* சர்வதேச மையத்துக்கான தேவையை திட்டமிட்டு செயற்கையாக உருவாக்கும் திமுகவின்
சேகர் பாபு

* தமிழர் மெய்யியலை திட்டமிட்டு சிதைக்கும் திராவிடச் சதி

* தமிழ்ப் பெரும் கொடை வடலூர் வள்ளலாரின் சன்மார்க்கத்தை அழிக்கும் திராவிடம்

* வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து வள்ளலாருக்கு வரும் கூட்டத்தைக் குறைக்க
சேகர் பாபு திட்டம்

* 150 ஆண்டுகளாக 20 லட்சம் பேர் வந்தாலும் எந்த அசம்பாவிதமும் நடந்ததில்லை

* ஆனால், இரண்டு ஆண்டுகளாக வேண்டுமென்றே நெருக்கடி ஏற்படுத்தி விபத்து
ஏற்படுத்த சதி

* சில மணி நேரங்கள் தவிர தருமச்சாலை மூடிக்கிடக்கும் அவலம்

* பெருவெளி முழுதும் பள்ளங்கள் தோண்டி, மரங்களை வெட்டி, தகரத் தடுப்புகள்
அமைத்து செயற்கையான நெருக்கடி ஏற்படுத்தும் அறநிலையத்துறை

* வடலூருக்கு அதிகம் வருபவர்கள் வயதானவர்கள், பெண்கள். இவர்களின் வருகையைத்
தடுக்க ஐந்து கிலோ மீட்டர் தொலைவுக்கு முன்னரே வாகனங்களுக்குத் தடை

* சோதி பார்க்க வரும் கூட்டத்தைக் குறைக்கவே சேகர் பாபு சதி

* தாற்காலிகக் கடைகளுக்கு அனுமதி மறுப்பு மற்றும் முழுவதும் அடைத்துவைத்து
விட்டு தைப்பூசத்தன்று பெருவெளி காலியாக உள்ளதாகக் காண்பிக்க சேகர் பாபு ஆடும்
நாடகம் !

திருவருட்பிரகாச வள்ளலாருக்கு வடலூரில் பார்வதிபுரம் மக்கள் 1867 ம் ஆண்டிலேயே
106 ஏக்கர் நிலத்தை பணம் வாங்காமல் அளித்தனர். தைப்பூசத்தன்று அன்று முதல்
இன்றுவரை கொடி எடுத்துவரும் உரிமை அவர்களுக்கே உண்டு. மேலும், எதிர்காலத்தில்
லட்சக்கணக்கில் மக்கள் கூட்டம் வரும் என்று கூறியே 106 ஏக்கர் பெருவெளியில்
தருமச்சாலை மற்றும் ஞானசபை தவிர வேறு எந்தக் கட்டுமானம், குளம் கட்டுதல்,
வேளாண்மை செய்தல் உள்ளிட்ட எதையும் செய்யாமல் வெட்ட வெளியாகவே வைத்திருக்க
வேண்டும் என்பது வள்ளலாரின் உத்தரவு. மேலும், சிறப்பு தரிசனம், விஐபி தரிசனம்,
100 ரூபாய் தரிசனம் என்றெல்லாம் வணிக நோக்கில் இல்லாமல், சாதி, மதம், சமயம்,
ஏழை, பணக்காரன் என்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல் வந்து செல்லும் திறந்த வெளி,
வெட்ட வெளித் தலம்தான் வடலூர் 106 ஏக்கர் பெருவெளித் தலம்.

அதற்கேற்ப தற்போதெல்லாம் ஆண்டுக்கு 20 லட்சம் பேர் வரை தைப்பூச மூன்று
நாட்களில் வந்து செல்கிறார்கள்.

ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு 2021 ல் ஆட்சிக்கு வந்ததும் வடலூரில் 100 கோடி
ரூபாய் செலவில் வள்ளலார் சர்வதேச மையம் கட்டப்படும் என்று அறிவித்தது. அது
வடலூரில் எங்கோ கட்டுகிறார்கள் என்று எண்ணியவர்களுக்கு அதிர்ச்சி. காரணம்
பெருவெளிக்குள் கட்ட அவர்கள் திட்டமிட்டு நிதி ஒதுக்கி அரசுத் துறைகள்
எவற்றிடமும் எந்த அனுமதியும் பெறாமல் பள்ளங்களைத் தோண்டிவிட்டனர்.

ஆர்ப்பாட்டங்கள், மறியல், போரட்டங்கள் கடந்து தற்போது உச்சநீதிமன்றம் வரை
வழக்கு சென்றுள்ளது.

