AS A MATTER OF FACT, ALL ON THE EARTH ARE ONLY DISABLED; IS THERE ANY
HEALTHY PERSON FIT 100%? IT IS COMPARATIVELY HEALTHY. HENCE ONLY IN VALMIKI
RAMAYANAM, RAMA IS DESCRIBED SO MUCH AS PER SAMUDRIKA LAKSHANA. KR IRS 26625

---------- Forwarded message ---------
From: Chittanandam V R <[email protected]>
Date: Thu, 26 Jun 2025 at 07:03
Subject: Fwd: Indira Priyadarshini - Differently Abled
To:



*ஊனம் *

*இந்திரா ப்ரியதர்ஷிணி *

*ஊனம் என்பதைப் பற்றி பலரும் பேசுகின்றனர். நாக்கில் நரம்பில்லாமல் பேசும்
குரூர மனிதர் *
*உள்ள நிலம் இது. ஊனம் குறித்து ஏளனம் அவச்சொல் கனிவான சொல் எல்லாம் உண்டு.
ஊனம் *
*என்பது ஒரு குறை என்று மனம் எண்ணினால்தான் குறை. தன் மனம். பிற மனம் எதுவும்.
மனம்தான்*
* சத்ரு என்று பாரதி சொல்லி தன்மனப் பகையைக் கொன்று இன்புற்று இருக்கச்
சொல்வான். *

*ஊனமுற்றோர் என்பதை மாற்றி மாற்றுத் திறனாளிகள் என்றெல்லாம் நாமகரணம்
வைத்தாலும் *
*பரிதாபப் பார்வையைத் தவிர்க்க முடியாது. எங்கள் நீச்சல் பயிற்சிக்கு வரும்
இளம் பெண்  கால் *
*பாதம் சற்றே சரிந்திருக்கும். என்ன உத்ஸாஹம் மனோ வேகம். நான் படியில் ஏறத்
தயங்கி நின்றால் *
*முதலில் நீளும் உதவிக் கரம் அம்மகளுடையதுதான். அவர்களுக்கு இருக்கும் அறிவு,
பரிவு, திறன், *
*உள்ளது கொண்டு பெரிது செய்யும் துணிவு எல்லாம் உள்ளதாகக் கொள்ளும் நமக்கு
லவசேமும் *
*கிடையாது. *

*நமக்கு இல்லாத அவர்களுக்கு எதிலும் நிதானம் உண்டு. முயற்சி உண்டு. ஒரு
வயதிற்குப் பின் *
*எல்லாருக்கும் ஏதாவது ஒரு ஊனம் இருக்கத்தான் செய்கிறது. மூட்டு தேய்ந்து வலி
மிகுந்து காலின் *
*நடை மாறுகிறது. பலருக்கு தோள்பட்டைக்கு மேல் கரங்கள் உயர்த்த முடியாது.
கழுத்து தோள்பட்டை *
*வலி. சில நேரம் காலை நேரங்களில் விரலின் மென்மையான மூட்டுக்கள் மடக்கி
விரிக்க வலிக்கும். *
*முதுகு வலி. இடுப்பு வலி இத்யாதி. காரணமில்லாமல் ஏதோ தலைவலி இருக்கும். *

*ஒன்றும் இல்லை என்றால் மனச்சலிப்பு, கடுகடு சுபாவம் இப்படி ஏதாவது ஒரு ஊனம்
இருக்கும். *
*இன்னும் சொல்லப் போனால் மன இயல்புகளில் உள்ள ஊனம் அவரை மட்டுமன்றி
மற்றவரையும்*
*பாதிக்கும். ஊடல் ஊனம் தன்னோடு நின்று விடும். *

*ஊனம் என்று சொல்கையில் அதன் அளவுகோல் எங்கோ வானை முட்டுவது இருப்பது நம் *
*பாரதியிடம்தான். **அவன் ஊனமொன்றறியா ஞான மெய் பூமி, வானவர் விழையும்
மாட்சியார் *
*தேயம் என்பான் சத்ரபதி சிவாஜி கவிதையில். முழுமையான இறை ஞானமே ஆத்ம
விடுதலையே *
*ஊனம் இன்மை என்பதே அவன் வரையறை.*

