TIRU ARAI
Waist, loins; இடை. [idai.] (நாலாயிர திவ்யப்பிரபந்தம் பெரிய.ாழ்.
[nalayira thivyappirapandam periyazh.] 1, 6, 2.)
Stomach; வயிறு. கன்ற ரைப் பட்ட கயந்தலை மடப்பிடி [vayiru. kanra raip patta
kayanthalai madappidi] (பத்துப்பாட்டு: மலை [pathuppattu: malai] 307).
அல்குல். (பிங்கலகண்டு) [alkul. (pingalagandu)]
Arai (அரை) noun 1. The upper part of the thigh; தொடையின் மேற்பாகம்.
[thodaiyin merpagam.] (பத்துப்பாட்டு: பொருநராற்றுப்படை [pathuppattu:
porunararruppadai] 104, உரை. [urai.])
IN KAMBA RAMAYANAM HERE IT JUST MEANS ‘IDAI” AS “EL KALAI”
SURROUNDS. EL KALAI MEANS RAYS OF THE SUN.
K RAJARAM 12925
---------- Forwarded message ---------
From: Chittanandam V R <[email protected]>
Date: Fri, 12 Sept 2025 at 07:20
Subject: Fwd: Andaman Krishnamoorthi
To:
*வச்சிட்டான்யா ஆப்பு*
*அந்தமான் கிருஷ்ணமூர்த்தி *
மாப்பூ வச்சுட்டான்யா ஆப்பு என்ற காமெடிக் காட்சியை ரஜினியோடு வடிவேல்
சேர்ந்து கலக்கியிருப்பார். அந்த வச்சுட்டான்யா ஆப்பு என்ற மதுரை
வட்டாரத்துச் சொல்வழக்கின்
பின்னணியில் ஒரு சுவாரசியமான வரலாறும் இருக்கிறது. பாண்டிய நாட்டில்
சோழாந்தகன் என்று ஒரு மன்னர் இருந்திருக்கிறார். சிவ வழிபாடு செய்யாமல் உணவு
அருந்தும் பழக்கம் இல்லாதவராம். வேட்டைக்கு சென்றபோது அகோர பசி அந்த
அரசனுக்கு. உடன் வந்தவர்கள் அவரை உணவருந்த சொல்ல, சிவன் வழிபாடு இல்லாமல்
உணவருந்த மறுத்து விட்டாராம். (மதுரைக்காரங்களே வில்லங்கமான ஆட்கள் தானோ –
காரிகளையும் சேர்த்துக் கொள்ளலாம் – 'மதுரைக்கார அம்மணி' யிடம் யாரும்
போட்டுக் கொடுக்க வேண்டாம் ப்ளீஸ்).
அங்கேதான் வடிவேல் மாதிரி ஒரு புத்திசாலியான ஒரு சேவகன் ஓரிடத்தில் ஒரு ஆப்பு
அடித்து, மாலை அலங்காரம் எல்லாம் செய்து, இதோ சிவன் என்று சொல்ல, மன்னர்
வழிபட்டு பின்னர் உணவு அருந்தினாராம். (சேவகனும் சாப்பிட்ட தகவல் வரலாற்றில்
இல்லை).
வெறும் ஆப்படித்து மன்னரை ஏமாற்றியது பின்னர் அரசருக்கும் தெரிய வந்துள்ளது.
(அப்போவும் அதே மதுரைக்காரன் எவனாவது போட்டுக் கொடுத்திருக்க வேண்டும்!)
இருந்தாலும் தான் வழிபட்ட ஆப்பு சிவனாகவே இருக்க வேண்டும் என்று அடம்
பிடித்து, அப்படி இல்லை என்றால் நான் உயிர் துறப்பேன் என்று வாளை ஓங்க, அந்த
ஆப்பு சிவலிங்கமாக மாறியதாம். அந்த ஆப்புடையார் , இப்போது *திருவாப்புடையார்*
என அழைக்கப்படுகிறது. செல்லூருக்கு அருகில் இருக்கிறது.
அதே செல்லூரின் அருகில் இருக்கும் சொல்லூரில் இன்னொரு சிவன் கோவில் பற்றிய
தகவல் சங்ககாலத்து பாடல் ஒன்றில் வருகிறது. மழுவாள் நெடியோன் - சிவன் பெயரும்,
அரசனின் பெயரும் இதுவே! கெடுதல் செய்யாத வேள்வித் தீ அந்த ஊரில் எரிகிறதாம்.
