Beautiful On Fri, May 16, 2025, 12:22 Rajaram Krishnamurthy <[email protected]> wrote:
> Can any one in the groups may not write otherwise their mother grandma and > wife and daughter also as the 4th? KR IRS 16525 > > ---------- Forwarded message --------- > From: Chittanandam V R <[email protected]> > Date: Fri, 16 May 2025 at 10:51 > Subject: Fwd: Sujatha - The three women in my life > To: > > > > > > *சுவாரஸ்யமான கட்டுரை * > > > *மூன்று பெண்கள் - சுஜாதா* > > * 1. என் பாட்டி* > > *என் வாழ்வில் முக்கியமான மூன்று பெண்களை பற்றி யோசிக்கத் தோன்றுகிறது. பள்ளி > கல்லூரி நாட்களில் 10 வருடம் ஸ்ரீரங்கத்தில் பாட்டியுடன் கட்டுப்பாடாக > வளர்ந்தவன் நான். அப்பாவை பணி நிமித்தம் அடிக்கடி மாற்றுவார்கள் என்று சொல்லி > படிப்பின் தொடர்ச்சிக்காக பாட்டியிடம் அனுப்பப்பட்டேன். இது ஒரு லேசான > காரணம்தான். **அப்பாவுக்கு அடிக்கடி மாற்றம் ஏற்படவில்லை. என் தம்பி > பெரும்பாலும் அவர்களுடன்தான் இருந்தான். படித்தான். பாட்டியின் கவனத்துடன் > வளர்ந்தது ஒருவாறு என் பிற்கால மனோ நிலைகளையும், குணநலன்களையும் அமைத்தது > என்பதில் சந்தேகம் இல்லை.* > > *கோதையம்மாள் என்கிற ருக்மணி அம்மாள் என்று மணியார்டர் பாரத்தில் > கையெழுத்துப் போடத் தெரிந்த பாட்டி, இருபத்தி மூன்றாவது வயதில் கணவனை > இழந்தவள். நான்கு குழந்தைகளுடன் தன் அப்பா வீட்டில் சரணடைந்தாள். அவர்களை > வளர்த்து ஆளாக்கி ஒரு தலைமுறையை உருவாக்கி அடுத்த தலைமுறையான பேரப்பிள்ளைகளை > காலேஜ் போகும் வயதுவரை பார்த்தவள். * > > *வாழ்வில் பல சந்தோஷங்கள் சீக்கிரமே மறுக்கப்பட்டதால் நிச்சயம் ஒரு தனிப்பட்ட > கோபம் அவரிடம் இருந்தது, வெறுப்பு இல்லை. பாசமும் கண்டிப்பும் இருந்தது. என் > சினேகிதர்களில் யார் பாடம் படிக்க வருகிறார்கள், யார் கதை பேச என்பதை சுலபமாக > கண்டுபிடித்து விடுவாள். அடுத்த அறையில் நான் பாடம் படிக்கிறேனா, கதை > படிக்கிறேனா என்பதை கண்டுபிடிக்கும் 'டெலிபதி’ இருந்தது.* > > *“பாடம் படித்தால் இரைந்து, சத்தம்போட்டு படி. அப்போதுதான் மூளையில் ஏறும்" > என்பாள். சாயங்காலம் காலேஜிலிருந்து திரும்பி வர லேட் என்றால் என்னதான் > பிராக்டிகல் இருந்தது, வாலிபால் ஆடப்போறேன், நோட்ஸ் எடுக்க போனேன் என்று சில > சமயம் உண்மையான காரணங்களைச் சொன்னாலும் சினிமாவுக்குத்தான் போயிருக்கிறேன் > என்ற தீர்மானமான முடிவுக்கு வருவார். * > > *அதற்காக சில ஒற்றர்களையும் நியமித்திருந்தாள். “ கண்ணா, எங்க ரெங்கராஜனை > காலேஜில் பார்த்தாயா?”* > > *“ இன்னும் வரவில்லையா?”* > > *“ ஏதாவது ஸ்பெஷல் கிளாஸா?”* > > *“இல்லையே மாமி, அவனையும், தம்புவையும் கெய்ட்டி தியேட்டர் பக்கம் பார்த்த > மாதிரி இருந்தது. ஒரு வேளை அங்க பஸ் சுலபமா கிடைக்கும்னு....."