Marriage is determined by Karma. So even the song of Rajni we have the
right to choose all except the parent is wrong. Has anyone definitely said
till the prior day to the marriage, your wife is...?   She might be in your
home or even a neighbor or a girl you had seen or seen even. But  there is
no choice of our own even in choosing the wife or husband. It happened and
later became possessive of love and marriage. Why and How it happened is
GOK. So it is your clan or outside the clan that is immaterial. But why do
we care, fear and watch so carefully?  Because, a marriage do affect the
two families in generations to come;  a pattern of the family in the
culture, food and habits do exist which when thwarted by the marriage, as a
course changer, then the whole DNA mutations do occur either in favour or
against; 90% it goes against where there is a rakshasa vivaha. But still,
apart from the cast, race and creed and the nation divided by varied
culture, still only thri Guna alone prevail; so still sattva guna woman
from any direction may enter. In this I always doubt whether I would go as
a son in law of some home at all to stay with them and develop. Buit
irrespective of the caste, creed Race and the nationality, women replant
themselves and are willing to deliver babies which is the best wonder of
the world. And if she is a sattva guna both families cherish and develop
and keep the DNAs intact subject to the normal mutations. We have in our
groups and as my friends too, many foreign sattva women as daughters in
laws. Rangarajan's wife is taken care of by her only. KR IRS 19125

On Sun, 19 Jan 2025 at 08:29, Chittanandam V R <[email protected]>
wrote:

