---------- Forwarded message ---------
From: N Sekar <[email protected]>
Date: Fri, Feb 20, 2026 at 9:33 AM
Subject: Re: Shankar Dayal Sharma and Srinivasa Sastri
To: Chittanandam V R <[email protected]>
Cc: Kerala Iyer <[email protected]>, Narayanaswamy Sekar <
[email protected]>, Suryanarayana Ambadipudi <[email protected]>,
Rangarajan T.N.C. <[email protected]>, Rama (Iyer 123 Group) <
[email protected]>, Mathangi K. Kumar <[email protected]>, Mani
APS <[email protected]>, Srinivasan Sridharan <[email protected]>


Thanks.

There is saying  " Respect must be earned and Not asked for".

Those teachers earned their respect, did not ask for it.

Of course, a grateful person always respects, not for show but out of
conviction; and that includes respect for parents also.

My Guru used to say " If you develop the attitude of Gratitude you don't
need to go searching for God, He will come to you on His own".

We can only sigh if we recall old days.

N Sekar


On Friday, February 20, 2026 at 05:28:27 AM GMT+4, Chittanandam V R <
[email protected]> wrote:





*ஆசானை எவ்விடத்தும் அப்படியே! *

*நண்பர் அம்ரா பாண்டியன் ஓமன் நாட்டை ஆளும் சுல்தான் நமது முன்னாள் குடியரசுத்
தலைவர் சங்கர் தயாள் சர்மா தனது நாட்டுக்கு வந்த போது அவருக்குக் காரோட்டிச்
சென்ற பணிவைப் பதிவிட்டிருந்தார். **ஒரு நாட்டின் மன்னர் ஆணையிட்டால்
போதுமே! **எதற்காகத்
தானே காரோட்டிச் செல்ல வேண்டும்?*

* நமது சங்கர் தயாள் சர்மா புனே கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிய
காலத்தில் ஓமன் நாட்டை அப்போது ஆண்டு கொண்டிருந்த சுல்தான் அவருடைய மாணவர்! **1970
கால கட்டத்தில் சங்கர் தயாள் சர்மா ஒரு கவிதையை எழுதினார். **திருக்குர்ஆனின்
மகிமையை முஸ்லிம்களுக்கு உணர்த்தும் வகையில் அமைந்த அக் கவிதையின் ஆங்கில
வடிவம்: (சுருக்கமாக)*
*'It was a command for action. *
*You turned it into a book of prayer. *
*It was a book to understand. *
*You read it without understanding.. .. '*
*இப்படித் தொடரும் இக் கவிதை இப்படியொரு கேள்வியுடன் முடிகிறது:*
*'Oh' Muslims! *
*What you have done? "*
*இவருக்குத்தான் காரோட்டினார் சுல்தான்! *

*அன்றைய தினம் அந்த நாட்டின் மன்னர் மூன்று மரபுகளை சர்மாவுக்காக மீறினார்! *
*1. சுல்தான் தனது நாட்டுக்கு வரும் அயல்நாட்டு விருந்தினர்களை வரவேற்க விமான
நிலையத்துக்கு வருவதில்லை. *
*2. ஏர் இந்தியா விமானம் தரையிறங்கியதும் சுல்தான் படிகளில் ஏறிச் சென்று,
சர்மா அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து அழைத்து வந்தார்! *
*3. சுல்தானாகப்பட்டவர் யாருக்காகவும் காரை ஓட்டிச் செல்ல மாட்டார்! *
*இதையும் மீறினார் சுல்தான் என்றால்- அவர் **இந்திய நாட்டின் ஐனாதிபதியாக
வந்ததற்காக அல்ல! **தனக்குப் பாடம் கற்பித்த ஆசான் என்ற மரியாதைக்காக!*

*சரி.. இப்போது நமது நாட்டில் நடந்த ஒரு சம்பவத்தைப் பார்ப்போம். *

* 'உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் *
*பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே'*
*என்று ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் இயற்றிய புறநானூற்றுப் பாடலின் தொடக்க
வரிகள் கூறும்!*

*அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தவர் ரைட் ஹானரபிள் ஸ்ரீ நிவாச
சாஸ்திரி (1935 முதல் 1940 வரை) ஆங்கிலத்தில் அவருடைய புலமையைக் கண்டு
வெள்ளைக்காரர்களே வியப்பார்களாம்! இது போக அவருடைய பெருமைகள் நிறைய உண்டு. **ஒன்றை
மட்டும் இங்கே தருகிறேன்:*
*( பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா 1936 ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்போது
அங்கு மாணவராக இருந்த பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தம் அவர்கள் அன்று நடந்த
நிகழ்ச்சியை விவரிக்கிறார்- முழுமையாகப் படியுங்கள்)*