இப்படிப்பட்ட நிலையில், நீதிமன்றங்களுக்கே விபூதி அடிக்கும் பணியை
அறநிலயத்துறை தொடர்ந்து மேற்கொள்கிறது.

"பெருவெளியில் வெட்டப்பட்ட பள்ளங்களில் தண்ணீர் நிற்கிறது. சிறுவர்கள்,
வயதானவர்கள், பெண்களுக்கு பாதிப்பு ஏற்பட வழி உண்டு. அதை மூடுமாறு உத்தரவிட
வேண்டும்" என்று உயர்நீதிமன்ற நீதிபதிகளிடம் பத்தர்கள் முறையிட்ட போது "அந்தப்
பள்ளங்களைத் தகரத் தடுப்புகள் வைத்து அடைக்க" உத்தரவிட்டனர் நீதிபதிகள்.

உடனே..இதுதான் சமயம் என்று பெருவெளியில் கட்டத் திட்டமிட்ட பரப்பு முழுவதும்
தகரத் தடுப்புகளைக் கொண்டு அடைத்து விட்டார் சேகர் பாபு.

தைப்பூசத்திற்கு மராமத்து வேலை செய்கிறோம் எனும் பெயரில் மரங்களை வெட்டி, ரோடு
போடும் வேலையைத் தொடங்கினார்கள். பாமக ராமதாஸ் ஐயா, நாம் தமிழர் சீமான்
ஆகியோர் அறிக்கை வெளியிட்டுக் கண்டிக்க அப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டுபோலவே தைப்பூசத்தன்று ஐந்து கிலோ மீட்டர் தொலைவிலே அத்தனை
வாகனங்களுக்கும் தடை விதித்துப் பேருந்துகளில் செல்ல பத்தர்கள்
பணிக்கப்படுகின்றனர்.

மேலும் தருமச்சாலைக்கு கொண்டுவரப்படும் பொருட்களுக்கு கடந்த ஆண்டே தடை
விதித்து வள்ளலாரின் தருமச்சாலை கொள்கையையே முற்றாக சிதைத்து விட்டனர்.

இந்த ஆண்டு, பெருவெளியில் அமைக்கப்படும் தற்காலிகக் கடைகளுக்கும் தடை
விதித்து, பெருவெளியே காலியாக உள்ளது போலவும்...எனவே இங்கு சர்வதேச மையம்
உள்ளிட்ட கட்டடங்கள் கட்டினால் பத்தர்களுக்கு பாதிப்பு ஏதும் இல்லை என்பது
போலவும் செயற்கையாக ஒரு தோற்றத்தை நீதிமன்றங்களுக்கும், மக்களுக்கும்
காண்பிக்க சேகர் பாபு நடத்தும் நாடகம் இது என்று பத்தர்கள் கவலை
கொள்கின்றனர்.

அடிப்படையான கேள்விகள் இவைதான்...

1. முக ஸ்டாலினுக்கும், இன்றைய திமுகவுக்கும் சன்மார்க்கத்துக்கும் என்ன
தொடர்பு ?

2. பெருவெளிக்குள் எந்தக் கட்டுமானமும் 150 ஆண்டுகளாக இல்லாதபோது எதற்காக
இப்போது செயற்கையான தேவை எழுந்தது ?

3. அப்படி அடம் பிடித்து, லட்சக்கணக்கில் வழக்குகளுக்கு செலவு செய்து
பெருவெளிக்குள்தான் கட்டுவோம் என்று சேகர்பாபு நிற்பது எதற்காக ? மாநிலம்
முிழுவதும் பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அவதிப்படும் நிலையில், பள்ளிக்
கூடங்களில் கழிப்பறை வசதி இல்லாத நிலையில்...அப்படி 100 கோடி ரூபாயில்
வடலூரில் கட்டுமானம் கட்டியே தீருவோம் என்று சேகர் பாபு அடம் பிடிப்பது யாரைத்
திருப்தி படுத்த ?!

4. திரு.மு.க.ஸ்டாலினோ, திரு. சேகர்பாபுவோ சன்மார்க்கர்களா ? கொலை புலால்
தவிர்த்தவர்களா ?

5. திரு. ஸ்டாலின் - திருமதி துர்கா ஸ்டாலின் குடும்பத்தில் யாருக்கு
சன்மார்க்கம் மீது இவ்வளவு அக்கறை ? அண்ணா, கலைஞர் காட்டாத அக்கறை இவர்களுக்கு
எங்கிருந்து வந்தது ?

