👍 On Tue, 29 Jul 2025 at 12:20, Narayanaswamy Sekar <[email protected]> wrote:
> > ---------- Forwarded message --------- > From: N Sekar <[email protected]> > Date: Tue, Jul 29, 2025, 10:46 AM > Subject: Fwd > To: Narayanaswamy Sekar <[email protected]>, Rangarajan T.N.C. < > [email protected]>, Chittanandam V. R. <[email protected]>, > Kerala Iyer <[email protected]>, Mathangi K. Kumar < > [email protected]>, Srinivasan Sridharan <[email protected]>, > Rama (Iyer 123 Group) <[email protected]>, Suryanarayana Ambadipudi < > [email protected]>, Mani APS <[email protected]> > > > Fwd - Read in a social media group even if it is a repeat - still makes > enjoyable reading. > > N Sekar > > சென்னையைப் பொறுத்தவரையில் பிராமணர்கள் ஐந்து இடங்களில்தான் கணிசமாக > வசிப்பார்கள். > > 1) மாம்பலம் > <https://www.google.com/maps/search/1)+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D?entry=gmail&source=g> > பகுதி(அசோக் நகர், கோடம்பாக்கம்) > > 2) மயிலாப்பூர் > <https://www.google.com/maps/search/2)+%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D?entry=gmail&source=g> > பகுதி (மயிலை, ஆழ்வார்பேட்டை), > > 3) திருவல்லிகேணி > <https://www.google.com/maps/search/3)+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AE%BF?entry=gmail&source=g> > பகுதி (குறிப்பாக வைணவர்கள்) > > 4) நங்கநல்லூர் > <https://www.google.com/maps/search/4)+%E0%AE%A8%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D?entry=gmail&source=g> > . > > 5) மடிப்பாக்கம். > > இதில் மயிலாப்பூர் வகையறா அட்வகேட்ஸ், ஆடிட்டர்ஸ், என்று அப்பா தொழிலையே > தொடர்ந்து அபிவிருத்தி செய்து தனி வீடு,கார்கள் என்று பட்டையை கிளப்பும் > மேட்டுக்குடி. > > திருவல்லிக்கேணி கோஷ்டி வெளிச்சம் அவ்வளவு இல்லாத, காற்று புகாத, அறைகளில் > ஒண்டுக் குடித்தனத்தில் வாழ்ந்து கொண்டு, பார்த்தசாரதிக்கு கைங்கர்யத் தொண்டு > சாதித்துக்கொண்டு வாழ்பவர்கள். > > நங்கநல்லூர், மடிப்பாக்கம் காரர்கள் அநேகம் பேர் ரிட்டையர் ஆகி நகர நெரிசல் > தாங்கமுடியாமல் வெளியூரிலிருந்து வந்து குடிபெயர்ந்தவர்கள். > > இவர்கள் எங்கு போனாலும் ஸ்ரீரங்கம் போல மெதுவாக நடந்து, ஆஞ்சநேயரை, ஐயப்பனை, > குருவாயூரப்பனை சேவித்து, மடிப்பாக்கம் ஏரிக்கரையை மெரினாவாக்கி... ஈஸிசேரில் > சாய்ந்து கொண்டு, பேப்பர் படித்துக்கொண்டே 'உங்காத்துல கரண்ட் வந்துடுத்தா' > என்று கேள்வி கேட்கும் ரகம். > > ரிலையன்ஸ் ப்ரெஷ், கிரி ட்ரடேர்ஸ் , நீல்கிரிஸ்ன்னு எல்லாமே