குறள் 54:

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்

திண்மைஉண் டாகப் பெறின்.

இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிட
பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன?.

English Couplet 54:

If woman might of chastity retain,

What choicer treasure doth the world contain

Couplet Explanation:

What is more excellent than a wife, if she possess the stability of
chastity ?

Transliteration(Tamil to English):

peNNin perundhakka yaavula kaRpennum

thiNmaiuN daagap peRin

 KR IRS 4625

---------- Forwarded message ---------
From: Chittanandam V R <[email protected]>
Date: Wed, 4 Jun 2025 at 07:14
Subject: Fwd: Tamilnayagam - Kamba Ramayanam - Rama and Bharatha (15)
To:




இராமாயணம் - திருவடி சூட்டு படலம் (15) - சீதையின் துயரம்

*தமிழ்நாயகம் *


தயரதன் இறந்த செய்தியைப் பரதன் சொல்லக் கேட்ட இராமன் துக்கத்தால் மயங்கி
விழுகிறான். பின் மயக்கம் தெளிந்து எழுகிறான். அவனைத் தேற்றி, அவனுக்குப் பல
அற உரைகள் கூறுகிறார் வசிட்டர். பின், தயரதனுக்கு நீர்க் கடன் செய்கிறான்
இராமன்.

பின், பர்ணசாலையை அடைந்து சீதையிடம் தயரதன் இறந்ததைப் பற்றிக் கூறுகிறான்.
அதைக் கேட்ட சீதை துக்கம் அடைகிறாள். கண்ணீர் விடுகிறாள்.

பாடல்:




*துண்ணெனும் நெஞ்சினாள் ; துளங்கினாள்; துணைக்கண் எனும் கடல் நெடுங் கலுழி
கான்றிட,மண் எனும் செவிலிமேல் வைத்த கையினாள், பண் எனும் கிளவியால் பன்னி,
ஏங்கினாள்.*

பொருள்:  மனதில் துணுக்குற்று  துவண்டாள்  துணை உடைய (இரண்டு)  கண்கள்  என்ற
கடல் நீண்ட
கண்ணீர் வெள்ளத்தை உகுக்க பூமி எனும் செவிலித்தாய் மேல் கைகளை ஊன்றி
இசைப்பாடல் என்று
சொல்லத்தக்க புலம்பி ஏங்கினாள்(கலுழி = நீர்ப்பெருக்கு; கான்றிட =
வெளிப்படுத்த)

மாமனார் இறந்த செய்தியைக் கேட்ட மருமகள் வருந்தினாள். இதுதான் செய்தி. இதில்
என்ன பெரிய
விஷயம் இருக்கிறது என்று நாம் நினைக்கலாம். இதைப் போய்  பெரிய செய்தி என்று
கம்பன் வேலை
மெனக்கெட்டு ஒரு பாடல் போடுகிறானே என்று நாம் நினைக்கக் கூடும். காரணம்
இருக்கிறது.


சீதை அரச குமாரி. செல்லமாக வளர்ந்தவள். காடு என்றால் என்ன என்று கூடத்
தெரியாது. வந்த இடத்தில்
ஏதோ குடும்பப் பிரச்சனை. கைகேயி ஏதோ வரம் கேட்டாள். இராமனுக்கு வர வேண்டிய
அரசு போனது.
அவனைக் காட்டுக்கும் அனுப்பிவிட்டாள் . இராமன் கூடவே சீதையும் கிளம்பி
வந்துவிட்டாள் .

ஒரு நிமிடம் சீதையின் இடத்தில் இருந்து யோசித்துப் பாருங்கள். அரச வாழ்வைத்
துறந்து, மரஉரி உடுத்து
கானகம் வந்தவளின் மன நிலை எப்படி இருக்கும்? தயரதன் மேலும், கைகேயி மேலும்,
பரதன் மேலும் கோபம்
வருமா வராதா? எல்லோரும் சேர்ந்து தன்னையும் தன் கணவனான இராமனையும் இப்படி
செய்துவிட்டார்களே
என்று தோன்றுமா இல்லையா? கோபம் இல்லாவிட்டால்கூட, "எனக்குச் செய்த
துன்பங்களுக்கு ஆண்டவன் தயரதனுக்கு தண்டனை கொடுத்தான் " என்று மனதுக்குள்
நினைக்கலாம் அல்லவா ?

