சொர்க்கத்திற்கு நுழைவது இலவசம், ஆனால் நரகத்திற்கு நுழையப் பணம் வேண்டும்...
ஒரு முதியவர் தனது பேரனிடம் : பேரனே! சொர்க்கத்திற்கு நுழைவது இலவசம், ஆனால் நரகத்திற்கு நுழையப் பணம் வேண்டும். பேரன் :அது எப்படித் தாத்தா? முதியவர் :சூதாட்டத்திற்குப் பணம் வேண்டும் மது அருந்தப் பணம் வேண்டும் சிகரெட் புகைக்க பணம் வேண்டும் கூடாத இசை கேட்கப் பணம் வேண்டும் பாவங்களோடு பயணிக்கப் பணம் வேண்டும், ஆனால் மகனே! அன்பு காட்டப் பணம் தேவையில்லை, கடவுளை வணங்கப் பணம் தேவையில்லை, சேவை செய்யப் பணம் தேவையில்லை, விரதம் இருக்கப் பணம் தேவையில்லை, மன்னிப்புக் கோரப் பணம் தேவையில்லை, பார்வையைத் தாழ்த்தப் பணம் தேவையில்லை, நம் உரிமையை நிலைநாட்டப் பணம் தேவையில்லை, இத்தனைக்கும் மேலாக இறைவன் "நாமம்"சொல்ல வேறெதுவும் தேவையில்லை. பேரனே! நீ பணம் கொடுத்து நரகத்தை விரும்புகிறாயா? இலவசமான சொர்க்கத்தை நேசிக்கிறாயா? முதியோரின் அணுகுமுறை எவ்வளவு அழகாக உள்ளது. ஶ்ரீ மஹாவிஷ்ணு இன்ஃபோ -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdvND6B4wxAz9R9qUjkkhHofq7--CEY7TsWecaEqQ_Z2PA%40mail.gmail.com.
