---------- Forwarded message ---------
From: N Sekar <[email protected]>
Date: Sat, Jan 24, 2026, 12:53 PM
Subject: Fwd - On Parisheshanam
To: Kerala Iyer <[email protected]>, Narayanaswamy Sekar <
[email protected]>, Suryanarayana Ambadipudi <[email protected]>,
Rangarajan T.N.C. <[email protected]>, Chittanandam V. R. <
[email protected]>, Mathangi K. Kumar <[email protected]>,
Mani APS <[email protected]>, Rama (Iyer 123 Group) <[email protected]>,
Srinivasan Sridharan <[email protected]>


🌹 ப்ராணாக்னிஹோத்ரம்- {பரிஷேசனம்}🌹

சாப்பிடுவதற்கு முன்பு பரிஷேசனம் செய்வது என்பது உபநயனம் ஆன பிறகு எல்லோரும்
அனுஷ்டிக்க வேண்டியதாகும். பரிஷேசனம் ஒரு மகத்தான சம்பிரதாயம் ஆகும். நமது
உள்ளத்தை தூய்மைப் படுத்தக்கூடியது. ஆரோக்யத்தையும் நற் சிந்தனையும் தர வல்லது.
இப்போதெல்லாம் இந்த ‘பரிஷேசனமானது’ ஒரு இயந்திரத்தனமாகத்தான் பலரால்
செய்யப்பட்டு வருகின்றது. இதற்கு தரப்பட வேண்டிய முக்கியத்துவம் அனேகமாக
தரப்படுவதில்லை என்பதுதான் யதார்த்தம்.

பலர் பரிஷேசனம் செய்வதே இல்லை அப்படி செய்தாலும் ஜலத்தை எடுத்து இலையை (அல்லது
தட்டை) சும்மாவானும் ஏதோ பிறருக்காக சுற்றவேண்டியது, தொடர்ந்து இரண்டு மூன்று
தடவை பருக்கைகளை எடுத்து வாயில் போட்டுக்கொள்ள வேண்டியது; அவ்வளவுதான் அவர்களை
பொறுத்த வரையில் பரிஷேசனம் முடிந்துவிட்டது.

உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? முன்பெல்லாம் பரிமாறுவதற்காக அன்னம் கொண்டு
வருவதை பார்த்ததுமே நம் பெரியோர்கள் ’இந்த அன்னம் நமது சரீரத்திற்குள் சென்று
நமக்கு நற் சிந்தனையையும் நல்ல ஆரோக்யத்தையும் வழங்கவேண்டும்’ என பய
பக்தியுடன் மனதிற்குள் வேண்டிக் கொள்ளுவார்கள். ஒரு சிலர் சுத்த அன்னத்தை
பார்த்ததும் அன்னத்தை இலையில் வைக்கும் முன் “ நமஸ்தே அன்ன, என்று கைகூப்பி
வணங்கி ‘அஸ்மாகம் நித்யமஸ்து ஏதத்’ என்றும் சொல்லுவர்.

பிறகு பரிஷேசனம் செய்வார்கள்.
இந்த பரிஷேசனத்தை நாம் ஒழுங்காக எப்படி செய்ய வேண்டுமோ அப்படி செய்வோம்; நமது
குழந்தைகளையும் பழக்குவோம்
பரிஷேசனம் எப்படி செய்வது?

ஒரிரு வார்த்தைகளில் விவரிப்பதற்கு முயற்சி செய்கிறேன் இங்கே;


பொதுவாக எல்லா மந்திரங்களும் பரிஷேசன சமயத்தில் மனதில்தான் சொல்ல வேண்டும்.
உறக்க சொல்லுவது பழக்கத்தில் இல்லை.
சாதம் வைக்கும்போது நமது வலது கையால் உட்கலனை தொட்டுக்கொண்டிருக்க வேண்டும்.
அன்னம் வைத்து நெய் விட்டதும் ப்ரணவம் வியாஹ்ருத்தியால் சாப்பாட்டை ஸ்வாகதம்
செய்து காயத்ரி மந்திரத்தால் சுத்தப்படுத்தி
 ‘ஓம் பூர்புவஸ்ஸுவ: என்று பரிசேஷனம் செய்ய வேண்டும்.

காயத்ரி மந்த்ரத்தால் நெய்யுடன் கூடிய அன்னத்தை, புரோஷித்து அபிமந்தரித்து,
அது அம்ரதம் என த்யானிக்க வேண்டும்.