6. சர்வதேச மையத்தை பெருவெளிக்குள்தான் காட்டுவோம் என்று நிற்கும் லெட்டர்
பேட் அமைப்பான "வடலூர் தலைமை சங்க" கவுரவ ஆலோசகராக இருந்த துர்கா ஸ்டாலினின்
சகோதரர் ஜெயராஜ மூர்த்தியும், "எனக்கும் தலைமை சங்கத்துக்கும், எனக்கும்
சர்வதேச மையத்துக்கும் தொடர்பு இல்லை" என்று அறிவித்து விட்டாரே ?! பிறகு
யாரைத் திருப்தி படுத்த இந்த 100 கோடி செலவில் பெருவெளிக்குள் கட்டுமானம் ?!

7. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் மக்களிடம் 1200 கோடி ரூபாய் முதலீடாக
வாங்கி அதில் மோசடி செய்ததாக சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ள நண்பன் பவுண்டேஷன்,
நண்பன் வெஞ்சர்ஸ் அமைப்பினர் சர்வதேச மையம் கட்டுவதில் மிக அதிக ஆர்வமும்,
ஈடுபாடும் காட்டுகின்றனரே ? என்றால் அவர்களுக்கு என்ன அக்கறை ?

8. நண்பன் பவுண்டேஷன் அமெரிக்க உள்ளிட்ட வெளிநாடுகளில் பணம் வசூல் செய்து
"இந்தியாவில், இலங்கையில் பசியோடு இருப்பவர்களுக்கு அரிசி உள்ளிட்ட பொருட்கள்,
தருகிறோம், தையல் பயிற்சி, வேலைவாய்ப்பு தருகிறோம்" என்று பல கோடிகளை வசூல்
செய்து அதில் ஒரு பகுதியை வள்ளலார் சன்மார்க்க சங்கங்களுக்கும், இந்த
சேவைகளுக்கும் அளித்துவிட்டு உடனுக்குடன் போட்டோ, காணொலி எடுத்து தங்களின்
அமைப்பு பெரும் சேவை அமைப்பு என்று விளம்பரம் செய்துகொண்டார்களே. அந்த
அமைப்புதானே 1200 கோடி மோசடியில் சிக்கி, டெக்ஸாஸில் சொத்துக்கள்
முடக்கப்பட்டுள்ளன ?

9. வள்ளலாரின் சன்மார்க்கம் பெயரில் உலக அளவில் நிதி திரட்டி அதை வடலூர்
வள்ளலார் சர்வதேச மையத்தின் மூலமாக இந்தியாவுக்குள் கொண்டுவரத்தான் நண்பன்
பவுண்டேஷன் பெருவெளிக்குள் சர்வதேச மையம் கட்ட வேண்டும் என்றும் வேறு இடத்தில்
கட்டினால் அதற்கு பணம் வசூலிப்பதில் சிக்கல் ஏற்படும் என்றும் கூறியதாகத்
தகவல்கள் கசிகின்றனவே. ஆக, அந்த வெளிநாட்டு அமைப்புக்காகதான் இந்து சமய
அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு...வள்ளலாரின் சன்மார்க்க கொள்கைகளை
சிதைத்து பெருவெளிக்குள் கட்டுமானம் காட்டியே தீருவேன் என்கிறாரோ எனும் ஐயம்
எழுகிறதே !

10. அப்படி எல்லாம் இல்லை..நாங்கள் நேர்மையாக வள்ளாளருக்காக செயல்படுகிறோம்
என்று கூறுவார்களே ஆனால் ... சர்வதேச மையம் அறிவிப்பு முதல் இன்றுவரை
ஒன்றைக்கூட முறையாக, நேர்மையாக, வெளிப்படையாக அறநிலையத்துறை செய்யவே இல்லையே ?
அப்படி மக்களை, வள்ளலார் பின்பற்றாளர்களை அலட்சியப்படுத்திவிட்டு யாருக்காக
இந்த 100 கோடி ரூபாய் செலவில் மண்டபங்கள் ? சர்வதேச மையம் ?

11. சர்வதேச மையத்தை 100 கோடி ரூபாயில் கட்டிவிட்டு ஒட்டுமொத்த சர்வதேச
மையத்தின் கட்டுப்பாட்டையும், நிர்வாகத்தையும் திமுக ஆதரவு வடலூர் தலைமைச்
சங்கத்திடம் ஒப்படைக்கவும் திட்டம் என்றால் கூடவே நண்பன் பாவுண்டேஷன்
திட்டத்தையும் ஒப்பிட்டால் கணக்கு சரியாக வருகிறதே.