* > > *"வரட்டும் அவன்"* > > *வரும்போது பாட்டி பார்க்கும் பார்வையிலிருந்தே தெரிந்துகொண்டு உண்மையைக் > கக்கிவிடுவேன். அதுதான் ஒரே வழி. இல்லையென்றால், "உங்கப்பனுக்கு இந்த க்ஷணம் > கடுதாசி எழுதிடறேன். உன்னை என்னால வளர்க்க முடியாது. தத்தாரி ஆயிட்டே"... > இத்யாதி அர்ச்சனைகள். பிரபந்தம் படிப்பாள். அர்த்தம் புரியாத விசிஷ்டாத்வைத > காலட்சேபங்களில் போய் உட்கார்ந்து கொள்வாள். * > > *இந்த சூழ்நிலையில் எப்படி என்னால் காதல், கண்ணால் பேசுதல் போன்ற மென்மையான > சமாச்சாரங்கள் முடியும்? பாட்டி தன்னுடைய அறுபத்தியிரண்டாவது வயதில் இறந்து > போனபோது எத்தனை தூரம் என்னைக் காப்பாற்றியிருக்கிறாள் என்பதை நினைத்துப் > பார்க்கிறேன். ஒரு பெரிய சொத்துக்கு என்னை சுவீகாரம் தருவதை கடுமையாக > எதிர்த்துத் தடுத்திருக்கிறாள். அந்த சுவீகாரம் நடந்திருந்தால் நான்.. * > > *மஹேந்திரமங்கலத்திலோ, குவளைக்குடியிலோ ஒரு பண்ணையாராக வெள்ளிச் சொம்பும், > பன்னீர்ப் புகையிலையும், பத்தமடைப் பாயும், இஸ்பேட் ஆட்டமுமாக > வளர்ந்திருப்பேன். எழுத்தாளனாகியிருப்பேனா? சந்தேகம்!* > > ********************* > > *2. அடுத்தது என் அம்மா* > > *பலபேர் என்னைக் கேட்டிருக்கிறார்கள். “உன் அப்பாவைப் பற்றி நிறைய > எழுதியிருக்கிறாய். உன் அம்மாவைப் பற்றி அதிகம் எழுதவில்லையே?” என்று. அம்மா > மிகப் பெரிய பணக்காரக் குடும்பத்திலிருந்து வந்து பரிபூரணமாக தன்னை அப்பாவின் > தேவைகளுக்கும் பிடிவாதங்களுக்கும் (இனிமேல் பட்டுப்புடவை கூடாது. கதர்தான்) > அட்ஜெஸ்ட் செய்து கொண்டாள். * > > *அவள் மிக அழகாக இருந்ததும், அதனால் அவளுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளும் எனக்கு > அந்தரங்கமானவை. அம்மா மிக நன்றாக சமைப்பாள். எல்லா காரியங்களும் திறமையாக > செய்வாள். தையல் ( எனக்கு சட்டை கூட தைத்திருக்கிறாள். லீவு நாட்களில் மட்டும் > போட்டுக் கொள்வேன்) எம்பிராய்டரி, கூடை பின்னுவது எல்லாம் கொஞ்சம் செய்வாள். * > > *ஊட்டியில் எங்கள் வீட்டு எருமையிடம் பால் கறந்து இருக்கிறாள். ‘ நில்லுடா’ > என்று சொல்லி என் அருகில் இருந்த பாம்பை அடித்து இருக்கிறாள் ( சாகடித்து > சம்ஸ்காரம் பண்ணினாள்). வீணை வாசிப்பாள். ஒரு தடவை அவளிடம் இங்க் பேனா திறக்க > கொடுத்தபோது எந்தப் பக்கம் திருகுவது என்று தெரியாமல் நாக்கைக் > கடித்துக்கொண்டு அதை டைட் செய்தே திறந்து விட்டாள்.