>
>
> ஏற்கனவே ஒரு முறை அனுப்பியதுதான்.
>
> என் இரண்டாவது மகன் ஒரு ஜப்பான் பெண்ணை கல்யாணம் செய்துகொண்டிருப்பது
> உங்களில் சிலருக்குத் தெரிந்திருக்கும். இதை நீங்கள் எப்படி எடுத்துக்
> கொண்டீர்கள் என்று பலர் என் மனைவியைக் கேட்பார்கள். அவள் எடுத்துக்கொள்ள என்ன
> இருக்கிறது...அந்தப் பெண் அவனை அன்பாகத்தான் பராமரிக்கிறாள்...அவர்கள்
> சந்தோஷமாக இருக்கிறார்கள். அதுதான் முக்கியம்.
>
> ஜப்பான் மருமகள் எனக்கு மற்றொரு தகுதியைக் கொடுத்திருக்கிறாள் என்பதை அப்போது
> உணர்ந்தோம்.
> ஒரு நாள் டெலிபோனில் வினோதமான தமிழில் ஒருவர் பேசினார். 'என் பெயர் ஃபுகோவா
> ஜூனிச்சி. நான் உங்களை சந்திக்க விரும்புகிறேன். நான் ஒரு ஜப்பானியன்'
> என்றார். வெட்டி வெட்டி பேசினாலும் தமிழ் திருத்தமானதாக இருந்தது. இலக்கண
> சுத்தமாக கற்றுக்கொண்ட தமிழ்.
> இளம்  ஜூனிச்சி என்னைப் பார்க்க வந்தார். சிவப்பாக உயரமான தோற்றம். வணக்கம்
> என்று துவங்கி தயங்கித் தயங்கி யோசித்து யோசித்து ஒரு ஆச்சரியகரமான கதை
> சொன்னார்.
> அவர் தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகத்துக்கு ஆராய்ச்சிக்கு ஜப்பான் மான்யத்
> தொகையில் வந்திருக்கிறார். அங்கே ஒரு வீட்டில் பேயிங் கெஸ்டாக
> தங்கியிருக்கிறார். அந்த வீட்டு சொந்தக்காரரின் பெண் அவருக்கு சாப்பாடு முதலிய
> பண்டங்கள் கொண்டுதரும்போது நட்பு உருவாகி, காதலாகி, இப்போது அவள் போட்டோவை
> பாக்கெட்டில் வைத்துக்கொண்டு மணந்தால் அவளைத்தான் மணப்பேன் என்று வைராக்கியமாக
> இருந்தார். பெண்ணின் பக்கத்திலிருந்து – குறிப்பாக பெற்றோர் - சம்மதமே இல்லை.
> அவர்கள் சமூகமும் இதை ஒப்புக்கொள்ளாது. இதுதான் சிக்கல்.
>
> "சரி, நான் என்ன செய்யமுடியும்?" என்றேன். "நீங்கள் ஜப்பானியப் பெண்ணை தங்கள்
> மகன் மணப்பதற்கு சம்மதம் தெரிவித்தீர்களே...எப்படி மனம் மாறினீர்கள்?"
> "அன்புள்ள நண்பரே, நாங்கள் இந்த மாதிரி மாறுதல்களை சுலபமாக
> அங்கீகரித்துவிட்டோம். ஆனால் அந்தப் பெண்ணின் இனத்தார் அப்படியில்லை. ஓடிப்
> போவது, திருட்டுக் கல்யாணம் அது இது என்று எந்த சமாசாரமும்
> வைத்துக்கொள்ளாதீர்கள். பெற்றோர் சம்மதம் இல்லாமல் செய்துகொள்ளாதீர்கள்.
> அவர்கள்  ரொம்ப கோபமுள்ளவர்கள். உயிருக்கேகூட ஆபத்து ஏற்படலாம். அவசரப்பட்டு
> ஏதும் செய்யாதீர்கள்" ஜூனிச்சி கவனமாகக் கேட்டிருந்துவிட்டு விடைபெற்று
> புறப்பட்டார். அதன்பின் அவர் செய்ததை ஜப்பானியர்கள்தான் நினைத்து
> பார்க்கமுடியும்.
>
> ஜப்பான் சென்று தன் தந்தையை அழைத்து வந்து பெண்ணின் பெற்றோருடன் பேசவைத்தார்.
> பேசவைத்தார் என்பதைவிட பார்க்கவைத்தார் என்பதே பொருத்தம். அவருக்கு ஒரு
> அட்சரம் இங்கிலீஷ் தெரியாது. ஜப்பான் பாஷைதான். பெண்ணின் பெற்றோருக்கு
> ஜப்பானிய மொழி தெரியாது. இருவரும் எப்படி என்ன பேசிக்கொண்டார்களோ; ஒருவரை
> ஒருவர் பார்த்துக்கொண்டு இருந்தார்களோ தெரியவில்லை.
> ஜூனிச்சி அசத்திய தமிழ், தஞ்சை தமிழ் யுனிவர்சிடி- யிலிருந்து பலரை
> மத்யஸ்தத்துக்கு அழைத்துச் சென்று அவருடைய காதலின் உண்மையைப் பெற்றோரிடம்
> சொல்லவைத்தது. மெள்ள மெள்ள 'இந்தப் பையன் நிஜமாகவே நம் மகள்பால் அன்பு
> வைத்திருக்கிறான்' என்று பெற்றோர் கண்டறிந்து, அவர்கள் கல்மனம் கரைய ஒன்றரை
> வருஷம் ஆயிற்று. கடைசியில் கல்யாணத்துக்கு சம்மதித்தார்கள்.  ஜூனிச்சி
> தாட்சாயணியை மணந்தார்.
> ஜப்பானுக்கு போவதற்கு முன் எங்களை வந்து சந்தித்து ஆசீர்வாதம்
> பெற்றுக்கொண்டார்கள். நான் ஜப்பானிய மொழியை தமிழில் கற்றுத் தரும் ஏஷியன்
> இன்ஸ்டிட்யூட் புத்தகத்தை அவளுக்குப் பரிசாகக் கொடுத்தேன். மனைவி வெள்ளியில்
> ஏதோ கொடுத்தாள்.
>
> ஜப்பானிலிருந்து அந்தப் பெண் சுவாரசியமான கடிதம் எழுதியிருந்தாள்.
>
> 'ஜப்பானில் விருந்தினரை வரவேற்கும்போதும் விடைபெறும்போதும் பயன்படுத்தும்
> சொற்கள் மிகவும் மதிப்பிற்குரியவையாக உள்ளன. மிகவும் தாழ்மையான முறையில்
> தன்னுடைய வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.'
>
> இந்தப் பண்பாடுதான் ஜூனிச்சியின் அசாத்திய பொறுமையின் அடிப்படை.
>
> விக்கிரமாதித்தன் கதைகளில் வேதாளம் கடைசியில் கேட்குமே அதுபோல் ஒரு கேள்வி.
> இந்தக் காதல் கதையில் Man of the Match யார்? என் விடை, அந்தத் தகப்பன்தான்.
> மகனின் உணர்ச்சிகளை புரிந்துகொண்டு, தயக்கமில்லாமல் பாஷை புரியாத தேசத்துக்கு
> வந்து, தஞ்சையில் அந்த நடுக்கூடத்தில் பொறுமையாக உட்கார்ந்துகொண்டு புன்னகை
> மட்டுமே செய்த அந்தத் தந்தைதான்.
> *-Sujatha (1997)*
> ************************************
> *சித்தானந்தம் *
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoqhbpHPHa_ARL6AwVYatpSvD98d%3DAg4HPtYY6JSEWfL_A%40mail.gmail.com.

Reply via email to