இங்கேயே > வந்துடுத்து தெரியுமோ' என்றும் பெருமை பாராட்டக் கூடியவர்கள். > > மாம்பலம்காரர்களை பொறுத்தவரை ஒன்றே ஒன்றுதான். > படுக்க ஒரு இடம் வேண்டும். > கேஸ் அடுப்பில் குக்கர் வைத்துவிட்டு, தாளித்து கொட்ட கடுகு வேண்டுமெனில், > வாசலில் ஒரு நாடார் கடையோ, பாய் கடையோ இருக்க வேண்டும். > காலை அஞ்சுமணிக்கு தொடங்கும் பரபரப்பு இரவு பத்து மணிக்குத்தான் அடங்கும். > > "பதினஞ்சு ரூபாய் சொல்றயேம்மா, பன்னெண்டு ரூபாய் போட்டுக்கப்டாதா" என்று > பேரம் பேசி வாழைத்தண்டு முதல் துவாதசிக்கு அகத்திகீரை வரை வாங்கக் > கூடியவர்கள். > > சிறுகுறிஞ்சான் முதல் சித்தரத்தை வரை விற்கும் நாட்டுமருந்து கடைகள், > பசுஞ்சாணி வறட்டி, தர்ப்பை, கூர்ச்சம், பவித்ரம், நோன்புக் கயிறு என்று > அனைத்து பூஜா சாமான்களுக்கு ஹரிகிருஷ்ணன் ஏஜென்ஸீஸ், > மணக்க மணக்க சாம்பார் பொடி, இலை வடாம், > புளிக்காய்ச்சல் என்று பலவற்றிற்கும் சாரதா ஸ்டோர்ஸ், ஆபீஸ்லேந்து வர்றதுக்கு > லேட்டாயிடுத்தா, ட்யூஷன் போகறதுக்குள் குழந்தைகள் பசியை போக்க இருக்கவே > இருக்கு, > வெங்கட்ரமணா > போளி ஸ்டால்!! > > அவசர ஜவுளிக்கு சிவன்மலை ஆண்டவர். > சகாய விலையில் தரமான வைத்தியம் பார்த்துக்கொள்ள ஹெல்த் செண்டர். > > அயோத்யா மண்டபம் ஸ்ரீராம ஸமாஜில் எவ்வளவு அரசியல் இருந்தாலும், எப்பொழுதும் > ஏதோ பூஜையோ, நாமசங்கீர்தனம் போன்ற வைபவங்களோ நடந்து கொண்டே இருக்கும். > ஒரு பக்கம் 'பாம் பாம்' என்று ஹாரன் அடித்துக்கொண்டே எம்டிசி பஸ் போய்க் > கொண்டிருக்க இத்தனை இரைச்சல் நடுவிலும் நித்யஸ்ரீ ராமா ராமா என்று > பாடிக்கொண்டு இருப்பார். > > இங்கு ஹிந்தி,ஃபிரெஞ்சு கற்றுக்கொடுக்கப்படும் என்ற போர்டும், ஐந்து > வீடுகளுக்கு ஒன்றில் 'இங்கு வாய்ப்பாட்டு கற்று தரப்படும்' என்ற போர்டும் > காணப்படும். > > "எல் கே ஜி முதல் சி ஏ வரை அனைத்து வகுப்புகளுக்கும் ட்யூஷன் எடுக்கப்படும்" > இந்த வகையான போர்டுகள் இல்லாத வீடுகள் அரிது. > > நீட், ஜெ ஈ ஈ என்று பல்வகையான கோச்சிங் செண்டர்களுக்கும் ஒரு கூட்டம் > படையெடுக்கும். > > காலை ஏழுமணி முதல் ஆர்யகௌடா ரோட்டில் இன்ஜினியரிங் காலேஜ் பஸ்களிலும், ஐ டி > கம்பெனி பஸ்களிலும் பெண்கள் அதிக அளவில் ஏறுவார்கள். > > நூறுவீடுகளுக்கு ஒன்று கல்யாண மண்டபமாகவோ அல்லது ஏ சி மினி ஹாலாகவோ > மாற்றப்பட்டு இருக்கும். > > ஆறுமாதத்திற்கு முன்பு பதிவு பண்ணாவிட்டால் கிடைக்காது. > அவர்களே வரும் விருந்தினர்களுக்கு தங்குவதற்கு கெஸ்ட் ஹவுஸும் அங்கேயே > ஏற்பாடு செய்து கொடுப்பார்கள். > > எல்லா சமையல் கான்ட்ராக்ட்காரர்களும் காஞ்சி பெரியவர் படத்தை பெரிதாக > போட்டுத்தான் உங்களிடம் பிசினெஸ் பேசுவார்கள்😇 > > அதற்காக சகாயமான விலை