Bg. 10.32

सर्गाणामादिरन्तश्च मध्यं चैवाहमर्जुन ।

अध्यात्मविद्या विद्यानां वाद: प्रवदतामहम् ॥ ३२ ॥

sargāṇām ādir antaś ca

madhyaṁ caivāham arjuna

adhyātma-vidyā vidyānāṁ

vādaḥ pravadatām aham

sargāṇām — of all creations; ādiḥ — the beginning; antaḥ — end; ca — and;
madhyam — middle; ca — also; eva — certainly; aham — I am; arjuna — O
Arjuna; adhyātma-vidyā — spiritual knowledge; vidyānām — of all education;
vādaḥ — the natural conclusion; pravadatām — of arguments; aham — I am.

Of all creations I am the beginning and the end and also the middle, O
Arjuna. Of all sciences I am the spiritual science of the self, and among
logicians I am the conclusive truth.

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்

  சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்

மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்

  மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்

வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து

  போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்

ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே

  ஈதேயெந் தோழி பரிசேலோர் எம்பாவாய்.  1 Manikka vasagar

K Rajaram IRS  301125

---------- Forwarded message ---------
From: Chittanandam V R <[email protected]>
Date: Sun, 30 Nov 2025 at 05:32
Subject: Fwd: Tamilnayagam - வில்லி Baratham (3)
To:





வில்லி பாரதம் (3) - விஸ்வரூபம்

*தமிழ்நாயகம் *

கர்ணன் தன்னுடைய எல்லாப் புண்ணியங்களையும் தாரை வார்த்துக் கொடுத்த பின்,
கர்ணனுக்கு கண்ணன் விஸ்வரூப தரிசனம் தருகிறான். அந்த இடத்தில் சில அற்புதமான
பாடல்கள்.

கர்ணன் வணங்கியவுடன் அவன் கண்கள் களிக்கும்படி, நீர் கொண்ட கரிய மேகம்
வெட்கிப் போகும்படி கரிய நிறம் கொண்ட அவன் ஐந்து ஆயுதங்களை கைகளில் ஏந்தி,
அன்று முதலை வாய் பட்ட கஜேந்திரன் என்ற யானைக்கு எப்படி காட்சி கொடுத்தானோ,
அப்படியே தொண்டிர்நான் தோற்றமும் முடிவும் இல்லாத அவன்

பாடல்

போற்றியகன்னன்கண்டுகண்களிப்பப்புணரிமொண்டெழுந்தகார்
                                         முகிலை,
மாற்றியவடிவும்பஞ்சவாயுதமும் வயங்குகைத்தலங்களுமாகிக்
கூற்றுறழ்கராவின்வாயினின்றழைத்த குஞ்சரராசன்முனன்று,
தோற்றியபடியேதோற்றினான்முடிவுந்தோற்றமுமிலாத
                                   பைந்துளவோன்.

பொருள்:  வணங்கிய  கர்ணன், (இரண்டு சுளி ன் போட்டால் அது கர்ணனைக்
 குறிக்கும்.மூன்று சுளி ண் என்றால் அது கிருஷ்ணனை குறிக்கும்)   கண்டு  கண்கள்
மகிழும்படி கடலில்  மொண்டு எழுந்த  கரிய மேகத்தை விஞ்சிய அழகும்
பஞ்ச  ஆயுதமும்  விளங்குகின்ற கைத் தளங்களும் ஆகி  கூற்றுவனை போல வந்த
முதலையின்  வாயினால் அழைத்த  யானைகளின் அரசன் (கஜேந்திரன்)  முன் அன்று
தோன்றியபடியே
தோன்றினான்,  முடிவும் தோற்றமும் இல்லாத  துளசி மாலையை அணிந்தவன்.

யானை அழைத்த போது வந்தவன் என்றால் என்ன அர்த்தம் ? அதில் என்ன சிறப்பு ?

இறைவன் என்பவனே மனிதர்களின் கற்பனையில் தோன்றிய ஒன்று என்று சொல்பவர்கள் உண்டு.

மனிதர்கள் இந்த மண்ணில் தோன்றும் முன், மனித மொழிகள் தோன்றும் முன்,
விலங்குகள் மட்டுமே இந்த பூமியில் அலைந்து கொண்டிருந்தன.

அப்போது ஒரு யானை துன்பத்தில் அலறியபோது அதை காத்தவன் என்றால் இறைவன் மனித
கற்பனையில் உதித்தவன் அல்ல என்பது கருத்து.

மனிதர்கள் தோன்றும் முன்பே இறைவன் இருந்தான், அவன் உயிர்களின் துயர்
துடைத்தான் என்பது கதையின் பொருள்.

*தமிழ்நாயகம் *
*********************************
*இத்துடன் இக்கட்டுரைகள் முடிவடைகின்றன.*

*சித்தானந்தம்*

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZorpsy%2BGSWfasZp4A9LBJffLSY8wmVQ%2BAshT_E4qXW9_FQ%40mail.gmail.com.

Reply via email to