஸ் ! திருமதி சுஜாதா ஜப்பானிய மொழி கற்றுக்கொண்டால்
நியூஸ்!!*

*ஏழ் கடல்களைத் தாண்டிய வாசகர் வட்டம் கொண்டவர் அவர்! ஆனால், அந்த கர்வம்
துளிக்கூட இல்லாத எளிமையான மனிதர்.*
*"பிக் பேங் (Big Bang) தியரியும் எழுதறீங்க....வாரம் ஒரு பாசுரமும்
எழுதறீங்க.....நீங்க விஞ்ஞானியா? வேதாந்தியா??" என்று கேட்டேன் ஒருமுறை.
**"அதுவும்தான்,
இதுவும்தான்" யோசிக்காமல் சட்டென்று பதில் வந்தது.*

*'பெண் இயந்திரம்' என்றொரு தொடர்கதை. அதன் முதல் அத்தியாயத்தை என்னுடைய மிகச்
சிறிய வயதில் படித்தபோது ரொம்பவே லஜ்ஜையாக இருந்தது. ஆனால், அந்தக் கதை,
தொழிற்சாலை ஒன்றில் ஷிஃப்ட் முறையில் வேலைக்குப் போகும் ஒரு இளம் பெண்ணின்
உடல், மனம், அலுவலகப் பிரச்சினைகளைச் சொல்லும் கதை.....ஏராளமான பெண்கள்
இன்றைக்கும் அனுபவித்துக் கொண்டிருப்பது. **அவர் எப்படி தன்னை ஒரு வர்க்கிங்
வுமனாக உணர்ந்தார்? அந்த வலியும், வேதனையும் அவருக்கு எப்படித் தெரிந்தது?*

*அதுதான் சுஜாதா*
************************************************
*சித்தானந்தம் *

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoo-x2y0P0VU1Uev1Yjjisa79-uVp4AwtG-qvHWxzb%3D0LQ%40mail.gmail.com.

Reply via email to