*அப்படியானால் நம் யாருக்கும் ஊனம் இருக்கிறது. ஆனால் நம் பூமி ஊனமொன்று
அறியாமல் *
*வளங்களை மெய்ஞானத்தை ஞானியர் தம்மைத் தந்த வண்ணம் இருக்கிறது. இதனால்
வானவரும் *
*இங்கு வர விழைகின்றனர். "கானவரும் விழி எறிந்து வானவரை அழைப்பர்"  என்று
குற்றாலக் *
*குறவஞ்சி. *

*ஸ்வாமி தேசிகன் அருளிச்செய்த ஸ்ரீ ஹம்ஸ சந்தேசத்தில் திருமலைப் பெருமை பற்றி*
*ஸ்ரீராமன் கூறிய ஒரு வியப்பான ஸ்லோகம் ஸ்ரீ துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்கள்
காட்டித் தந்தார். ஹம்ஸம்*
*ஸ்ரீ ராமன் சொல்படி தூது செல்லுமுன் "ஹம்ஸமே! எந்தெந்த பிரதேசம் வழியாக நீ
பறப்பாய்" என்று *
*ஸ்ரீ இராம பிரான் சொல்வது. ஸ்ரீ ஹம்ஸ சந்தேஸக் கிரந்தத்தின் 22வது ஸ்லோகம்.
"தத் ஆருடை மஹதி *
*மநுஜை: ஸ்வகர்கி பி அவதீர்ணை:  ஸத்வ உந்மேஷாத் வ்யபகதமித: தாரதம்மிய ஆதிபேதை
: *
*ஸாதாரண்யாத் பலபரிணதே: ஸங்க்கஸாே  பத்யமாநாம் சத்யா காமம் மதுவிஜயிந: த்வம் ச
குர்யா: *
*ஸபர்யாம்".*

*திருவேங்கடமலையில் சிறிது நேரம் தங்கி நீ பெருமாளை ஆராதனை செய்து செல்ல
வேண்டும் என்று *
*பெருமான் உபதேசம். திருமலை திவ்ய தேசம் எப்படிப்பட்டது?  இந்த ஸ்லோகம்
சொல்கிறது. இங்கு *
*வருபவர்க்கு ஸத்வ குணம் மேல் ஓங்குகிறது. இதனால் ஒருவருக்கொருவர் தாரதம்மியம்
ஏற்றத் தாழ்வு  *
*பார்க்கும் குணம் அறவே இல்லாது போகிறது.  தரையில் இருந்து மலை ஏறிய
மானுடர்க்கும் வானில் *
*இருந்து கீழே இறங்கிய தேவர்க்கும் தொழும் பலனில் தாரதம்மியம் இல்லை. பலன்
ஒன்றே. *

*நம் மணிவாசகப் பெருமான் உறையும் திருப்பெருந்துறை அத்தகையதே. புவனியிற்
பிறவாமை. இந்தப் *
*பூமியில் பிறந்தார் ஊனமுறார். அதற்கும் மேலும் ஊனத்தால் வருந்துபவர் ஊனம்
மாய்க்கும் சோலை  திருத்தலத்திற்கு சென்று வரவும். விஜய நகர அரசர் ஊனம்
மாய்த்த பிரான் ஸ்ரீ இராமச்சந்திர மூர்த்தி *
*தன் மூன்று தம்பிகள், பிராட்டி, விநய ஆஞ்சநேயர் சகிதம் காட்சி தரும்
ஊனமாஞ்சேரி * சென்று வாருங்கள். ஆயிரமாண்டு பழமை. இது பாரதி சொன்ன
மெய்ஞ்ஞானபூமி அன்றோ? *

*-- இந்திரா ப்ரியதர்ஷிணி *
**********************************************
*ஊனமாஞ்சேரி கோதண்டராமர் கோவில் வண்டலூர் கேளம்பாக்கம் சாலையில் அமைந்துள்ளது.*
*வண்டலூர் ரயில் நிலையத்திலிருந்து கிட்டத்தட்ட 6 கிலோமீட்டர்.*

*சித்தானந்தம் *

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoqPfM4mPz3yokYdpD1AhFPFjUkiZ5bzOvX_WpTQGCgA1Q%40mail.gmail.com.

Reply via email to