உறவு என்பது பல வகைப்படும். அற்ற குளத்தில் அறுநீர் பறவை போல், உத்ருஜித்
தீர்வார் உறவு உறவல்ல. அது போலவே, முன் உறவு ,பின் உறவு என இரு வகையைக் கம்பன்
காண்பிக்கிறான். ஆசிரியர் உறவு தாய் தந்தைக்குப் பின் நிகழ்கிறது. உயில்
இல்லாத சொத்துக்கள் எவ்வாறு வாரிசுகளுக்கு போகும் என்பதை, முன்னுரிமைப்
பட்டியல் உளதோ, அது போலவே, குருவின் கட்டளையை மீறுதல் குற்றமென்று என ராமன்
உணர்த்துகிறான். ஏனெனில், தந்தை கட்டளையே முன்னுரிமை உள்ளது. K RAJARAM IRS
29625

---------- Forwarded message ---------
From: Chittanandam V R <[email protected]>
Date: Sun, 29 Jun 2025 at 05:24
Subject: Fwd: Tamilnayagam - Kamba Ramayanam -Rama and Bharatha (27)
To:



*கம்ப இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - எனக்கு என் இனிச் செய்ய வகை?*

*தமிழ்நாயகம்*


தந்தை சொல் கேட்டு இராமன் கானகம் வந்து விட்டான். அவனைத் தொடர்ந்து வந்த
பரதன், இராமனிடம், அரசை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டுகிறான். இராமன்
மறுக்கிறான். அப்போது இடைமறித்து வசிட்டன் "இராமா நீ அரசை ஏற்றுக் கொள்ள
வேண்டும் , இது என் ஆணை " என்று ஆணையிட்டு  விடுகிறான்.

குருவின் ஆணையை மீற முடியாது. இராமன் மீறினால், பின்னால் வரும் சந்ததி ஒன்றும்
ஆசிரியர் பேச்சை கேட்கமாட்டார்கள். இராமனே கேட்கவில்லை, நான் ஏன் கேட்க
வேண்டும் என்று ஆரம்பித்து விடுவார்கள்.

இராமன் இந்த தர்ம சங்கடத்தை மிகத் திறமையாக கையாளுகிறான்.

ஆணையிட்ட வசிட்டனை நோக்கி இராமன் கேட்கிறான்

"முன்னால் சொன்ன தாய் தந்தையரின் கட்டளையை ஏற்று, நான் இங்கு வந்திருக்கிறேன்.
இப்போது நீ ஆணையிடுகிறாய். நான் என்ன செய்ய வேண்டும் என்று நீயே சொல் " என்று.

பாடல்:




*முன் உறப் பணித்தவர் மொழியை யான் எனசென்னியில் கொண்டு, “அது செய்வென்”
என்றதன்பின்னுறப் பணித்தனை; பெருமையோய்! எனக்குஎன் இனிச் செய்வகை? உரைசெய்
ஈங்கு’ என்றான்.*


பொருள்:  "பெருமை உடைய ஆசிரியனே!  முன்பு தெளிவாக  என்னை கானகம் போகும் படி
பணித்தவர்கள் (என் தாய் தந்தையர்)   சொன்ன சொல்லை  நான்  என்னுடைய  தலைமேல்
கொண்டு  அதை செய்து முடிப்பேன் என்றதன் பின்னால்
நீ எனக்குக் கட்டளையிடுகிறாய்.  நான்  இனி எந்த வகையில் காரியம் செய்ய
வேண்டும்?  இங்கு நீ உரைப்பாய்!" என்றான்

நான் உன் மாணவன். நீ எனக்கு ஆசிரியன். என் தாய் தந்தையரின் சொல் கேட்டு நான்
இங்கு வந்திருக்கிறேன். நீ திரும்பி நாட்டுக்கு வா என்கிறாய். நான் என்ன
செய்யட்டும் என்று கேட்கிறான்.

இப்போது வசிட்டன் பாடு திண்டாட்டம். பெற்றோர் வார்த்தையைக் கேட்காதே என்று
வசிட்டன் சொல்ல முடியாது.

இராமன் நினைத்து இருந்தால் , வசிட்டன் சொல் கேட்டு மீண்டும் அரசை ஏற்றுக்
கொண்டிருக்கலாம். இராமனின் நோக்கம் அது அல்ல. பெற்றோரின் வார்த்தைக்கு மதிப்பு
தர வேண்டும் என்று  வாழ்ந்து காட்டுவது அவன் நோக்கம்.

எனவே, கேள்வியை வசிட்டன் பால் திரும்புகிறான்.

வசிட்டன் என்ன செய்தான் என்பதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

*-- தமிழ்நாயகம்*
********************************
*சித்தானந்தம் *

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopx2eDXOycHF1O16pMJC8RdVvS%3DqOFaVNwWCj5NSAP4Vg%40mail.gmail.com.

Reply via email to