*"..... அன்றைய சென்னை மாகாண ஆளுநராக இருந்த ஸர். ஆர்ச்சிபால்ட் நை
பட்டமளிப்பு விழாவுக்கு வருவதாக இருந்தது. மாணவர்களாகிய நாங்கள் மாடியின் மேல்
ஏறிக் கொண்டு கவர்னர் வருவதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். புரவலர்
(Chancellor) ராஜா சர் அண்ணாமலை செட்டியார் சாலையில் நின்றுகொண்டு கவர்னர்
வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். நியாயமாகத் துணைவேந்தரும் அவருடன்
நின்று கொண்டிருந்திருக்க வேண்டும். ஆனால், துணைவேந்தரோ, சாலையின் வடகோடியில்
நின்றுகொண்டு அங்கு வரும் வண்டிகளை ' இங்கே நிறுத்து; அங்கே நிறுத்தாதே' என்று
போக்குவரத்துக் காவல்துறைப் பணியைச் செய்து கொண்டிருந்தார். *

* ராஜா சர் அவர்கள் கூப்பிடவும் முடியாமல், 'கவர்னர் வருகின்ற நேரத்தில் எங்கோ
போய் நிற்கிறாரே' என்ற ஆதங்கத்துடன் சாலையைத் திரும்பிப் பார்ப்பதும்
துணைவேந்தரைப் பார்ப்பதுமாகத் தவித்துக் கொண்டிருந்தார். **ஒரு வழியாகக்
கவர்னர் வண்டி வந்து நின்றது. புரவலர் ராஜா சர் வண்டிக் கதவைத் திறக்க,
கவர்னர் கீழே இறங்கினார். மிக பயபக்தியுடன் புரவலர் சற்று எட்டி நின்று
கொண்டிருந்தார். ஆனால், துணைவேந்தர் வந்தபாடில்லை. கவர்னர் சாலையில்
நின்றுகொண்டிருந்தார்.*
* இரண்டு மூன்று நிமிடங்கள் கழித்து துணைவேந்தர் சாவதானமாக நடந்து வந்தார்.
கவர்னர் மிக்க பணிவுடன் வளைந்து கொடுத்து, துணைவேந்தரை வணங்கினார்.
துணைவேந்தர், வளைந்து வணங்கிய கவர்னரின் முதுகில் படார் என்று ஓர் அடி
கொடுத்து ' இளைஞனே, எவ்வாறு இருக்கிறாய்?' என்று வினவினார். புரவலர் முதல்
யாவரும் 'Your Excellency' என்று நிமிடத்திற்கு மூன்று முறை போட்டுப் பேசும்
அதே கவர்னரை முதுகில் தட்டி ' Young fellow' என்று துணைவேந்தர் அழைப்பது
மாணவர்களாகிய எங்களுக்கு ஒரு மகிழ்ச்சியை உண்டாக்கிற்று. ...*
*..... மேடையில் மூன்று நாற்காலிகள். ஒரு புறம் புரவலர், மறுபுறம்
துணைவேந்தர், நடுவிலே கவர்னர்....*
*கவர்னர் பேச எழுந்தார் ‌. ஓர் ஆச்சரியம் நிகழ்ந்தது ‌ திடீரென்று ஆறடி
உயரமிருந்த ஸர் ஆர்ச்சிபால்ட் நை வளைந்து துணைவேந்தரின் பாதங்களை, ஒரு
பழக்கப்பட்ட இந்தியனைப்போல் தொட்டு வணங்கினார். துணைவேந்தர் வடமொழியில்
பெரியோர்கள் சொல்லும் ஆசீர்வாதத்தை அப்படியே சொன்னார். என்ன வியப்பு! அந்த
ஸ்லோகம் முடிகின்றவரை வெள்ளைக்கார கவர்னர் வளைந்து வணங்கியபடியே நின்றார்.*
*அதன்பிறகு கவர்னர்...*
*" மகாகணம் ஐயா அவர்களே, நான் சிறுவனாக இருக்கும்பொழுது என் தந்தையாரைப்
பார்க்க எங்கள் வீட்டிற்கு வந்திருந்தீர்கள். அப்பொழுது என் தந்தையார்
தங்களிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார். என் வலக் காதைத் திருகிய நீங்கள் '
இளைஞனே, நீ நன்கு படித்து, இந்தியாவில் ஒரு மாகாணக் கவர்னராக வர வேண்டும்'
என்று என்னை ஆசீர்வதித்தீர்கள். உங்களுடைய ஆசீர்வாதம் பொய்யாகாமல், உங்களுடைய
மாகாணத்திற்கே கவர்னராக வந்துவிட்டேன். மறுபடியும் என்னை ஆசீர்வதியுங்கள்' *
*என்று தம் முன்னுரையை முடித்துவிட்டுப் பிறகுதான் ' ராஜா சர் செட்டியார்
அவர்களே, துணைவேந்தர் அவர்களே!' என்று விளித்துப் பட்டமளிப்பு விழாவைத்
தொடங்கினார்..."*
*( அதெல்லாம் ஒரு காலம் என்று பெருமூச்சு விடுகிறீர்களா? மாணவர் மட்டுமல்ல;
ஆசிரியர்களும் தக்காராக விளங்கிய காலமது!)*

*மா.பாரதிமுத்துநாயகம்*
***************************************

*சித்தானந்தம் *
*All*

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81Zf94%2BsL-VTyzXYd_-07R3G%3DriNKNvgq60R2i6qs%3DRkBHA%40mail.gmail.com.

Reply via email to