கதை கேட்கும் ஆர்வம் குகை மனிதர்களிடம் இருந்தது பற்றித் தெரியாது, ஆனால் இதிகாச காலத்தில் இருந்து தொடர்வது தான்.
எந்தக் கதையிலும் ஒரு ஹீரோ இருப்பான். ஒரு வில்லன் இருப்பான். வில்லன் ஹீரோவுக்கு ஆரம்பத்தில் இருந்தே குடைச்சல் கொடுப்பான். கடைசியில் ஹீரோ வில்லனைக் கொன்று சனங்களைத் திருப்திப் படுத்துவான். இதில் முதல் காட்சியிலேயே ஹீரோ கமல் என்றும் வில்லன் சதானந்த் என்னும் பிடிவாதமாக இந்தியில் பேசும் சேட்டு ஒருவன் என்று காட்டுகிறார்கள். கிட்டத்தட்ட ஏழெட்டு மணி நேரம் ஓடும் படத்தில் கடைசி முக்கால் மணிக்கு முன் வரை அந்த சேட்டு உயிரோடு இருக்கிறான். கமல், படம் முடிவதற்குள் அநேகமாக இந்தப் படத்தில் நடித்த அத்தனை பேரையும் கொன்று விடுகிறார், ஒருத்தனைத் தவிர. அது அந்த வில்லன் சாதனந்த் தான். அவன் மட்டும் வயசாகி வியாதி வந்து தானாகவே செத்துப் போய் விடுகிறான். வேறு ஒருவனும் பாக்கி இல்லை. எல்லாருமே துலாபாரம் படம் மாதிரி செத்துப் போய் விடுகிறார்கள், ஆடியன்ஸ் உள்பட. பாதி படத்தில் குத்துயிரும் கொலையுயிருமாக வெளியே தப்பிச் சென்ற ஆடியன்ஸும் வீடு போய் சேர்ந்த இந்நேரம் செத்துப் போயிருப்பார்கள். கமல் ஒரு வீர வைஷ்ணவ பரம்பரையைச் சேர்ந்தவர். இந்தப் படம் குருக்ஷேத்ரம் யுத்தத்திற்கு சமமானது. பூபாரம் குறைவதற்காக எடுக்கப் பட்டது. சம்பவாமி யுகே யுகே 🙏 AS RECD KR IRS 7625 -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZop3AiJEM%3DtnpDkOC7tSgu9x-2JPXA1SAaf7bne9WN7AAw%40mail.gmail.com.
