Alternatively < கண்ணன் பாட்டு
(பராசக்தியைக் குழந்தையாகக் கண்டு சொல்லிய பாட்டு) (ராகம் - பைரவி, தாளம் - ரூபகம்) ஸ ஸ ஸ - ஸா ஸா - பபப தநீத - பதப - பா பபப -பதப - பமா - கரிஸா ரிகம - ரிகரி - ஸா என்ற ஸ்வர வரிசைகளை மாதிரியாக வைத்துக்கொண்டு மனோவாபப்படி மாற்றி பாடுக. சின்னஞ் சிறு கிளியே, - கண்ணம்மா! செல்வக் களஞ்சியமே! என்னைக் கலி தீர்த்தே - உலகில் ஏற்றம் புரிய வந்தாய்! ... 1 பிள்ளைக் கனியமுதே - கண்ணம்மா பேசும்பொற் சித்திரமே! அள்ளி யணைத்திடவே - என் முன்னே ஆடி வருந் தேனே! . ... 2 ஓடி வருகையிலே - கண்ணம்மா! உள்ளங் குளிரு தடீ! ஆடித்திரிதல் கண்டால் - உன்னைப்போய் ஆவி தழுவு தடீ! ... 3 உச்சி தனை முகந்தால் - கருவம் ஓங்கி வளரு தடீ! மெச்சி யுனை யூரார் - புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடீ! ... 4 கன்னத்தில் முத்தமிட்டால் - உள்ளந்தான் கள்வெறி கொள்ளு தடீ! உன்னைத் தழுவிடிலோ - கண்ணம்மா! உன்மத்த மாகுதடீ! ... 5 சற்றுன் முகஞ் சிவந்தால் - மனது சஞ்சல மாகு தடீ! நெற்றி சுருங்கக் கண்டால் - எனக்கு நெஞ்சம் பதைக்கு தடீ! ... 6 உன்கண்ணில் நீர்வழிந்தால் - என்நெஞ்சில் உதிரம் கொட்டு தடீ! என்கண்ணிற் பாவையன்றோ? - கண்ணம்மா! என்னுயிர் நின்ன தன்றோ? ... 7 சொல்லு மழலையிலே - கண்ணம்மா! துன்பங்கள் தீர்த்திடு வாய்; முல்லைச் சிரிப்பாலே - எனது மூர்க்கந் தவிர்த்திடு வாய். ... 8 இன்பக் கதைகளெல்லாம் - உன்னைப்போல் ஏடுகள் சொல்வ துண்டோ ? அன்பு தருவதிலே - உனைநேர் ஆகுமோர் தெய்வ முண்டோ ? ... 9 மார்பில் அணிவதற்கே - உன்னைப்போல் வைர மணிக ளுண்டோ ? சீர்பெற்று வாழ்வதற்கே - உன்னைப்போல் செல்வம் பிறிது முண்டோ ? ... 10 Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx K R IRS 22225 ---------- Forwarded message --------- From: Chittanandam V R <[email protected]> Date: Sat, 22 Feb 2025 at 04:21 Subject: Fwd: Sujatha - Periyalvaar - இவனா சிறுவன் To: *இவனா சிறுவன்!* *சுஜாதா * கண்ணனைச் சிறு குழந்தையாக்கி அவனது தளர் நடையை ரசித்தவர் பெரியாழ்வார். இவரது பாசுரங்களைப் படிக்கும்போது நிஜமாகவே தித்திப்பை உணர்வோம். அந்த அளவுக்கு சொற்களின் எளிமையையும் அழகையும் விதவிதமான சப்தங்களையும் பயன்படுத்துவார். ஓர் உதாரணம் பார்க்கலாம். *கண்ணற்குடம் திறந்தால் ஒத்து ஊறிக் * *கணகண சிரித்து உவந்து * *முன்வந்து நின்று முத்தம் தரும் என் * *முகில்வண்ணன் திருமார்வன் * *தன்னைப் பெற்றேர்க்குத் தன் வாய் அமுதம் * *தந்து என்னைத் தளிர்ப்பிக்கின்றான்;* *தன்னெற்று மாற்றலர் தலைகள் மீதே * *தளர்நடை நடவானோ!* குடம் நிறைய கரும்புச் சாறு திறந்து கொட்டினது போல் கணகணவென்று சிரித்து மகிழ்ந்து முன்னால் வந்து முத்தம் தரும் மேக வர்ணக் கண்ணன், தன் பெற்றோருக்குத் தன் வாயின் அமுதம் தந்து பூரிப்படையச் செய்கின்றான். தன் சத்துருக்கள் தலை மீது அனாயாசமாக நடந்து செல்லவும் கூடியவன் அவன். குழந்தை என்றாலும் எதிரிகளிடமிருந்து நம்மைக் காக்கவும் செய்வான் கண்ணன் என்பதைப் பெரியாழ்வார் அடிக்கடி சொல்கிறார். *சிறியன் என்று என் இளஞ் * *சிங்கத்தை இகழேல் கண்டாய்,* *சிறுமையின் வார்த்தையை * *மாவலியிடைச் சென்று கேள்!* சின்னப் பையன் என்று பரிகாசம் செய்யாதே. மகாபலியிடம் போய்க் கேள், இவன் நிஜமாகவே சிறுவனா என்று! *சுஜாதா * ***************************** *சித்தானந்தம் * -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZorWmx%3DE_mBsFWWyAWqWbsOV3n7CT%2BXhzpqDfRc7JvGuGg%40mail.gmail.com.