12. 1200 கோடி ரூபாய் மோசடி செய்த டெக்ஸாஸ் நண்பன் பவுண்டேஷன் அமைப்புக்கு
FeTNA எனும் வட அமெரிக்க தமிழ் சங்கத்தில் அறிமுகக் கூட்டம் நடத்தி, பணத்தை
தாராளமாக முதலீடு செய்யுங்கள் என்று அன்று கூறியவர் FeTNA வின் அன்றைய தலைவராக
இருந்தவரும், இன்று திமுக அயலகப் பிரிவின் அமெரிக்க பொறுப்பில் இருப்பவருமான
கால்டுவெல் வேல்நம்பி ஆயிற்றே.

13. ஆக, "திமுக - வெளிநாடு - நண்பன் பவுண்டேஷன் - சர்வதேச மையம்" என எல்லாம்
ஒன்றாக வருகிறதே !

14. 106 ஏக்கரில் 6 ஏக்கர் நிலம் சிவாச்சாரியார் ஒருவரது குடும்பத்தினராலும்,
25 ஏக்கர் நிலம் 1975 ல் திமுக ஆட்சியி்ன்போது தனியாருக்கு பட்டா போட்டுக்
கொடுக்கப்பட்டு தற்போது 72 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளதே. அதையும் சர்வதேச
மையம் எனும் பெயரில் கட்டடங்கள் கட்டி அதை திமுக ஆதரவு தனியாருக்குத் தாரை
வார்க்கும் திட்டமா இது எனும் கேள்வியும் எழுகிறதே. உண்மையில் வள்ளலார் மீது
அக்கறை இருந்திருந்தால் 6 + 25 = 31 ஏக்கர் நிலத்தை இந்நேரம் திமுகவின் சேகர்
பாபு மீட்டு இருக்க வேண்டுமே ? ஏன் மீட்கவில்லை ?!

வள்ளலார் என்பவர் ஏதோ சாதாரண ஒரு சந்நியாசி என்று எண்ணிக்கொண்டு இந்த ஆட்டம்
ஆடுகிறார் திரு. சேகர்பாபுவும் திமுகவினரும். ஆனால், கூர்ந்து
கவனிப்பவர்களுக்கு நன்கு புரியும்...எப்போது வடலூரில் திமுக கை வைத்ததோ
அன்றுமுதல் தொடர்ந்து மக்கள் மத்தியில் அவப்பெயர் பெற்று வருகிறது திமுக
ஆட்சி.

பழனி போகரின் சிலை மீது கை வைத்த சில காலங்களில் ஜெயேந்திரர் சிறைக்குப்
போனார். செல்வி ஜெயலலிதாவும் சிக்கலுக்கு ஆளானார்.

வடலூர்...சித்தர்களுக்கு எல்லாம் சித்தரான வள்ளலாரின் மண். அதைத்தோண்டி
சிதைத்து தற்போது கடப்பாரையை விழுங்கிவிட்டு கசாயம் தேடிக்கொண்டிருக்கிறது
திமுக அரசு.

அறநிலையத்துறை அமைச்சராக திரு. தமிழ்க்குடிமகன் இருந்தபோது, கலைஞர்
கருணாநிதியே பெருவெளியில் எந்தக் கட்டுமானமும் கூடாது என்று அறிவித்தார்.

அன்று கலைஞருக்கு எடுத்து சொல்ல நல்லவர்கள் இருந்தார்கள். அவரும் வள்ளலார்
குறித்து அறிந்தவராக இருந்தார். இன்று....?!

"சொல்வதை சொல்லிவிட்டோம்...படுவதைப் படுங்கள்" என்ற வள்ளலாரின் கூற்றை இங்கே
நினைவூட்டுகிறோம்.

- வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், M.A. Philosophy and Religion,
பத்திரிக்கை ஊடகவியலாளர், நிறுவனர் - இராமலிங்க வள்ளலார் மரணமிலாப் பெருவாழ்வு
ஆய்வு அறக்கட்டளை, நிறுவனர் - தமிழியல் ஆய்வு நடுவம். 11/2/2025.

Yahoo Mail: Search, Organize, Conquer
<https://mail.onelink.me/107872968?pid=nativeplacement&c=US_Acquisition_YMktg_315_SearchOrgConquer_EmailSignature&af_sub1=Acquisition&af_sub2=US_YMktg&af_sub3=&af_sub4=100002039&af_sub5=C01_Email_Static_&af_ios_store_cpp=0c38e4b0-a27e-40f9-a211-f4e2de32ab91&af_android_url=https://play.google.com/store/apps/details?id=com.yahoo.mobile.client.android.mail&listing=search_organize_conquer>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81ZevRn9NOyhaoRDb3B5FG%3DNi%3D3SN7YoGuPStPReNFNKSLA%40mail.gmail.com.

Reply via email to