The Tamil word "Gujili" can be translated to "mischievous" or "naughty" in
English. It is often used to describe someone who engages in playful or
light-hearted mischief. The hindi word खुजली (Khujali) is colloquially used
as ”Gujili” in tamil and for the same meaning as “Itching” (அரிப்பு).(KR
This is close since people who has itch writes). There is a street named
Gujili street in Tiruchy Town. Gujili is a group of Telugu brahmins.
Music:   https://youtu.be/a_JpksN6_vk       KR IRS 5424

---------- Forwarded message ---------
From: Chittanandam V R <[email protected]>
Date: Thu, 4 Apr 2024 at 17:25
Subject: Fwd: Sujatha - Gujili
To:



குஜிலி என்கிற வார்த்தை சென்னைக்கே உரித்தானது. கந்தசாமி கோயில் அருகில், மாலை
வேளைகளில் இயங்கிய மலிவு விலைக் கடைத்தெருவைக் குறிக்கும் இந்த வார்த்தை,
குஜராத்திகள் அதிகம் வாழ்ந்த அந்தப் பகுதியினால் இப்பெயர் பெற்றிருக்கலாம்
என்று சொல்கிறார்கள்.

இதைச் சார்ந்து பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகளில் செய்தித்தாள்கள்,
ரேடியோ போன்ற ஊடக வசதி இல்லாத காலத்தில் தமிழ் இலக்கியம் தன்னைச் செய்யுள்
வடிவத்தின் பிடியிலிருந்து விடுவித்துகொள்ளத் திணறிய காலகட்டத்தில் தோன்றிய
பாடல்கள் முச்சந்தி இலக்கியம், குஜிலி இலக்கியம் என்ற பெயரில் அறியப்பட்டன.
இதை ஆராய்ச்சி செய்து, டாக்டர் ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்கள் எழுதியிருக்கும்
புத்தகத்தை நண்பர் அதியமான் கொண்டுவந்து கொடுத்தார் (காலச்சுவடு பதிப்பகம்,
விலை 'உருபா' 140).

செய்யுளின் கிடுக்கிப்பிடியிலிருந்து விடுபடத் தவித்திருக்கிறது தமிழ்
இலக்கியம். உரைநடைக்கான தேவை ஏற்படும் வரை எல்லா செய்திகளையும் வாய்மொழிப்
பரவலாகத் தருவதற்கு பாடல் வடிவத்தில் பல்லவி, அனுபல்லவி வைத்து வழங்கவேண்டும்.
அதுதான் அங்கீகார வடிவமாக இருந்திருக்கிறது.

உதாரணமாக, மலையாள தேச மாப்பிள்ளைமார் ஆயிரம் பேர் மரணம் அடைந்ததைக்கூட
'கள்ளிக்கோட்டை கலகச் சிந்து' என்ற பா வடிவில் ராகம் நாதநாமகக்ரியா, தாளம் ஆதி
என்றுதான் அறிவித்து இருக்கிறார்கள்.

இவ்வகையில் நாட்டு நடப்புகளை எல்லாம் பாட்டு ரூபத்தில் கொடுத்த
நூற்றுக்கணக்கான பாடல்களைத் தொகுத்துத் தந்திருக்கிறார் ஆ.இரா.வே. குதிரைப்
பந்தய சிந்து என்னும் கிண்டி ரேஸ் பாட்டில், விநாயகர் துதி பல்லவி சரணங்களுடன்
'ஆணும் பெண்ணும் வருவார், அங்குமிங்கும் அலைவார், தோணும் மைதானமெங்கும்
சுற்றிச் சுற்றிக் கலைவார்' என்று எழுதிய சிந்துப் பாடகர் இன்றைய
நிருபர்களுக்கு எந்தவிதத்திலும் குறைந்தவர் இல்லை.  அந்த நாட்களின் குறைபட்ட
கவிஞர்களின் தளை தட்டிய வெண்பாக்களையும் சிந்துக்களையும் விசித்திரமான
சித்திரங்களுடன் கொடுத்து, மறந்துபோன ஒரு இடைக்காலத்தை
நினைவுபடுத்தியிருக்கிறார் ஆசிரியர்.

இம்மாதிரியான ஆராய்ச்சிகள் பல இந்தப் புத்தகத்தில் இருந்து தூண்டப்படலாம்
என்று தோன்றுகிறது. உதாரணமாக, சினிமாப் பாட்டுப் புத்தகங்களின் கதைச்
சுருக்கங்களை யாராவது ஆராயலாம். நடனமாதர்கள் பாடுவதற்காக எழுதப்பட்ட பதங்களை
சிலர் ஆராய்ச்சி செய்யலாம். சடுகுடு ஆடும்போது மூச்சு பிடிக்கச் சொல்லப்படும்
வாக்கியங்களை யாராவது திரட்டலாம். (ஸ்ரீரங்கத்தில் "நாந்தாண்டாங் கொப்பன்....
நல்ல முத்துப் பேரன்... செத்தவனுக்குப் பாடை கட்ட வந்தேண்டா... வந்தேண்டா...")
இப்படிப் பல உண்டு.

*- சுஜாதா*

***********************

சித்தானந்தம்

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoqRtQi63QaOMQ6HY1z9OoMp8EPS1r5T9X%2Bq8Uanh0FbRg%40mail.gmail.com.

Reply via email to