1. பொய்கையாழ்வார் 2. பூதத்தாழ்வார்
3. பேயாழ்வார். இம்மூன்று பெரியவர்களும் அவதரித்த ஆண்டு - கி. பி. 460 - 540 (5 ம் நூற்றாண்டு) *பொய்கையாழ்வார்:* பொய்கையாழ்வாரின் அவதாரத் திருக்குறிப்புகள்: ஊர் - காஞ்சி ஆண்டு - சித்தார்த்த மாதம் - ஐப்பசி நட்சத்திரம் - திருவோணம் (ஷ்ரவணம்) திதி - சுக்லாஷ்டமி(செவ்வாய்) பொய்கையாழ்வார் பிறப்பு பற்றிய உண்மை அறியப்படவில்லை. தொண்டை நாட்டில், காஞ்சிபுரம் என்னும் திருமாநகரில் உள்ள திருவேக்கா என்னும் ஊரில் வீற்றிருக்கும் யதோத்தகிரி திருக்கோயிலின் தாமரைக் குளத்தில் தான் பொய்கையாழ்வார் முதன்முதலாகக் கண்டெடுக்கப்பட்டார். இந்த நட்சத்திரக் குறிப்புகள் அனைத்தும் அவர் கண்டெடுக்கப்பட்ட நேரத்தைக் கொண்டு கணித்ததே. அக்குளத்தின் திருப்பெயர் பொய்கை எனப்படுவதால் இவர் பொய்கையாழ்வார் என்னும் திருப்பெயரிட்டு அழைக்கப்பெற்றார். இவர் எம்பெருமான் நாராயணின் பஞ்சாயுதங்களில் ஒன்றான திருசங்கின் அம்சமாவார். *பூதத்தாழ்வார்:* ஊர் - மகாபலிபுரம் ஆண்டு - சித்தார்த்த மாதம் - ஐப்பசி நட்சத்திரம் - அவிட்டம்(தனிஷ்டம்) திதி - நவமி (புதன் கிழமை) மகாபலிபுரம் - இத்திருத்தலத்தில் எம்பெருமான் நாராயணன் (கிடந்த வண்ணம்) சயனக்கோலத்தில் அருள் பாலிக்கிறார். (ஸ்தல ஸயன பெருமாள்) பூதத்தாழ்வார் பெருமாளின் 5 ஆயுதங்களின் ஒன்றான கதையின்(கௌமோதகி) அம்சமாவார். இவருக்கான மலர் - குறுக்கத்தி(நீலோற்பல மலர்) ஆகும். அம்சம் ல்லாம் மென்மையா, மணமா, அழகாத்தான் இருக்கு; ஆனா பேர் மட்டும் ஏன் பூதம் ன்னு வெச்சி இருக்காங்க? அதாவது, பூதம் ன்னா, அது மாத்ரூ பூதமோ, இல்ல வேற ஆவிப் பூதமோ கிடையாது. பூதம் என்பது பஞ்சபூதங்களைக் குறிக்கிறது. அதாவது, அவர் எம்பெருமான் பஞ்ச பூதங்களாக இருக்கிறார் என்று நம்பி, அந்த நம்பியின் அம்சங்களனைத்தையும் கொண்ட பெயரையே தனக்கும் வைத்துக் கொண்டார். பஞ்ச பூதங்களாக இருக்கும் எம்பிரானைப் பற்றி பாடும் ஆழ்வார், அதனால் பூதம் + ஆழ்வார் = பூதத்தாழ்வார். *பேயாழ்வார்* ஊர் - மயிலாப்பூர் ஆண்டு - சித்தார்த்த மாதம் - ஐப்பசி நட்சத்திரம் - சதயம் திதி - தசமி(வியாழன்) பேயாழ்வார் பெருமாளின் 5 ஆயுதங்களில் ஒன்றான வாளின்(நாதங்கம்) அம்சமாவார். இவரும் மயிலாப்பூரில் உள்ள திரு ஆதி கேசவ பெருமாளின் திருத்தலத்தில் இருக்கும் திருக்கிணற்றில் மலர்ந்திருந்த செவ்வல்லி மலரிலிருந்து கண்டெடுக்கப்பட்டார். இவர் பெயர் ஏன் பேய் ஆழ்வார் என்று வந்தது என்று தெரியுமா? இவர், ஊர் ஊராக... எங்கும் எப்போதும் பெருமாளின் பெருமைகளையேப் பாடிக் கொண்டு பேயைப் போல் திரிந்து வந்ததால், அவருக்கு 'பேய் ஆழ்வார்' என்று பெயர் வந்தது. இம்மூவரும் *'முதல் ஆழ்வார்கள்'* என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களை நம்மாழ்வார், *'இன்கவி பாடும் பரம கவிகள்'* என்று போற்றுகிறார். பொய்கையாழ்வார், தத்துவ ஞானத்திலிருந்து எவ்வாறு பர ஞானம் உருவாகிறது என்றும், பூதத்தாழ்வார், பர ஞானம் எவ்வாறு பர பக்தியாக மலர்கிறது என்றும், பேயாழ்வார், பரபக்தி எவ்வாறு பரம பக்தியாக நிறைகிறது என்றும் நிகழ்த்திக் காட்டினர். இவர்கள் மூவரின் பிரபந்தமும் ஒன்றாக இணைந்து *'இயற்பா' *என்று அழைக்கப்படுகிறது. இம்மூவரும் ஒரே ஆண்டில், அடுத்தடுத்த நாள்களில் பிறந்துள்ளனர். ஆனால் வேறு வேறு ஊர்களில் பிறந்த இவர்கள் எப்படி