* > > *சின்ன வயசிலேயே கல்யாணம் செய்து கொண்டு விட்டதால் பள்ளிக்கூடப் படிப்பு > அதிகம் இல்லை. தமிழில் கவிதை கலந்த ர, ற தப்புகளுடன் கடிதம் எழுதுவாள். > ஆங்கிலம் கற்றுக்கொள்ள ரொம்ப ஆசைப்பட்டாள். என்னை அடிக்கடி கேட்டுக் > கொண்டிருந்தாள். லிப்கோ ஆசானை வைத்துக்கொண்டு அப்பாவிடமும், தம்பியிடம், > என்னிடமும் சொல்லித் தா என்று கெஞ்சி இருக்கிறாள். * > > *“ போம்மா…. உனக்கு வராது” என்று வெத்து அவசரங்களில் அந்த இன்பத்தை இழந்து > விட்டோம். சொல்லித் தரலாம் என்று தீர்மானித்தபோது இறந்து விட்டாள். இப்போதும் > சில நாள் கனவுகளில் சொல்லித் தருகிறேன்.* > > ******************* > > *மூன்றாவது என் மனைவி சுஜாதா* > > *எங்கள் கல்யாணம் நிகழ்ந்து 37 வருடங்கள் ஆகின்றன. இன்னும் அவளை முழுமையாக > புரிந்து கொண்டதாக சொல்ல முடியாது. அவ்வப்போது வியப்பாக ஏதாவது செய்வாள். இந்த > கணந்தோறும் வியப்புதான் திருமண வாழ்க்கையில் எங்களுடன் வளர்ந்தது. டெல்லியில் > கல்யாணமான புதிதில் அவளை எதிர் கடைக்குப் போய் ஒரு பல்பு வாங்கி வரச் > சொன்னேன். * > > *நான் என் ரூமில் உட்கார்ந்து கொண்டு க்ராஸ்வேர்டு போட்டுக் கொண்டிருந்தேன். > அவள் மாடிப்படி ஏறி வரும் போது கால் தடுக்கி அதை உடைத்து விட்டாள். > உடைத்துவிட்டு ஓடிவந்து என்னிடம் மூச்சிரைக்க சொன்னாள், “ பல்பை > உடைச்சுட்டேன். கொடுத்த காசு வேஸ்ட்”* > > *நான் “ போனால் போகிறது, வேறு பல்பு வாங்கிக் கொள்ளலாம்” என்றேன்.* > > *இந்த பதில் அவளை பாதித்திருக்க வேண்டும். கண்களில் கண்ணீருடன், “அதெப்படி > உங்களுக்கு இப்படி ஒரு அலட்சியம்?” என்றாள்.* > > *“ ஏன்?”* > > *"பல்பை நான் உடைச்சதுக்கு ஏன் என்னைத் திட்டலை?"* > > *இப்படி ஒரு கோபமா?* > > *வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்* > *யாருள்ளித் தும்மினீர் என்று.* > > *(நான் தும்ம, அவள் இயல்பாகவே வாழ்த்தினாள்; அப்படி வாழ்த்தியவளே மறுபடியும் > நீர் இப்போது எவள் உம்மை நினைத்ததால் தும்மினீர், என்று கேட்டு கோபித்து > அழுதாள் - சுஜாதா எழுதிய திருக்குறள் உரை)* > > *என்கிற திருக்குறள்தான் ஞாபகத்துக்கு வந்தது.* > > *நன்றி : மதுரை கிருஷ்ணன் * > > ****************** > > *சித்தானந்தம்* > > -- > You received this message because you are subscribed to the Google Groups > "Thatha_Patty" group. > To unsubscribe from this group and stop receiving emails from it, send an > email to [email protected]. > To view this discussion visit > https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoqZY-xekSvOjS894JwtKX6FRwZnk65NKVCqW%3D-8N%3D4Agw%40mail.gmail.com > <https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoqZY-xekSvOjS894JwtKX6FRwZnk65NKVCqW%3D-8N%3D4Agw%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer> > . > -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJiWWoK6JHfrVR91PgeYFQv%3DJfh-nwDk3FA%2B9uPnXa5LRj85Jg%40mail.gmail.com.
