---------- Forwarded message ---------
From: N Sekar <[email protected]>
Date: Sat, Mar 29, 2025, 6:22 PM
Subject: Fwd - Why raw banana for Amavasya?
To: Kerala Iyer <[email protected]>, Narayanaswamy Sekar <
[email protected]>, Rangarajan T.N.C. <[email protected]>,
Chittanandam V. R. <[email protected]>, Mathangi K. Kumar <
[email protected]>, Srinivasan Sridharan <[email protected]>,
Suryanarayana Ambadipudi <[email protected]>, Rama (Iyer 123 Group) <
[email protected]>, Dr Sundar <[email protected]>, Mani APS <
[email protected]>


அமாவாசை அன்று வாழைக்காய் கறி அவசியம் சாப்பாட்டில் இருக்கவேண்டும்.
எப்பாடுபட்டாவது எங்கு அலைந்து திரிந்தாலாவது வாழைக்காயுடன் தான் வீட்டுக்கு
வர வேண்டும்.
ஆனால் சிறு வயதிலிருந்தே இன்னமும் விடை கிடைக்காத கேள்வி:
அமாவாசைக்கும் வாழைக்காய்க்கும் என்ன சம்பந்தம். அமாவாசை அன்று ஏன் கட்டாயம்
வாழைக்காய் சாப்பிட வேண்டும்? இதற்கு புராண காரணம் ஏதேனுமுன்டா? சொல்லுங்களேன்
தெரிந்தவர்கள்.

எனது பதில்:
நம்முடைய பித்ரு காரியங்கள் விஷ்னு சாக்ஷியாகவே செய்கிறோம். அதனால் தான்
ச்ராதத்தில் விஷ்ணு இலை என ஒருவரை வரித்து செய்யப்பகிறது. மேலும் தக்ஷினை
தாம்பூலம் முதலியவை துளசியுடன் (விஷ்ணு) சேர்த்து அளிக்கப்படுகிறது. மேலும்
சமையலில் பயத்தம் பருப்பு எனும் பாசி பருப்பு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
பாசிபயறு என்பது புதனின் தான்யம், புதனின் அதிதேவதை விஷ்ணு.

மேலும் சங்கல்பங்கள் செய்யும்போது
திதிர் விஷ்ணு ததா வார: நக்ஷத்ரம் "விஷ்ணுரேவச
யோகஸ்ச கரணஞ்சைவ சர்வம் விஷ்ணு மயம் ஜகத்" என கூறி விஷ்ணு சாக்ஷியாக
செய்கிறோம்.

அந்த விதத்தில் வாழைக்காய் புதனின் (விஷ்ணு) காரகமும் வாழைப்பழம் குருவின்
(பிரம்மா) காரகமும் கொண்டது.

ஸ்ரார்தம் என்பது வசு ருத்ர ஆதித்ய எனும் மூன்று தலைமுறை மரபியலோடு
தொடர்புடையது. அதேபோல வாழைக்காயும் குழந்தை பிறப்பு மற்றும் மரபியல்
தொடர்புடைய காயாகும். மேலும் வாழை விதையிலிருந்து வருவதில்லை ஒரு
கன்றிலிருத்து தான் மற்றொறு கன்று தோன்றுகிறது.மேலும் வாழையின் பூ,
பிஞ்சு,காய், கனி, தண்டு, இலை,நார் என எல்லா பாகமும் பயனை தந்து மோட்சம்
அடைவதால் வாழைக்காய் பித்ரு காரியத்தில் பித்ரு மோட்சத்திற்கான காயாக உபயோக
படுத்தப்படுகிறது.

Yahoo Mail: Search, Organize, Conquer
<https://mail.onelink.me/107872968?pid=nativeplacement&c=US_Acquisition_YMktg_315_SearchOrgConquer_EmailSignature&af_sub1=Acquisition&af_sub2=US_YMktg&af_sub3=&af_sub4=100002039&af_sub5=C01_Email_Static_&af_ios_store_cpp=0c38e4b0-a27e-40f9-a211-f4e2de32ab91&af_android_url=https://play.google.com/store/apps/details?id=com.yahoo.mobile.client.android.mail&listing=search_organize_conquer>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81Zcw2xD-Y6TZQZAxir%3D2Ce2vLXYmffYaC5KSsqDJZHawSQ%40mail.gmail.com.

Reply via email to