where Maha Periyava expresses his Desire.
“ஹிந்துவாகப் பிறந்த நாம் ஒவ்வொருவரும் தத்துவத்தில் (ஃபிலாஸஃபியில்) பிரிந்திருப்பதால் தோஷமில்லை. ஃபிலாஸஃபி என்று வருகிறபோது, ‘நான் அத்வைதி – எனக்குச் சங்கரர்; நீ த்வைதி – உனக்கு மத்வர்; அவர் விசிஷ்டாத்வைதி – அவருக்கு ராமாநுஜர்’ என்று இருந்துவிட்டுப்போவோம். பல அபிப்பிராயங்கள் இருப்பதால் அவற்றை ஆராய்ந்து பார்ப்பதால் தப்பில்லை. ஆனாலும், எந்தப் பிரிவாயிருந்தாலும் சரி, ஹிந்துவாகப் பிறந்த சகலரும் ஒன்று சேர்ந்து வேத வியாஸ பகவானின் படத்தைத் தோளில் ஏற்றிக்கொண்டு வீதி பவனி எடுத்துவரக் கடமைப்பட்டிருக்கிறோம். பல பேருக்குச் சிலை வைக்கிறோம். படத்திறப்பு விழாக்கள் செய்கிறோம். எனக்கு ஆசை, வருஷத்துக்கு ஒரு நாளாவது ஒவ்வொரு பேட்டையிலும் இருப்பவர்கள் வியாஸாசாரியாளின் படத்தை ஐக்கியமாகக் கூடி ஊர்வலமாக எடுத்து வந்து, ஓரிடத்தில் எழுந்தருளப் பண்ணி, அங்கே சகலருக்கும் பொதுவான வேத தர்மங்களைப்பற்றி சம்மேளனம் நடத்த வேண்டும் என்பது. இதுவரை இப்படி செய்யாத அபராதத்துக்குப் பிராயச்சித்தமாகச் சேர்த்து வைத்து இனிமேலாவது இப்படி வியாஸாசாரியாளுக்கு உத்ஸவம் செய்ய வேண்டும். ‘ஹிந்து’ என்ற பேரில் உள்ள நம் எல்லோரின் நமஸ்காரங்களுக்கும் பாத்திரராக இருக்கிறவர் அவர்.” “There is no harm in each of us being born Hindus being divided in philosophy. When it comes to philosophy, let us stop thinking, ‘I am Advaiti – for me it is Shankara; you are Dvaiti – for you it is Madhvar; he is Vishishta Advaiti – for him it is Ramanuja’. Since there are many opinions, there is no harm in examining them. However, no matter which sect we belong to, all of us who are born Hindus are obligated to carry the image of Vedas Bhagavan on our shoulders and take it on a street parade. We install idols for many people. We hold image-removal ceremonies. I wish that at least one day a year, the people of every village should gather together and take the image of Vyasacharya in a procession, erect it at one place, and hold a conference there on the Vedic Dharmas common to all. As an atonement for the fines that have not been done so far, we should at least do this in the future. "We should celebrate Vyasacharya. He is worthy of the homage of all of us who call ourselves 'Hindu'." K RAJARAM IRS 10725 -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZooovO5tLp%3DmYYF2A8_6MinM3CU022S0fH%3DqjegKHecBqQ%40mail.gmail.com.
