இறை என்பது சற்றே என பொருள் தருவதை விட, "இறைத்தல்" சிதற விடுதல், எனப்பொருளுரைத்தால், நாணம், அரக்கிகளுக்கு உறுத்தது அல்ல எனினும், ராமனை கண்ட சூர்பனகை, நானதைத் தூவினாள் என்றும் கொள்ளலாம். KR IRS 21225
---------- Forwarded message --------- From: Chittanandam V R <[email protected]> Date: Mon, 1 Dec 2025 at 19:09 Subject: Fwd: Andaman Krishnamoorthi - God To: *கறையான் கூரை வீடு* *அந்தமான் கிருஷ்ணமூர்த்தி* *இறைவன் உலகத்தைப் படைத்தானா?* *ஏழ்மையை அவன்தான் படைத்தானா?* *ஏழையைப் படைத்தவன் இறைவன் என்றால்* *இறைவன் என்பவன் எதற்காக?* *பொன்னகை அணிந்த மாளிகைகள்* *புன்னகை மறந்த மண்குடிசை* *பசி வர அங்கே மாத்திரைகள்* *பட்டினியால் இங்கு யாத்திரைகள்* *இருவேறுலகம் இதுவென்றால்* *இறைவன் என்பவன் எதற்காக?* இந்தப் பாடல் யாரோ நாத்திகக் கவிஞர் எழுதியிருப்பார் என்று நீங்கள் நினைத்தால் அது முற்றிலும் தவறு. கண்ணனின் அடிமை கவியரசர் கண்ணதாசன் ஆத்திகராய் இருந்தபோது எழுதிய வரிகள்தான் இவை. கடவுள் நம்பிக்கை என்று வரும்பொழுது அது பலரை பல வகையில் ஆட்கொண்டிருக்கிறது. பரமக்குடியில் ஒரு நாத்திகம் பேசிய குடும்பம். இடதுசாரி சிந்தனை வீட்டில் எப்போதும் இருக்கும். ஏழ்மையான குடும்பம். அப்படிப்பட்ட குடும்பத்து வாரிசினை சமீபத்தில் சந்தித்தேன். பழுத்த சிவப்பழமாக காட்சி தந்தார். எப்படி இப்படி? கேட்டேன். (கேக்க வேறு எந்த கேள்வியும் இல்லையா? – இது அம்மணியின் கேள்வி) நான் கூட்டமாய் இருக்கும் இடத்தில் நின்றேன். என்னை அப்படியே கூட்டம் அழைத்து சென்றிருக்கிறது. அடியார் கூட்டத்தோடு இருப்பதை, மாணிக்கவாசகர் எப்படிச் சொன்னாரோ அது போல் வந்தது பதில். இன்னொரு நண்பரை இதே மேட்டரில் பேட்டி கண்டேன். அவர் மிகத் தெளிவாக பதில் சொன்னார். நான் ஏழையாக இருக்கும் பொழுது இந்தக் கடவுள் என்னைக் கண்டு கொள்ளவில்லை. நான் இப்பொழுது வசதியாக இருக்கும் பொழுது, அவரை நான் ஏன் கண்டுகொள்ள வேண்டும்! (அவர் என்ற மரியாதை மட்டும் நான் சேர்த்தது) ஏன் இப்படி தேவையில்லாத கேள்விகள் எல்லாம் கேட்டு மற்றவர்கள் உயிரை எடுக்க வேண்டும்? என்று வீட்டு அம்மணியும் ஒரு மாதிரி முறைக்கிறார். அது ஒன்றுமில்லை. சமீபத்தில் ஆர்ஆர்கே கிளினிக் போயிருந்தோம். கே என்பது கீர்த்தனா என்று டாக்டரின் முதல் எழுத்தாக இருக்கும் பொழுது ஆர்ஆர் என்றால் என்ன என்று விசாரித்தேன். இது ஒரு தப்பா? மாத்திரை, சைட் எஃபெக்ட் இதைப்பற்றி எல்லாம் ஏதும் கேட்காமல் ஆர்ஆர் என்பதின் விளக்கம் கேட்டது தப்பா படுது. (அது இரு மகன்களின் பெயரின் முதல் எழுத்தாம் – ரொம்ப முக்கியம்.) இவ்வளவு சிக்கலான இறை என்பதின் பொருள், பல இருக்காம். உயரம், தலை, கடவுள், அரசன் (வள்ளுவர் மொழியில்), தலைமை, நடுவுநிலைமை, உயர்ந்தோன், தலைவன், தமையன், கணவன். வீட்டிறப்பு, இறகு, மாமரம். இப்படி பெரிய பட்டியல் போயிட்டே இருக்கு. எங்கே எப்போ எப்படி என்பதை நீங்களே இறை தேடுவது போல் தேடிக் கொள்ளுங்கள். ஒரு சாம்பிளுக்கு அகநானூறு பாடல். தலைவன் புலம்புகிறான். இன்று இவளோடு இன்பப் படுக்கை. நாளை கறையான் மடத்தில் உறக்கம். என் நிலை இப்படி இருக்கிறதே என்று தலைவன் புலம்புகிறான். கரையான் மடம் தான் இறை என்று சொல்கிறது அந்த சங்க காலப் பாடல். போரில் யாரும் தாக்காத அந்தக் கறையான் கூரை (இறை) வீடுதான் இறையாம். கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாசையில் சொல்வதென்றால், 'கூர் முகச் சிதலை வேய்ந்த போர் மடி நல் இறைப் பொதியிலானே?' கம்பரிடம் கேட்டுப் பாக்கலாம். கம்பரே! கம்பரே! இறை என்றால் என்ன? வம்பனே! வம்பனே! இரை என்றால் சற்றே என்ற பொருளும் உண்டு. பாடல் இதோ! *அவ் வயின், அவ் ஆசை தன் அகத்துடைய அன்னாள்,* *செவ்வி முகம் முன்னி, அடி செங்கையின் இறைஞ்சா,* *வெவ்விய நெடுங் கண்-அயில் வீசி, அயல் பாரா,* *நவ்வியின் ஒதுங்கி, இறை நாணி, அயல் நின்றாள்.* அப்போது அந்த இராமன் மீது கொண்ட ஆசையைத் தன் மனத்திற் கொண்ட சூர்ப்பணகை இராமனின் அழகிய முகத்தை நோக்கி அவன் திருவடியைத் தன் சிவந்த கைகளால் வணங்கி கொடிய தனது நீண்ட கண்களாம் வேல்களை இராமன் மீது வீசிப் பின் அவனைப் பாராதது போலப் பார்த்து மான்போல ஒருபுறம் விலகி சிறிதே நாணம் கொண்டு அருகே நின்றாள். (சூர்ப்பணகைப் படலம்ஆரணிய காண்டம்) *அந்தமான் கிருஷ்ணமூர்த்தி* **************************************************** *சித்தானந்தம் * -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZooPXvwAB2gXFVD3-HXbGEJm5YAbcyuXuMXbFcWXzWz3_A%40mail.gmail.com.
