Thanks  for this and the earlier mail.

It is amazing that our Rishis prayed for good sleep also, in addition to so
many other requests.

Regards

N Sekar

On Fri, Jul 25, 2025 at 10:48 AM Venkatachalam Subramanian <
[email protected]> wrote:

> *ருத்ரம் சமகம் இவற்றின்* *அற்புத விளக்கம்
>
> ருத்ரம் என்னும் துதி யஜுர் வேதத்தில் உள்ளது. இது நமகம், சமகம் என இரண்டு
> பகுதிகளை உடையது. இறைவனிடம் என்ன வேண்டுவது என்று திணறுபவருக்கு இது ஒரு பெரிய
> பட்டியலைத் தருகிறது. இது பற்றிய மிகவும் அற்புதமான விஷயம் என்னவென்றால் நல்ல
> தூக்கத்தையும் தருக என்று இறைவனை வேண்டுவதாகும். மேலை நாடுகளிலும் இந்திய
> நகரங்களிலும் வாழ்பவருக்கு இன்று அரிதான பொருள் நல்ல நிம்மதியான உறக்கம்
> ஆகும். பலவித கவலைகளாலும் இயந்திரம் போன்ற வாழ்வாலும் மனிதர்கள் கஷ்டப்
> படுகிறார்கள். இதை ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்த நம்
> முன்னோர்கள் அழகாக வரிசையாக சமகம் என்னும் பகுதியில் பட்டியல்
> இட்டுவிட்டார்கள்.
>
> நமகம் என்னும் பகுதியில் சிவ பெருமானை நூற்றுக் கணக்கான பெயர்களால்
> நமஸ்கரிக்கிறோம். இதனால் இதை சத ருத்ரீயம் என்று அழைப்பர். சமகம் என்னும்
> பகுதியில் நமக்கு வேண்டியவற்றை எல்லாம் கேட்கிறோம். இதைக் கேட்டாலேயே போதும்.
> அத்தனையும் கிடைத்துவிடும். சிவன் கோவில்களில் அபிஷேக நேரத்தில் இதைப்
> பாராயணம் செய்வார்கள். இந்துக்களின் முக்கிய சடங்குகள் அனைத்திலும் ருத்ர
> பாராயணம் நடைபெறும்.
>
> நமகம் என்னும் பகுதியில் 194 நம: வரும்
>
> சமகம் என்னும் பகுதியில் 328 சமே வரும்.
>
> நமகம் பகுதியில் சிவனை 300 பெயர்களால் வணங்குகிறோம்.
>
> ருத்ரத்துக்கும் 11 என்ற எண்ணுக்கும் தொடர்பு மிக அதிகம்.ஏகாதச ருத்ரர்கள்
> என்று ருத்ரர்களின் எண்ணிக்கை கணக்கிடப்படுவதால் குறைந்தது 11 தடவையும்,
> அதிகமாக இதன் பல மடங்குகளிலும் பாராயணம் செய்வர்.
>
> ஸ்ரீருத்ரம் 174 ரிக்குகளைக் கொண்டது. இதில் 32 மஹா மந்திரங்கள் இருக்கின்றன.
> ருத்ரத்தில் 11 பிரிவுகள் (அநுவாகங்கள்), சமகத்தில் 11 பிரிவுகள் இருக்கின்றன.
> ருத்ரத்தின் 11 அநுவாகங்களில் எட்டாவது அநுவாகத்தில் நமச்சிவாய
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "Thatha_Patty" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to [email protected].
> To view this discussion visit
> https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdukVqVXYAw9QWs4_EP9-%3DpVEi1HvYGxwJsKvTB-FoJxDg%40mail.gmail.com
> <https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdukVqVXYAw9QWs4_EP9-%3DpVEi1HvYGxwJsKvTB-FoJxDg%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer>
> .
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81ZcTbaxbYRMqhp_Z8OaBCYH8%3DxW9%3DXM7fmocg4X14yyAJA%40mail.gmail.com.
  • [no subject] Venkatachalam Subramanian
    • Re: Narayanaswamy Sekar

Reply via email to