Tiruvai Mozhi Pasuram 3.10.1 சன்மம் பலபல செய்து வெளிப்பட்டு சங்கொடு சக்கரம்வில்,
ஒண்மை உடைய உலக்கை ஒள்வாள் தண்டு கொண்டு புள் ஊர்ந்து, உலகில் வன்மை உடைய அரக்கர் அசுரரை மாளப் படைபொருத, நன்மை உடையவன் சீர் பரவப்பெற்ற நான் ஓர் குறைவு இலனே. caṉmam palapala ceytu veḷippaṭṭu caṅkoṭu cakkaramvil, oṇmai uṭaiya ulakkai oḷvāḷ taṇṭu koṇṭu puḷ ūrntu, ulakil vaṉmai uṭaiya arakkar acurarai māḷap paṭaiporuta, naṉmai uṭaiyavaṉ cīr paravappeṟṟa nāṉ ōr kuṟaivu ilaṉē. Singing the glory of the benevolent Lord Who took many a birth, visible unto (he eyes naked Of the worldly, wielding the sword, the mace. The pounder blight, bow, conch and discus And slew, flying that bird (Garuḍa), the Asuras and the fiends Free from wants of any kind am I indeed. (i) While the Lord incarnates as a matter of grace we are born under compulsion, as the result of our past Karmas (deeds), to eke out our load. But by the Lord’s spontaneous grace, the cycle of birth and rebirth will, some day, be brought to a halt in our case, and we won’t have any more births, having once reached the Eternal Land (Heaven) whence there is no returning. The Lord, however, goes on taking births assuming the Form most appropriate to His needs. While recounting the Lord’s Avatāras (incarnations) carrying about His person the unique weapons of transcendent fame, the Āḻvār feels that he is above wants of any kind. As a matter of fact, only those can suffer from wants, who are either devilish (āsurik) or are running after petty men for paltry gains. (ii) The fiends: Those whose hearts are hard like a rock impervious to the exquisite charm of the Lord’s enthralling Form, and who become the targets of His bow and not of His beauty. Lord Krishna spent a long time on the Earth during the Dwapara Yuga and the Devas were concerned about his absence from the Vaikunta, the Abode of Lord Vishnu. They consulted the Great Dhurvasa Rishi and he consoled them saying the time for Krishna was fast approaching. The Devas asked him, ‘No body can kill Krishna and we dare not ask him for Dehavyhoam (leaving the Body) Dhurvasa smiled and told them to watch. After the Mahabharata War was over, the Pandavas and what remained of the Kauravas , along with the Yadavas (Krishna’s Clan) , were sitting together and fooling around the banks of the River Yamuna. All of them were drunk. Lord Krishna’s son, Sambhavan, playful by nature, dressed himself as a pregnant woman and with his cronies approached a group of Seers(Rishis) and prostrated before them and requested, ‘Please Bless Me for Safe delivery’ The Rishis said, ‘We know, you are the son of Lord Krishna, yet, we Bless you with Safe Delivery of a Wooden ladle(உலக்கை ) and your Clan will be destroyed by it’ K RAJARAM IRS 14825 ---------- Forwarded message --------- From: Chittanandam V R <[email protected]> Date: Thu, 14 Aug 2025 at 05:03 Subject: Fwd: உலக்கை To: *உலக்கை* One of the endangered tools! இக்காலத் தலைமுறையினர் பலர் பார்த்துக்கூட இருக்க மாட்டார்கள்!! நான் சிறு வயதில் வெரைட்டியான உலக்கைகளைப் பார்த்திருக்கிறேன். எங்கள் வீட்டில் பாட்டியும், அம்மாவும், அத்தைகளும் பயன்படுத்தக் கண்டிருக்கிறேன். தீபாவளிக்கு சில நாட்கள் முன்பே, கல்லுரலில் மாவு இடிக்கத் தொடங்கி விடுவார்கள். அதற்கேன்றே பயன்படுத்தப்பட்டது இரும்பு உலக்கை. அது உலக்கையின் வாமன ஸ்வரூபம். குள்ளமாய் - அடிப்பாகம் கொஞ்சம் அகன்றும், தலைப்பாகம் கொஞ்சம் குறுகலாகவும் - தூரத்திலிருந்து பார்த்தால் கூம்பாகவும் இல்லாமல், உருளையாகவும் இல்லாமல் ஒரு "அச்சுப்பிச்சு" ஷேப்பில் இருக்கும். இன்னொரு வகை உலக்கை- மர உரலில் நெல், அரிசி முதலானவற்றைக் குத்தப் பயன்படுத்தப்பட்டது. மரத்தினால் செய்யப்பட்டு- கோலாலம்பூர் பத்துமலை முருகன் மாதிரி நெடிதுயர்ந்து நிற்கும். உச்சியிலிருந்து கீழ்ப்பாகம் வரை ஒரே சீராக அழகுடன் இருக்கும். மேலேயும் கீழேயும் இரும்பு வளையங்கள் பொருத்தப்பட்டிருப்பது அதன் பொலிவை அதிகப்படுத்திக் காட்டும். வாணிகச் செட்டியார் வீட்டு வாசலில் மாடுகளை இழுக்க வைத்துச் சுற்றிக் கொண்டிருக்கும் எண்ணெய்ச் செக்குகளில் பயன்படுத்தப்படுவது வேறு வகை உலக்கை. கொஞ்சம் குண்டாக, மழு மழு வென்று, முழு உடம்பையும் சாய்த்துக் கொண்டு நின்று, செக்குக்குள் காலை நுழைத்து வைத்துக் கொண்டு, அசடு வழிய ஒரே இடத்தில் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கும் வகை. மூன்று வகை உலக்கைகளிலும் இந்தச் செக்கு உலக்கைதான், எண்ணெய் வழியும் உடம்போடு "அசட்டுக்களை" கொண்டது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அதனால்தானோ என்னவோ, எங்கள் கிராமத்துப் பள்ளிக்கூட வாத்தியார், அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தெரியாமல் முழித்துக் கொண்டு நின்றால் " என்னடா! மாடு மாதிரி வளர்ந்திருக்கானுக! ஆனா செக்கொலக்கை மாதிரி நின்னு என் கழுத்தை அறுக்கிறதுக்குன்னே வந்திருக்கானுக!" என்று திட்டுவார்!! 😊 இந்தக் காலத்து வாத்தியார்கள் பையன்களை எப்படித் திட்டுகிறார்கள் என்பதைப் பார்த்து வர எனக்கு ரொம்ப ஆசை!! ஆசை நிறைவேறுமா பார்க்கலாம்!! *பிலாய் சங்கர சுப்ரமணியன்* ************************************* *சித்தானந்தம் * -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoqJibbWdWFso%2BGngsy6%3D8HA1i9%3Dy8ZuYYRE9CD1LcoTRA%40mail.gmail.com.
