---------- Forwarded message --------- From: N Sekar <[email protected]> Date: Mon, May 19, 2025, 6:25 PM Subject: Fwd - Sujatha To: Kerala Iyer <[email protected]>, Narayanaswamy Sekar < [email protected]>, Rangarajan T.N.C. <[email protected]>, Chittanandam V. R. <[email protected]>, Srinivasan Sridharan < [email protected]>, Mathangi K. Kumar <[email protected]>, Rama (Iyer 123 Group) <[email protected]>, Suryanarayana Ambadipudi < [email protected]>, Mani APS <[email protected]>
தமிழில் “படி” - சுஜாதா அலுவலகங்களில் கடிதம் எழுதும்போது ஒருவருக்கு மேல் அந்தக் கடிதம் போய்ச் சேர வேண்டுமானால் ‘ஸி.ஸி’ (c.c.) என்கிற சுருக்கத்தைப் பயன்படுத்துகிறோம். இந்த ‘ஸி.ஸி’ என்பது என்ன என்று நான் பலமுறை வியந்திருக்கிறேன். வில்லியம் ஸஃபைரின் ‘Take my word for it’ (என் வார்த்தையைக் கேளுங்கள்) என்கிற புத்தகத்தைப் படித்தபோதுதான் ‘ஸி.ஸி’ என்பது கார்பன் காப்பி என்பதன் சுருக்கம் என்று தெரிந்தது. இன்றைய நாட்களில் ஜெராக்ஸ் போன்றவை வந்தபின்னும் ‘ஸி.ஸி’ போகவில்லை. இன்டர்நெட்டில்கூட இ-மெயில் எழுதும்போது கடிதத்தின் பிரதி மற்றொரு விலாசத்துக்கும் போகவேண்டும் என்றால் ‘ஸி.ஸி’ யைப் பயன்படுத்துகிறார்கள்.தமிழில் அதற்கு ‘படி’ என்கிற வார்த்தை சரியானது. படி என்பது தமிழில் மிக முக்கியமான சொல். அதற்கு சுமார் நாற்பது அல்லது ஐம்பது சொற் பொருள்கள் இருக்கின்றன. தூசி படிகிறது என்கிறோம். அடியாத மாடு படியாது எனும்போது வசமாதலைச் சொல்கிறோம். பாடம் படி, ஏன் பாட்டுப்படி என்றுகூட தென்மாவட்டங்களில் சொல்கிறோம். ‘எழுத்துப் படிந்திருக்கிறது’ எனும்போது ‘கையெழுத்து திருத்தியமைந்திருக்கிறது’ என்று அர்த்தம். கீழ்ப்படிதல் பற்றி நம் அனைவருக்கும் தெரியும். திருவாசகத்தில் களித்தலுக்கு ‘தடங்கடலிற் படிவாம்’ என்று பிரயோகம் உள்ளது. பாரம் வைத்தால் தைத்த இலை படியும் எனும்போது அமுங்குதல். வெள்ளம் படிந்தது எனும்போது அது தணிதல். இவையெல்லாம் intransitive வகை வினைச்சொற்கள். transitive வகையிலும் பல படிகள் உள்ளன. புத்தகம் படிப்பது. இதில் படி என்பதற்கு சொல்லுதல், துதித்தல், பழகுதல் என்றெல்லாம் பொருள் உண்டு. பெயர்ச்சொல்லாக மாடிப்படி, முதற்படி-தன்மை; தராசின் படிக்கல், நித்தியப்படி, பஞ்சப்படி, என்று இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அப்படி, இப்படி, எப்படி, வரும்படி, போகும்படி, நினைத்தபடி, நடந்தபடி எனும்போதெல்லாம் படியின் எத்தனையோ விஸ்தாரங்கள் கிடைக்கின்றன. அவற்றில் நாம் விரும்பும்படி, பிரதியெடுத்தல் பொருள்பட, ஒத்த பிரதி என்கிற அர்த்தத்தில்.. ‘கிழித்த ஓலை படியோலை’ என்று பெரிய புராணத்தில் வருகிறது. படியெடுத்தல் என்பது ‘விக்கிரகத்துக்குப் படியெடுத்தது போலே’ என்று குரு பரம்பரையிலும் ‘படியெடுத்துரைத்துக் காட்டும் படித்தன்று படிவம்’ என்று கம்பராமாயணத்திலும் வருகிறது. இதிலிருந்து கிளைத்தெழும் படிமம் என்கிற அருமையான வார்த்தை பிரதிமை, பிம்பம், உதாரணம், வடிவம், தவவேடம், விரதம், சன்னதம், முகம் பார்க்கும் கண்ணாடி என்று விரிகிறது. விமர்சகர்கள் ‘metaphor’ என்கிற வார்த்தைக்கு ஈடாக ‘படிமம்’ பயன்படுத்துகிறார்கள். ‘படி’ என்று ஒரு சிறிய வார்த்தை தான் எத்தனை எத்தனை சிறப்பானது. தமிழில் கலைச்சொற்கள் அமைக்கமுடியாது என்று சொல்பவர்களை *படிக்கூண்டிலிருந்து படித்துறையில் உருட்டித் தள்ளும்படி வேண்டுகிறேன். சுஜாதா, - ‘சுஜாதாட்ஸ்’ 18.2.1998 Yahoo Mail: Search, Organize, Conquer <https://mail.onelink.me/107872968?pid=nativeplacement&c=US_Acquisition_YMktg_315_SearchOrgConquer_EmailSignature&af_sub1=Acquisition&af_sub2=US_YMktg&af_sub3=&af_sub4=100002039&af_sub5=C01_Email_Static_&af_ios_store_cpp=0c38e4b0-a27e-40f9-a211-f4e2de32ab91&af_android_url=https://play.google.com/store/apps/details?id=com.yahoo.mobile.client.android.mail&listing=search_organize_conquer> -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81ZftctHHA53jxR9mMGcyvdFr6pedezTCQfaRpMTdm%3DdtZw%40mail.gmail.com.
