குறள் 54:

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்

திண்மைஉண் டாகப் பெறின்.

இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிட
பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன?.

If woman might of chastity retain,

What choicer treasure doth the world contain

Couplet Explanation:

What is more excellent than a wife, if she possess the stability of
chastity ?

peNNin perundhakka yaavula kaRpennum

thiNmaiuN daagap peRin

வாழ்தல் என்பது உள்ளது சிறத்தல் ஆகும். அதற்கு துணையாக இருக்கும் எதிர்பாலினம்
சிறப்பாக அமைந்துவிட்டால் வளம்பல கிடைத்துவிடும். ஆனால் நிர்வாகத் திறன்
இல்லாதவர் என்றால் ஏற்றம் இருக்காது. வேண்டிய பொழுது வரும் மழைப் போன்றவள்
மனைவி மேலும், தன்னைக் காத்து தன்னை சார்ந்தவரையும் காப்பவள் எனவே, பெற
வேண்டியது நல்ல துணையே. அதுவே மங்களம்.

K Rajaram IRS  16325

---------- Forwarded message ---------
From: Chittanandam V R <[email protected]>
Date: Sat, 15 Mar 2025 at 21:08
Subject: Fwd: Tamilnayagam - Kamba Ramayanam - Thaarai, Vaali's Consort (1)
To:








> திரு.தமிழ்நாயகம் அவர்கள் வாலியின் மனைவி தாரையின்  சூழ்நிலைக்கேற்ப
> நடந்துகொள்ளும்
> சாமர்த்தியம், பேச்சுத் திறன் ஆகியவை குறித்து ஒரு கட்டுரைத் தொடர்
> எழுதியுள்ளார். 15 கட்டுரைகள்
> இதில் அடங்கும். அவற்றினை ஒவ்வொன்றாக உங்களுக்கு அனுப்புகின்றேன். ரசித்து
> ருசியுங்கள்.
>
> இராமாயணம் - தாரையின் ஆளுமை - பாகம் 1 - வாலிக்கு தாரையின் அறிவுரை
>
> *தமிழ்நாயகம் *
>
> இராமாயணத்தில் பெண் பாத்திரங்கள் மிக ஆளுமை உடையவர்களாக இருக்கிறார்கள். ஓரிரவில்
> ஒரு சாம்ராஜ்யத்தின் தலை எழுத்தை மாற்றி எழுதிய கூனியாகட்டும், இரண்டே
> வரத்தால் ஒரு சக்ரவர்த்தியைக் கொன்று, புது சக்ரவர்த்தியைக் கானகம் அனுப்பி,
> யாரும் நினைக்காத ஒருவனை சக்ரவர்த்தியாக்கிய கைகேயியாகட்டும், முக்கோடி
> வாழ்நாள் கொண்ட இராவணனை அற்பாயுளில் முடித்த சூர்ப்பனகையாகட்டும்,
> எல்லோரும் மிக மிக வலிமையான ஆளுமை உடையவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.
>
> வாலியின் மனைவி தாரை. ஒரு பெண்ணின் ஆளுமையை தாரையின் பாத்திரத்தில்
> வடிக்கிறான் கம்பன்.
> தாரை அரசாங்க விஷயங்களில் மிக மிக ஆழமாக ஈடுபட்டிருக்கிறாள். இன்னும் சொல்லப்
> போனால் ஒற்றர்கள் தாரையிடம் பல விஷயங்களை சொல்லி இருக்க வேண்டும். நாட்டில்
> நடப்பவைகளைப் பற்றி வாலிக்குத் தெரியாத விஷயங்கள்கூடத்  தாரைக்குத்
> தெரிந்திருக்கிறது.
>
> வாலியை சுக்ரீவன் போருக்கு அழைக்கிறான். இத்தனை நாள் பயந்து ஒளிந்து
> இருந்தவன் எப்படி இன்று துணிவோடு சண்டைக்கு வருகிறான் என்று சிந்திக்கத் தவறி
> விடுகிறான் வாலி. வலி(மை) வாலியைத் தடுமாற வைத்தது.
>
> தாரை தடுத்துச் சொல்கிறாள். சுக்ரீவனோடு போருக்குப் போகிறேன் என்று வாலி
> சொல்லக் கேட்ட தாரை சொல்லுவாள் "அரசனே, சுக்ரீவனுக்கு உயிரினும் இனிய நட்பாக
> இராமன் என்பவன் கிடைத்திருக்கிறான்; அவன் உன் உயிரை எடுக்க உறுதி கூறி
> இருக்கிறான். இதை நான் நம் மேல் தூய அன்புள்ளவர்கள் சொல்லக் கேட்டேன் "
>
> பாடல்
>
>
>
>
>
> *அன்னது கேட்டவள், 'அரச!' "ஆயவற்குஇன் உயிர் நட்பு அமைந்து இராமன்
> என்பவன்,உன் உயிர் கோடலுக்கு உடன் வந்தான்'' என, துன்னிய அன்பினர் சொல்லினார்'
> என்றாள்.* (வாலி வதைப் படலம், கிட்கிந்தா காண்டம்)
>
> பொருள்:  அதைக் கேட்டவள்,  "அரசனே!  அவர்களுக்கு  உயிரினும் இனிய நட்பாக
> அமைந்த   இராமன் என்பவன்  உன் உயிரை எடுப்பதற்கு  உடன் வந்தான் என நமக்கு
> நெருங்கிய அன்புள்ளவர்கள்  சொல்லினார்" என்றாள்.
>
> சுக்ரீவனுக்கும் இராமனுக்கும் இடையிலான நட்பைப் பற்றி வாலிக்குத்
> தெரியவில்லை. தாரைக்குத் தெரிந்திருக்கிறது. அது மட்டும் அல்ல, சொன்னது ஒரு
> ஆள் இல்லை. பல பேர் அவளிடம் சொல்லி இருக்கிறார்கள். "சொல்லினார்" என்றாள்.
>
> *தமிழ்நாயகம் *
> **********************************
> *சித்தானந்தம் *
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZor_qgPRPoiW4freUb-7DxyLHkJ%3DEMAUSgn83rqofb9v8g%40mail.gmail.com.

Reply via email to