ஒரு சாதாரண பெண் என்றால் அப்படித்தான் நினைத்து இருப்பாள். நினைத்தால் அதை
தவறு என்று சொல்ல முடியாது. திருமணம், பண்டிகை போன்ற நாட்களில் வீட்டில் சில
பெண்கள் இருந்தால், ஒருத்திக்கு கொஞ்சம் உயர்ந்த விலையில் ஒரு பட்டுச்
சேலையும் இன்னொரு பெண்ணுக்கு கொஞ்சம் விலை குறைந்த பட்டுச் சேலையும் எடுத்தால்
, விலை குறைந்த சேலை பெற்ற பெண்ணின் மனம் எப்படி இருக்கும் என்று நமக்குத்
தெரியும். பட்டுச் சேலைதான். கொஞ்சம் விலை வித்தியாசம் அவ்வளவுதான். இருந்தும்
மனம் அதை பெருந்தன்மையாக ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.


ஆனால், சீதை அப்படி நினைக்கக்கூட இல்லை. பண்பின் உச்சம் தொடுகிறாள். இறந்து
போன தயரதனுக்காக வருந்தி அழுகிறாள்.

குடும்பத்தில் பிரச்சனைகள் வரும். ஒருவருக்குக் கூட வரும். இன்னொருவருக்குக்
குறைச்சலாக வரும். பெண்கள்
அனுசரித்துப் போக வேண்டும். வித்தியாசங்களை ஊதி ஊதி பெரிசாக்கி குடும்பத்தில்
பிளவை உண்டு பண்ணி
விடக் கூடாது.

இராமனுக்கு வர வேண்டிய அரசை பரதனுக்கு கொடுத்தான் தயரதன். இராமன் அதை ஏற்றுக்
கொண்டான். இராமன் ஏற்றுக் கொண்டதால் சீதையும் அதை முழு மனதுடன் ஏற்றுக்
கொண்டாள். கணவன் ஒரு முடிவை எடுத்துவிட்டால் அதற்குத் துணை போக வேண்டும். "நீ
வேணும்னா காட்டுக்குப் போ, என்னால் வந்து அங்கு கஷ்டப் பட முடியாது " என்று
சொல்லி  இருக்கலாம். சொல்லவில்லை.

தயரதன் இறந்த செய்தி கேட்டு , அப்பாடா சிக்கல் தீர்ந்தது. பரதன் அரசைத் தர
வந்திருக்கிறான் என்று நினைத்து
இராமனைத் தனியாக அழைத்து "பேசாமல் அரசை ஏற்றுக் கொள்ளுங்கள். நாம் அயோத்தி
போகலாம் ..." என்று சொல்லவில்லை. இறந்த தயரதனுக்காக அழுகிறாள்.

பெண்களுக்கு பாடம் சொல்லித் தருகிறான் கம்பன். குடும்பத்தை எப்படி மேலே
எடுத்துச் செல்ல வேண்டும் என்று.
பெண்கள் மனது வைக்காமல் குடும்பம் ஒரு அடிகூட மேலே போக முடியாது. மாமியார்
கொடுமைக்காரியாக
இருக்கலாம், கைகேயி போல. மாமியார் பேச்சைக் கேட்டுக் கொண்டு மாமனார் ஆடலாம்,
தயரதன் போல.
அப்பா அம்மா சொல்லைக் கேட்டு, மறு பேச்சு கேட்காமல் கணவன் இருக்கலாம்,
இராமனைப் போல.

மனைவி என்ன செய்ய வேண்டும் என்று சீதையின் வாயிலாக கம்பன் காட்டுகிறான்.

பாடம் படித்துக் கொள்ள வேண்டும். சீதை மட்டும் கொஞ்சம் முரண்டு இருந்தால்,
இராமனுக்கு ஒரு துளி பெருமையும் வந்திருக்காது.

அது இராமாயணம் அல்ல. சீதாயணம் என்பதே பொருத்தமான பெயர்.

*-- தமிழ்நாயகம் *
***********************************
*சித்தானந்தம் *

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZorxMn5qDU2OzRWkVj7BcbcAOiVV_zKZToH%3DpF8KcJGKfw%40mail.gmail.com.

Reply via email to