கம்பன் தந்த கதைச்சுருக்கம்.  வானின் இழிந்து என அவதாரத்தில்  ஆரம்பித்து,
தேவர்களுக்காக ராவணனை வதைத்த வரை , ராமாயணத்தையும், கடவுள் என்பவர் உட்கிடை
 எனவும், நீக்கமற எங்கும், நிறைந்து உள்ளார் என்பதையும், எங்கும் எதிலும்
 நீக்கமற நிறைந்தவன், என கம்பன் கூறி (ராமன் அறியான்)  தந் உலா வெளிப்பாட்டை
ஒரு செய்யுளில் நிறுத்தியதை, ரசிக்காமல் செல்ல முடியுமா ?    K Rajaram IRS
81125

---------- Forwarded message ---------
From: Chittanandam V R <[email protected]>
Date: Fri, 7 Nov 2025 at 20:56
Subject: Fwd: Tamilnayagam - Kamba Ramayanam (1)
To:



*இராமாயணம் - ஊனும் உயிரும் உணர்வும் (1)*

*தமிழ்நாயகம் *



வான் நின்று இழிந்து
    வரம்பு இகந்த மா பூதத்தின் வைப்பு எங்கும்,
ஊனும் உயிரும் உணர்வும் போல்,
    உள்ளும் புறத்தும் உளன் என்ப -
கூனும் சிறிய கோத் தாயும்
    கொடுமை இழைப்ப, கோல் துறந்து,
கானும் கடலும் கடந்து, இமையோர்
    இடுக்கண் தீர்த்த கழல் வேந்தை.
(கடவுள் வாழ்த்துப் பாடல், அயோத்தியா காண்டம்)


இந்த பாடலைப் பற்றி நான் ஏதாவது எழுதினால் அது அந்த பாட்டுக்குச் செய்யும்
அவமரியாதை
என்றே நினைக்கிறேன்.

இப்படியும் கூட கவிதை செய்ய முடியுமா? இராமாயணத்தின் சாரம் இந்த பாடல்.
இறை தத்துவத்தின் சாரம் இந்தப் பாடல்.

இரண்டு நாளாய் இந்தப் பாடலைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்துக்  கொண்டு
இருக்கிறேன்.
எப்படி எழுதுவது என்று தெரியவில்லை. என்ன எழுதுவது என்று தெரியவில்லை.

இந்தப் பாடலை முழுவதும் வாசிக்க  முடிந்தால் நீங்கள் புண்ணியம் செய்தவர்கள்.

இறையை முன்நிறுத்தி நாளை இப்பாடலைக் குறித்து சில கருத்துகள் கூற முயல்கிறேன்.

*தமிழ்நாயகம் *
*******************************
*சித்தானந்தம் *

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoqO9eJaqLvQfiGzoKX_0-oQ4xpMw%3DWF%3DNftZK6wQ42G7g%40mail.gmail.com.

Reply via email to