வலது கையில் தீர்த்தம் எடுத்துக் கொண்டு இடது கையால் போஜன
பாத்திரத்தை(இலை/தட்டை)
 பிடித்துக் கொண்டு’தேவஸவித: ப்ரஸுவ,
{ ஷவித்ருதேவனே,எங்களுக்கு அருள் புரிவாய்}
 என அன்னத்திற்கு பரிசேஷனம் செய்ய வேண்டும்.

 இடது கையால் போஜனபாத்திரத்தை விட்டு எடுக்காமல், மறுபடி
“ஸத்யந்வர்த்தேன பரிஷிஞ்சாமி” என்று பகலிலும்,
‘ருதந் த்வா ஸத்யேன பரிஷிஞ்சாமி’ என இரவிலும்
 பரிசேஷனம் செய்ய வேண்டும்.

மந்த்ரத்தின் கருத்து-
ஸத்யம் த்வா= பரமாத்மாவாகிய உன்னை,
 ருதேன= ஜீவாத்மாவின் அன்பெனும் நீரால்
பரிஷிஞ்சாமி= சுற்றி ஈரமாக்குகிறேன்.

 “ருதம் த்வா= ஜீவாத்மாகிய உன்னை
ஸத்யேன= ப்ரமாத்மாவின் அருளான நீரால்
 பரிஷிஞ்சாமி= சுற்றி ஈரமாக்குகிறேன்.

 அன்பின் ஈரத்தால்/அருளால் அனைத்தும் அமுதமாகும் அன்றோ.”

  -ப்ராணாக்னி ஹோத்ரம்-
மந்த்ரம்-
1- ஓம் பூர்புவஸ்ஸுவ:

 2- ஓம் பூர்வஸ்ஸுவ: / த த்ஸவிதுர்-வரேண்யம் :
 பர்கோ தேவஸ்ய தீமஹி / தியோ யோ ந: ப்ரசோதயாத்.

3- தேவ ஸவித: ப்ரஸுவ //

4- ஸத்யம் த்வர்த்தேன பரிஷிஞ்சமி //

 இந்த ப்ராணாக்னி ஹோத்ரம் அல்லது ப்ராணவித்தை எனப்படும்.”இதை காயந்த
கட்டையிடம் சொன்னால் கூட அதில் இலைகள் துளிர்க்கும் என உபநிஷத்துக்குள்
கூறுகின்றன.
 உலர்ந்த கட்டை தளிர்க்கும் என்றால் புத்தியுள்ளவனுக்கு அறிவு செழிக்கும்.

‘ அம்ருதோபஸ்தரண-மஸி -(5)

பிறகு சாப்பிடப்போகும் உணவிற்கு ஆதாரமாகும்படி ‘அம்ருதோபஸ்தரண மஸி’ என்று
மந்திரத்தை சொல்லியப்படி வலது கையில் ஜலம் விட்டு பருக வேண்டும். இந்த செயலை
‘ஆபோசனம்’ என்று சொல்லுவார்கள்.

ப்ராணாஹுதி:(6)

பிராணாய ஸ்வாஹா, அபாணாய ஸ்வாஹா, வ்யானாய ஸ்வாஹா, உதாணாய ஸ்வாஹா, ஸமானாய
ஸ்வாஹா, ப்ரஹ்மனே ஸ்வாஹா’

தொடர்ந்து நெய் இடப்பட்ட அன்னத்தை மூன்று விரல்களால் (கட்டை விரல், நடு விரல்,
பவித்ர விரல்) கொஞ்சம் அன்னத்தை எடுத்து அதற்கான மந்திரங்களை சொல்லியப்படி
’பிராணாய ஸ்வாஹா, அபாணாய ஸ்வாஹா, வ்யானாய ஸ்வாஹா, உதாணாய ஸ்வாஹா, ஸமானாய
ஸ்வாஹா, ப்ரஹ்மனே ஸ்வாஹா’ முதலிய ஆறு ஆஹுதிகளாக வாயில் போட்டுக்கொள்ள
வேண்டும். இதை ப்ராணாஹுதி என்று சொல்லுவார்கள். ப்ராணஹுதிக்கான அன்னத்தை
பற்களால் மென்று சாப்பிடக்கூடாது. அதாவது பல்லால் கடிக்காமல் முழுங்கவேண்டும்.
நமது உடலில் பிராணன், அபாணன், வியாணன், உதானன், ஸமானன் ஆகியவை ஐந்து வாயுக்கள்
ஆகும். உடலில் ஜடராக்னியாக இருந்து நாம் சாப்பிடும் பொருளை ஜீர்ணம்
செய்யப்படுகிறது. அது மட்டும் அல்ல. ஜீர்ணம் ஆன உணவின் சத்தை உடலில்
சேர்ப்பதும், அதன் மூலம் நம் உடல் வலிமை பெறுவதற்கும், தேவையில்லாத
கழிவுப்பொருளை அகற்றுப்படுவதும், இரத்த ஓட்டம் சீராக ஆவதன் மூலம் சரீரத்தில்
வளர்ச்சிக்கும், சம நிலைக்கும் பகவான் உதவுகிறான் என பெரியோர்களின் கருத்து.