அதற்கு நடப்பட்ட வேள்வித்தூண் நாற்புறமும் கயிறுகளால் கட்டி
நிறுத்தப்பட்டிருந்ததாம். (கேரளாவின் அலங்கார வளைவுகளும் அப்படித்தான்
கயிறுகளால் இன்றும் கட்டப்பட்டு வருகிறது. கேரளா வளைவுகள் என்றதும் நீங்கள்
வேறு ஏதும் நினைத்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.) அந்த வேள்வித்தூண்
போல் தலைவியின் மார்பு இருக்காம். (என்ன ஒரு கற்பனை!) 'கயிறு அரை யாத்த காண்
தகு வனப்பின்' என்கிறார் அகநானூறு ஆசிரியர் மதுரை மருதன் இளநாகனார்
(வில்லங்கமாய் யோசித்த அவரும் மதுரையா?).
அரை என்பதற்கு கூகுளின் அடிமை 'செய்யறிவு' வேறு மாதிரி பொருள் தருகிறது.
பெண்ணின் இடையைச் சுற்றும் கயிறு போன்ற ஒரு கச்சையை (அரைக்கச்சை) உடைய,
காண்பதற்கு மிகவும் அழகான மற்றும் மென்மையான உருவம் என்கிறது. நான், என்னிடம்
இருக்கும் அடிமை செய்யறிவான சாட் ஜிபிடியிடம், அரை என்ற சொல் இடம் பெற்றுள்ள
சங்கப் பாடல்களின் பட்டியல் கேட்டேன். ஒரே ஒரு குறுந்தொகைப் பாடலில்தான்
இருக்கு என்று அப்பட்டமாய் பொய் சொல்கிறது. 'சங்கம்பீடியா'வில் முனைவர்
பாண்டியராஜ் அவர்களின் பட்டியலில் 81 சங்கப் பாடல்களில் அரை வந்திருப்பதாய்
விரிவாய் தகவல் தருகிறது. சங்கப்பாடலும் செய்யறிவு தொழில் நுட்பமும் தெரிந்த
யாராவது இந்த அடிமை சாட் ஜிபிடிக்கு சொல்லித் தாங்களேன்… ப்ளீஸ்.
அது இருக்கட்டும். அரை என்றால் பாதி என்றுதான் நினைக்கிறோம். ஆனால் அதையும்
மீறி பல்வேறு பொருள்களில் அரை பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அப்படியே
கம்பனிடமும் கேட்கலாம் என்று பார்த்தால், அவர் *சூர்ப்பனகை* யைக் கை
காட்டுகிறார். அப்படியே அந்த இலங்கை அழகி சொல்வதையும் கேக்கலாமே! அவர்
கண்ணிலும் ஒரு அரை தெரிகிறது. திருமாலின் அரை என்பதால், அதனை *திருஅரை* என்று
மரியாதையாக அழைக்கிறாள். ஏன் தெரியுமா? சூரிய ஒளியைப் பார்த்தாளாம். இந்த
அரையைப் பார்த்தாள். சூரிய ஒளி அவ்வளவு பிரைட்டா இல்லையாம். அந்த அரையில் ஓர்
உடை. உண்மையில் தவம் செய்த உடைதான் அது. வியப்பில் அவள் இருக்க, நாம் பொருளை
உடைத்துச் சொல்லிடலாமா? *அரை என்றால் இடுப்பு.* (அட… ஆமா… அரைஞாண்)
இதோ கம்பனின் பாடல்:
*நல் கலை மதி உற வயங்கு நம்பிதன்*
*எல் கலை திரு அரை எய்தி ஏமுற,*
*வற்கலை நோற்றன; மாசு இலா மணிப்*
*பொன்-கலை நோற்றில போலுமால்' என்றாள்.*
சிறந்த கலைகள் நிரம்பிய முழுமதி போல் விளங்குகிறான் இந்த ஆண்மகன்; சூரியனைத்
தன் ஒளியால் அழிக்கும் அழகிய இடையை இன்பமுற மரவுரியே தவம் செய்தன போலும் என்று
நினைக்கிறாள் சூர்ப்பனகை. (2850 ஆரணிய காண்டம் – சூர்ப்பனகைப் படலம்)
*அந்தமான் கிருஷ்ணமூர்த்தி*
****************************************************
*சித்தானந்தம் *
--
You received this message because you are subscribed to the Google Groups
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email
to [email protected].
To view this discussion visit
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopOCtW2tYDaAzm3m7Qy93KZm5uCWjeJPkYa9OODhCFBuQ%40mail.gmail.com.