தமிழ் நாயகம் போன்ற எழுதிய பௌத்தர் முதற்கொண்டு ஈவேரா வரை, அவர்களின்
கூற்று, உண்மையல்ல ,என்பது போன்றே, இயற்கையை சந்தித்து, தடுக்க முடியாத
வகையில் மரணத்தை அடைந்திருக்கிறார்கள். சாரவாக விலிருந்தே ராமாயண காலம் முதல்,
இயற்கையை மீறும் இலை இரத்த உணர்ச்சிகள், தவறைத் திருத்திக் கொள்ள முடியாமல்,
சென்று சேர்ந்தார்கள். தன்னம்பிக்கை என்பது , தான் ஒருவனே, நம்பும் கை அல்ல.
தன்னைத் தந் திறனுடன் செயலாற்ற உதவும் உணர்வே. கர்மா என்பது வேலை செய்தல்
மாத்திரம் அல்ல; கர்மா உழுத நிலத்தில் பிறந்த, பொருட்களையும், தானே
அனுபவிக்கும் சூழ்நிலையாகும். எந்த வினையாற்றலும், மற்றொரு வினையை
புதுப்பிக்கும் என்பதே இயற்கை. எனவே, கர்மா என்பது எதிர்விளைவுகளை
 உண்டாக்கும் என்பது, பௌதிக கூற்று. பருப்பொருள் தி மேட்டர், ஷீக்கமுடியாதது
என்பதும், பௌதிக கூற்று. அங்ஙனம்  இருத்தலால், கர்மா என்பதும், எதிர்
விளைவுகளைத்தான் ஏற்படுத்தும் ஆகவே அவை எங்கு செல்லும்? இங்குதான்.
தெய்வத்தின் குரலில் கூறியுள்ளது போல், ஒரே நேரத்தில் பிறந்த ஒரே இடத்தில்
பிறந்த , வெவேறு அம்மக்களுக்கு பிறந்த, குழந்தைகளின் எதிர்காலம், ஏன் வெவேறு
விதமாக உள்ளது? ஏழையின் செல்வன் முதன்மை செயலாளராகவும், பணக்கார மகன், கீழ்
நிலையிலும் இருக்க, தன்னம்பிக்கை ஒன்றுதான் காரணமா அல்லது, பிற காரணங்கள்
இருக்குமா? சிந்தியுங்கள். ஹிந்து வேதா கலாச்சாரத்தின் அடிப்படை மதிப்பே
கர்மா, அதன் பலன்கள், ஆகவே பலனைப் பெற இன்னொரு பிறவி என, எண்ணங்கள் உண்மையின்
கூற்றாக அல்லவோ வெளிப்படுகிறது? மாற்றாக இல்லை எனக் கூறியவர் நிலை எங்ஙனம்
முடிந்தது என்பது எல்லோருக்கும் தெரியும் அல்லவா? அடக்கம் தான் அமரருள்
உய்க்கும். கி ரா     ஈவா ப     61125
From Buddhists who wrote Tamil Nayagam to E V R , their statement is not
true, just like they have met nature and died in an unstoppable way. From
Saravaga to the Ramayana period, the leaf-blood emotions that violate
nature, unable to correct the mistake, have gone and joined.
Self-confidence is not a hand that believes in itself alone. It is a
feeling that helps one act with one's own ability. Karma is not just doing
work; it is a situation where one experiences things born in the land
plowed by karma. Nature is that any reaction renews another reaction.
Therefore, the fact that karma creates reactions is a physical statement.
The fact that matter is indestructible is also a physical statement. Since
it exists in this way, karma will only cause reactions, so where will they
go? This is where. As the voice of God says, why do children born at the
same time and in the same place, born to different mothers, have different
futures? Is self-confidence the only reason why the rich man of a poor man
is the chief secretary and the rich man is in a lower position, or are
there other reasons? Think about it. The basic value of Hindu Vedic culture
is karma, its fruits, and therefore another birth to get the fruits, is not
the thought revealed as a statement of truth? Doesn't everyone know how the
situation ended when he said there was no alternative? Modesty is the only
way to become immortal. K R  IRS      61125

---------- Forwarded message ---------
From: Chittanandam V R <[email protected]>
Date: Wed, 5 Nov 2025 at 20:58
Subject: Fwd: Bharathiyar - Guru Dharisnam (12)
To:



பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் (12) - நான் புதியன், நான் கடவுள்

*தமிழ்நாயகம்*


கர்மாக் கொள்கை என்று ஒன்று வைத்து இருக்கிறோம். அதன் மூலம், விதி என்ற ஒன்றை
கண்டு பிடித்து இருக்கிறோம். நாம் முன்பு செய்த வினைகளுக்கு ஏற்ப நமக்கு
நல்லதும் தீயதும் இந்தப் பிறவியில் நிகழும் என்று நினைத்துக்
கொண்டிருக்கிறோம்.  அதுதான் நம் விதி என்று ஏற்றுக் கொள்கிறோம்.