பிராணன்,அபானன்,வியானன்,உதானன்,
ஸமானன்; ஆகியவை”; கார்பத்யம்,தக்ஷிணாக்னி,
 ஆஹவநீயம்,ஸப்யம்,ஆவஸ்யம் என்ற ஐந்து அக்னிகளாக பாவிக்கப்படுகின்றன.

பிறகு இலையில் வைத்திருந்த இடது கையை சுத்த ஜலத்தால் அலம்பி மார்பில் வைத்து
‘ப்ரஹ்மணி ம ஆத்மா அம்ருதத்வாய’ என்று பகவானை தியானம் செய்ய வேண்டும். அப்படி
வலிவான இந்த ஜீவனைஅழியாநிலை பெருவதற்காக பரம்பொருளுடன் ஐக்கியப்படுத்துவதே
‘ப்ரஹ்மணி மா ஆத்மா’ என்ற மந்திரத்தின் அர்த்தம்.

ப்ராணன் த்ருப்தியடைந்தால்,தேவலோகத்திற்கும்
சூரியனுக்கும் கீழே உள்ள எல்லாம் திருப்தியடைகிறது.


உத்தராபோசனம்:

சாப்பிட்டு முடிந்ததும் உத்தராபோசனம் செய்ய வேண்டும். அதாவது வலது
உள்ளங்கையில் சிறிது ஜலத்தை வாங்கிக்கொண்டு ‘அம்ருதாபிதான மஸி’ என்று பருகி
மீதி ஜலத்தை தரையில் விட வேண்டும்.
இதுதான் பரிஷேசனம் செய்ய பொதுவான விதி.

மந்த்ரம்-
5- அம்ருதோபஸ்தரண-மஸி

6-பிராணாய ஸ்வாஹா, அபாணாய ஸ்வாஹா, வ்யானாய ஸ்வாஹா, உதாணாய ஸ்வாஹா, ஸமானாய
ஸ்வாஹா, ப்ரஹ்மனே ஸ்வாஹா’

7-ப்ரஹ்மணி ம ஆத்மாsம்ருதத்வாய //

8-அம்ருதாபிதான-மஸி//

இந்த பதிவு ஒரு வழிகாட்டிதான். இதை பார்த்துமாத்திரம் ஒருவர் பரிஷேசனம் செய்ய
முடியுமா என்பது சந்தேகம்தான். தெரியாதவர்கள் வாத்யார் உதவியுடன் நன்கு
கற்றுக்கொள்ளுவோம்.
தொடர்ந்து பரிஷேசனம் செய்து சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுவோம்.

தொகுப்பாசிரியர்-ஆன்மீகம் சந்தானம் மாம்பலம்.

Yahoo Mail: Search, Organize, Conquer
<https://mail.onelink.me/107872968?pid=nativeplacement&c=US_Acquisition_YMktg_315_SearchOrgConquer_EmailSignature&af_sub1=Acquisition&af_sub2=US_YMktg&af_sub3=&af_sub4=100002039&af_sub5=C01_Email_Static_&af_ios_store_cpp=0c38e4b0-a27e-40f9-a211-f4e2de32ab91&af_android_url=https://play.google.com/store/apps/details?id=com.yahoo.mobile.client.android.mail&listing=search_organize_conquer>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81Ze8oOa-EH736ryuKD1pDKPi%3DK1K4DBA7UFWhYps3SF%2BJw%40mail.gmail.com.

Reply via email to