இருக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள். > தொழில் வேறு; > பக்தி வேறு. தொழிலுக்குத்தான் பக்தி. > > வீட்டில் குக்கரில் சாதம் மட்டும் வைத்துக்கொண்டு கறி, கூட்டு, ரசம், > சாம்பார் என்று தேவைக்கேற்ப தஞ்சாவூர் மெஸ்ஸில் வாங்கிக்கொள்ளும் குடும்பம் > அங்கே கணிசமானோர் உண்டு. > > போஸ்டல் காலனியில் சில இடங்களில் ஆயிரம் அடிக்கு கீழே தோண்டினால் கூட > காற்றுதான் வரும். > சில குடியிருப்புகளில் நாற்பது ஆண்டுகாலமாக சகலத்திற்கும் லாரி தண்ணீரை > நம்பித்தான் தினப்படி வாழ்க்கையே. > > கொசுக்கடியோ, சாக்கடையோ, > தண்ணி கஷ்டமோ இவையெல்லாம் ஒரு சராசரி மாம்பலவாசிக்கு பொருட்டே அல்ல. > > ரியல் எஸ்டேட் சரிவோ, பணமதிப்பிழப்போ இங்கு ஒன்றும் கிடையாது. > > சதுரஅடி பதினாலாயிரம் ரூபாய்க்கு குறைவாக ஒரு அபார்ட்மெண்ட் கிடைக்காது. > > இந்த பின்னணியில் வளர்ந்து ஐ ஐ டி முதல் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் வரை > போய் படித்துவிட்டு அமெரிக்காவிற்கு உழைக்கிறார்கள். > > இந்த சந்து பொந்துகளில் விளையாடித்தான் ரவி அஷ்வின் உலகத்தின் முதல்தர சூழல் > பந்து வீச்சாளராக வலம் வருகிறார் > . > கிரேசி மோகன் ஒரு பேட்டியில் சொன்னார், அவருக்கு மைலாப்பூரில் இருந்து > மாம்பலம் வந்தாலே ஹோம் சிக் வந்துவிடுமாம். மாம்பலம்வாசிகளுக்கும் > அப்படித்தான். > > இப்பதிவு சென்னைவாழ் அந்தணர்களுக்கு சமர்ப்பணம்🙏 > > Yahoo Mail: Search, Organize, Conquer > <https://mail.onelink.me/107872968?pid=nativeplacement&c=US_Acquisition_YMktg_315_SearchOrgConquer_EmailSignature&af_sub1=Acquisition&af_sub2=US_YMktg&af_sub3=&af_sub4=100002039&af_sub5=C01_Email_Static_&af_ios_store_cpp=0c38e4b0-a27e-40f9-a211-f4e2de32ab91&af_android_url=https://play.google.com/store/apps/details?id=com.yahoo.mobile.client.android.mail&listing=search_organize_conquer> > > -- > You received this message because you are subscribed to the Google Groups > "Thatha_Patty" group. > To unsubscribe from this group and stop receiving emails from it, send an > email to [email protected]. > To view this discussion visit > https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81ZcmWaWCgih%3DNp3Hfsu572GSu5j94ov8ohE9YmTtPuJ37g%40mail.gmail.com > <https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81ZcmWaWCgih%3DNp3Hfsu572GSu5j94ov8ohE9YmTtPuJ37g%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer> > . > -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoqN8rDEASvZK%3DL56inwt3bJMHigeDj55DPJ%2BsFMSMHj-A%40mail.gmail.com.
