தகழி takaḻi n. sthālī. [M. takaḻi.]1. Bowl of a lamp; அகல் <https://agarathi.com/word/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D> (திவா.) 2. Platform in which food is eaten, dish; உண்கலம் <https://agarathi.com/word/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D> (சது.) Right word. And already one jyothi light is being prayed for removing the sufferings, as another light is lighted . Peyazhvar reflected the DVAITHAM OF VAISHNAVISM. vishnu and sun; in rig veda both are same. K Rajaram irs 25725
---------- Forwarded message --------- From: Chittanandam V R <[email protected]> Date: Fri, 25 Jul 2025 at 05:37 Subject: Fwd: Poigaiyalvar by Sujatha To: *விளக்கேற்றித் துவங்குவோம் * *சுஜாதா * எந்த நல்ல காரியத்தையும் விளக்கேற்றித்தான் துவக்கிவைக்கிறோம். இன்றைய தினங்களில் கம்ப்யூட்டர் விழாக்கள்கூட குத்துவிளக்கேற்றித்தான் துவங்குகின்றன. குத்துவிளக்கைத் தேடி அலைய முடியாது. நமக்கு ஓர் அகல் விளக்கு போதும். 'தகளி' என்ற அருமையான கடைச் சங்க காலத் தமிழ் வார்த்தையை நாம் மலையாளத்துக்கு இழந்துவிட்டோம். மண் விளக்கிற்கு பயன்பட்டு வந்த சொல். கார்த்திகை மாதத்தில் வீடெங்கும் வரிசையாக ஏற்றி வைப்பார்களே அந்த விளக்கு. அம்மாதிரி விளக்கொன்றை ஏற்றிவைத்து இந்தத் தொடரைத் துவங்குவோம். விளக்கேற்றுவது இருள் நீங்குவதற்கு. இடர்ப்பாடுகள் சுனாமி ஆழிப்பேரலைப் போல வந்தாலும் அதை நீக்க ஒரு பெரிய விளக்கை ஏற்றி வைத்தால் போதும். அதற்குத் தேவையான சமாசாரங்கள் என்ன என்ன? முதலில் ஒரு தகளி வேண்டும். அதற்கு உலகத்தையே (வையம்) எடுத்துக்கொள்ளலாம். அதில் எண்ணெய் ஊற்ற வேண்டும்; அதற்கு (வார்கடல்) சமுத்திரத்தைப் பயன்படுத்தலாம். திரி ஏற்ற வேண்டும்; கதிரவனைப் பற்றவைக்கலாம். அதைக் கடவுளின் பாதத்தில் வைத்தால் போதும் காரியம் முடிந்தது. இவ்வளவு பெரிய விளக்கை ஏற்றுவது கொஞ்சம் கஷ்டம்தான் என்றாலும் கற்பனை செய்தாவது பார்க்கலாமே! காசா? பணமா? அந்தச் சொல் மாலையாலேயே இடர்ப்பாடுகள் அனைத்தும் நீங்கிவிடும் என்கிறார் பொய்கையாழ்வார். *வையம் தகளியா வார்கடலே நெய்யாக * *வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய * *சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை * *இடராழி நீங்குகவே என்று.* (வெய்ய - வெப்பமிக்க; செய்ய - சிவந்த; சுடராழி - ஒளிச் சக்கரம்; இடராழி - துன்பக் கடல்.) இதைப் பாடிய பொய்கையாழ்வார் ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். திருவெ*ஃ*கா என்ற பழைய பெயர் கொண்ட காஞ்சிபுரத்துக்காரர். துறவி. இந்தப் பாடல் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் 2082-ம் பாசுரம். இயற்பா என்கிற பகுதியில் முதல் திருவந்தாதியில் முதல் பாசுரம்.இது நேரிசை வெண்பாவில் அமைந்தது. பொய்கையாழ்வார் பாடிய நூறு பாடல்களால் புறவிருள் அகன்றது என்பது வைணவர்கள் நம்பிக்கை. அதிகாலையில் கடற்கரையில் இருள் பிரியும் வேளையில் நின்றுகொண்டு தொடுவானத்தில் சூரியன் உதிக்க எழுந்து உலகெலாம் வெளிச்சத்தில் நனைவதைப் பார்க்கும்போது 'சஹஸ்ரகோடி பாஸ்கர துல்யம்' என்று சொல்லும் 'கதிராயிரம் இரவி கலந்தாற்' போன்ற அந்தக் கணத்தில் பொய்கையாழ்வாரை நினைவில் கொள்ளுங்கள். - சுஜாதா ************************** *சித்தானந்தம் * -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopP4Ysm64Amj8n1%3DGcVjP%3Decf985knphy%3DyQhRzHcuvkQ%40mail.gmail.com.