ஒத்த எண்ணமுடையவராய் இருந்தனர்? மூவரும் ஒன்றாக பள்ளியில் படித்தனரா? அதுதான் இல்லை. பின் எப்படி? இவர்கள் மூவரும் ஒருவரை ஒருவர் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை. ஆனால் இவர்கள் மூவரின் நோக்கமும், சிந்தையும் எம்பெருமானைப் பற்றியே இருந்தன. இவர்களை ஒன்றாக இணைத்து, ஓரிடத்தில் இருத்தி, அவர்களை இடித்து நெருக்கி அவர்களின் பக்தி பாசுரத்தை ஒரே இடத்திலேயே கேட்டு மகிழ்ந்த நம் பெருமானின் அருளுள்ளத்தை என்னவென்று சொல்ல! இம்மூன்று அன்புக்கடலையும் எம்பிரான் சங்கமிக்க வைத்த இடம் *திருக்கோவிலூர்* ஆகும். ---------- Forwarded message --------- From: Chittanandam V R <[email protected]> Date: Thu, 31 Jul 2025 at 21:02 Subject: Fwd: Boothaththalwar by Sujatha To: பொய்கையாழ்வார் ஏற்றியது மிகப் பெரிய விளக்கு. அந்த அளவுக்கு விளக்கேற்ற முடியாத பூதத்தாழ்வார் என்னால் முடிந்த விளக்கை ஏற்றிப் பார்க்கிறேன் என்கிறார். அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புகழ்சேர் ஞானச்சுடர் விளக்கேற்றினேன் நாரணற்கு ஞானத்தமிழ் புரிந்த நான். (தகளி = மண் விளக்கு, நன்புகழ்சேர் = குறையற்ற புகழ் கொண்ட, நாரணன் = நாராயணன், விஷ்ணு) அன்பை ஓர் அகல் விளக்காக்கி அதில் ஆர்வத்தை நெய்யாக ஊற்றி, சிந்தனையைத் திரியாகப் பற்றவைத்தால் ஏற்படும் ஞானம் அல்லது தரிசனம் அல்லது காட்சி எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். உலகில் உள்ள அத்தனை சிந்தனாபூர்வமான விஷயங்களுக்கும் இம்மாதிரியான விளக்கு ஒன்று தேவைப்படும். எந்த விஷயத்தையுமே அறிய முயற்சிக்கு முன் அதை நாம் நேசிக்க வேண்டும். அதன் மேல் அன்பு செலுத்த வேண்டும். அதோடு அதில் ஆர்வம் வேண்டும். ஆர்வம் என்றால் enthusiasm ஈடுபாடு. பிடிவாதமான தேடல் இவற்றுடன் சிந்தனா சக்தியும் சேர வேண்டும். அப்படிச் சேர்ந்துவிட்டால் நாராயணன் கொடுப்பது ஞானம், அறிவு, காட்சி வெளிப்பாடு revelation. எந்த தரிசனத்துக்கும் இரண்டு வகை விளக்கையும் ஏற்ற வேண்டும். தத்துவம், ஞானம் என்ற இரண்டு வகை விளக்கு.பொய்கையாழ்வார் ஏற்றியது தத்துவ விளக்கு. உலகளாவிய தத்துவம். பூதத்தாழ்வார் ஏற்றியது ஞானவிளக்கு. இவ்விரண்டு விளக்குகளையும் ஏற்றும்போது தெரியும் காட்சி என்ன? அதை அடுத்த பாசுரத்தில் பேயாழ்வார் சொல்லக் கேட்போம். பூதத்தாழ்வாரின் இந்தப் பாடல் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் 2182-ம் பாடல். இரண்டாம் திருவந்தாதியின் முதல் பாசுரம். பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் மூவரையும் முதலாழ்வார்கள் என்று சொல்கிறார்கள். இது என்ன பெயர்கள் பேய், பூதம் என்று. இம்மூவரையும் பற்றி சரித்திரக் குறிப்புகள் எதுவும் இல்லை. மூன்றுமே கற்பனைப் பெயர்களாக இருக்கலாம். பொய்கையாழ்வார் ஒரு தாமரைப் பொய்கையில் அவதரித்தார் என்று ஒரு கதை உண்டு. பேயாழ்வார் கோயில் சென்னை மயிலாப்பூரில் உள்ளது. மூவரும் சமகாலத்தவர்கள். சந்நியாசிகளா? ரிஷிகளா? ஏதும் தெரியவில்லை. அவர்கள் எழுதிய முன்னூறு அற்புதமான பாசுரங்களின் மூலம்தான் அவர்களை அறிய முடிகிறது. - சுஜாதா *************************** *சித்தானந்தம் * -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoquHNTWT__W_NzzoZXBmZWTgjLXGMEATibXHKYebB_mFg%40mail.gmail.com.