 எனவே, நாம் செய்ய வேண்டியது ஒன்றும்  இல்லை. சும்மா இருந்தால் போதும். செய்த
வினைகளுக்கு ஏற்ப ஏதோ ஒன்று நடக்கும். வாழ்க்கையில் முயற்சியின் பங்கு என்று
ஒன்றும் கிடையாது. எல்லாம் விதிப்படித்தான் நடக்கும் என்ற எண்ணம் வந்து
விடுகிறது.

பாரதி சொல்கிறார்:


சென்றவினைப் பயன்கள் எனைத் தீண்ட மாட்டா;
“ஸ்ரீதரன்யன் சிவகுமாரன் யானன்றோ?
நன்று இந்தக் கணம் புதிதாப் பிறந்து விட்டேன்,
நான்புதியன், நான் கடவுள், நலிவு இலாதோன்”
என்றிந்த வுலகின்மிசை வானோர் போலே
இயன்றிடுவார் சித்தரென்பார்; பரம தர்மக்
குன்றின்மிசை ஒரு பாய்ச்சலாகப் பாய்ந்து,
குறிப்பற்றார் கேடற்றார் குலைத லற்றார்.

பொருள்

பழைய வினைகளின் பயன்கள் என்னை தீண்டாது.  நானே ஸ்ரீதரன், நானே சிவ குமாரன்.
நன்றாக இந்த கணத்தில் பிறந்து விட்டேன். நான் புதியன்; நான் கடவுள்; எந்தக்
குறையும்
இல்லாதவன், என்று இந்த உலகில் வானோர் போலே இயங்கிடுவார், சித்தரென்பார்.
தர்மம்
என்ற குன்றின் மேல் ஒரே பாய்ச்சலாகப்  பாய்ந்து குறிப்பு (நோக்கம் ) இல்லாமல்,
கேடு இல்லாமல்,
குலைதல் இல்லாமல் இருப்பார்.

*தமிழ்நாயகம்*
***************************

*தமிழ்நாயகம் அவர்கள் இத்துடன் இக்கட்டுரைத் தொடரை முடித்துக்கொள்கிறார்.*
*ஏன் எனத் தெரியவில்லை. அவர் இதை எழுதியது 2015-ல். பத்து ஆண்டுகளுக்கு *
*முன்னர். அவரைக் கேட்டாலும் அவருக்கு நினைவிலிருக்காது. இந்தப் பாரதி *
*பாடலில் மேலும் ஒரு சிறு பகுதி உள்ளது. அதனைக் கீழே தருகின்றேன்.*

குறியனந்த முடையோராய்க் கோடி செய்தும்
குவலயத்தில் வினைக்கடிமைப் படாதா ராகி
வெறியுடையோன் உமையாளை இடத்தி லேற்றோன்
வேதகுரு பரமசிவன் வித்தை பெற்றுச்
செறிவுடைய பழவினையாம் இருளைச் செற்றுத்
தீயினைப்போல் மண்மீது திரிவார் மேலோர்,
அறிவுடைய சீடா. நீ குறிப்பை நீக்கி
அநந்தமாம் தொழில்செய்தால் அமர னாவாய்.

கேளப்பா!மேற்சொன்ன உண்மை யெல்லாம்
கேடற்ற மதியுடையான் குள்ளச் சாமி
நாளும்பல் காட்டாலும் குறிப்பி னாலும்
நலமுடைய மொழியாலும் விளக்கித் தந்தான்;
தோளைப் பார்த்துக் களித்தல் போலே யன்னான்
துணையடிகள் பார்த்து மனம் களிப்பேன் யானே;
வாளைப்பார்த்து இன்பமுறு மன்னர் போற்றும்
மலர்த்தாளான் மாங்கொட்டைச் சாமி வாழ்க!

*சித்தானந்தம் *


.

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoqEAVGPj05bznsiGN1yyj%3D2VHYo2HGFaWEPoKyWfFomCg%40mail.gmail.com.

Reply via email to