---------- Forwarded message ---------
From: N Sekar <[email protected]>
Date: Sat, May 10, 2025, 2:23 PM
Subject: Fw: -​sharing கொஞ்சம் சிரிங்க *🕞டைம் பாஸ்:🕒*
To: Kerala Iyer <[email protected]>, Narayanaswamy Sekar <
[email protected]>, Rangarajan T.N.C. <[email protected]>,
Chittanandam V. R. <[email protected]>, Mathangi K. Kumar <
[email protected]>, Srinivasan Sridharan <[email protected]>,
Rama (Iyer 123 Group) <[email protected]>, Suryanarayana Ambadipudi <
[email protected]>, Mani APS <[email protected]>


Fwded by a friend.

N Sekar



--sharing
கொஞ்சம் சிரிங்க
*[image: ��]டைம் பாஸ்:[image: ��]*
1. உலகத்திலேயே சிறந்த ஜோடி செருப்புதான்... ஒன்றை பிரிந்தால் மற்றொன்று வாழவே
வாழாது..!
2. எல்லா பெண்களையும் விசிலடித்து திரும்பி பார்க்க வைத்தாலும் செருப்படி
வாங்காத ஒரே ஜீவன் குக்கர்
4. நிம்மதியாக இருக்கும் வயதில் மனைவியைத் தேடுவதும், மனைவி வந்தப்பின்
நிம்மதியைத் தேடுவதுமே.. ஆண்களின் வாழ்க்கை தேடல்..!!
5. இந்த உலகத்தில் என்னையும் ஒரு மனிதனாக மதித்து பொன்னாடை போர்த்தும் ஒரே
நபர்.. சலூன் கடைக்காரர் மட்டுமே..!
"நீங்க வெட்டுங்க பாஸ்.."..!! .[image: ��]
6. ஒரு புடவை வாங்க முன்னூறு புடவைகளைப் புரட்டிப் பார்த்த மனைவியிடம்
எரிச்சலுடன்
கணவன் சொன்னான்:
"ஆதிகாலத்தில் ஏவாள் வெறும் இலையை மட்டுமே உடுத்தி இருந்தாள். இது போன்ற
தொல்லைகள் நல்ல வேளை ஆதாமுக்கு இல்லை."
மனைவி சொன்ன பதில்:
"அதுக்கு அவன் எத்தனை மரம் ஏறி இறங்கினானோ?" [image: ��][image: ��][image: ��]
7. தொலைபேசியில் ஒரு பதற்றமான குரல்.. [image: ��]
"டேய் மச்சான்... எங்கடா இருக்க?"
"வீட்லதான்டா ....."
"அப்பாடா... இப்பதான்டா நிம்மதியா இருக்கு...!!"
"ஏன்டா? என்ன விஷயம்??"
"அதில்லடா.....
காலையில பேப்பரை பார்த்தேன். அதுல, உங்க தெருவுல வெட்டியா சுத்திகிட்டிருந்த
நாய்களை எல்லாம் கார்பரேசன்-காரங்க புடிச்சுட்டு போனதா செய்தி
போட்டிருந்துச்சு. ...." [image: ��]
8. அம்மா: என்னடி உன் புருஷன் தினமும் இப்படி குடிச்சுட்டு வராரே
நல்லாவா இருக்கு...
மகள் : தெரியலை அம்மா நான் இன்னும் டேஸ்ட் பண்ணி பார்க்கலை!!
9. நீ என் தங்கக் குட்டியாம்… தாத்தா சொல்றதைக் கேப்பியாம்…
நான் உன் புத்தகப் பையைத் தூக்கிட்டு வருவேனாம்…. பாப்பா நடந்து வருவியாம்.
வேண்டாம் தாத்தா… என் பையைத் தூக்கி நீ கஷ்டப்பட வேணாம். நானே என் பையைத்
தூக்கிக்கிறேன்.
நீ என்னைத் தூக்கிக்கிட்டு வந்தாப் போதும்…
10. “ஏன் ஸ்கூட்டரை திருடினே…?”
“டிராபிக் போலீஸ்காரர்தாங்க சீக்கிரம் வண்டிய எடு, வண்டிய எடுன்னு
அவசரப்படுத்தினாரு எசமான்..!”
11. பகல்ல உங்களுக்குக் கண் தெரியாதா டாக்டர்….?”
“தெரியுமே…ஏன் கேட்கறீங்க….. ?”
“இல்ல…பார்வை நேரம் மாலை ஆறிலிருந்து எட்டுவரைன்னு போர்டு
வெச்சிருக்கீங்களே… அதான் கேட்டேன்.!”
12. முதலாளி: டேய் முனியா, நான் கொஞ்சம் வீட்டுக்குப்போய் ஓய்வு
எடுத்துக்கிட்டு வர்றேன்… நீ கடையைப் பார்த்துக்க…
முனியன்: உங்களுக்கு எதுக்கு சிரமம் முதலாளி? நானே போய் ஓய்வை எடுத்துக்கிட்டு
வந்துடறேனே!

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81ZdOGe%3Dhqd4RpaZbn8_Pygh51R2c523ET3j%2BpnxU0NY9fw%40mail.gmail.com.

Reply via email to