‘கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ இது உயர்வு நவிற்சிக்காகக்
சொல்லப்பட்டது என்று சிலர் கூறினாலும், அந்த அளவிற்கு கவி ஆற்றல் மிக்கவனாகக்
கம்பன் விளங்கினான் என்பதே உண்மை. கவிச்சக்கரவர்த்தி என்று கம்பனைச் சொல்லுவது
உண்மை; வெறும் புகழ்ச்சியில்லை. கம்பனின் கவித்திறத்திற்கும் உவமை நயத்திற்கும்
சூழ்நிலைக்குத் தகுந்தவாறு சொற்களை எடுத்தாளும் திறத்திற்கும் பல்வேறு
பாடல்களை உதாரணம் காட்டலாம்.



இதோ, பால காண்டம். எழுச்சிப் படலம்.



சிவதனுசை முறித்து இராமன் வெற்றி கொண்டான் என்ற செய்தி தசரதருக்கு வந்து
சேருகிறது. உடனே தனது படை பரிவாரங்களுடன் மிதிலைக்குப் புறப்பட ஆயத்தமாகிறார்
அவர். அவர் தம் சேனைகள் ஊழிக்காலத்தில் ஓங்கிப் பொங்கும் கடல் போல ஒன்று
சேர்ந்து புறப்பட ஆரம்பித்தன. தன் படைக்குழுவினரின் இறுதியாகத் தான் செல்லலாம்
என தசரதர் வெகு நேரமாகக் காத்திருக்கிறார். காத்திருப்பவர், வெகு நேரமாகக்
காத்துக் கொண்டிருக்கிறார்.



படையின் முதல் வரிசை மிதிலையைச் சென்றடைந்து விட்டது. ஆனால் இறுதி வரிசை
இன்னமும் அயோத்தியைத் தாண்டவில்லை. அந்த அளவிற்கு வரிசை நீண்டிருந்தது என்று
வர்ணிக்கிறார் கம்பர். அதுவும் எங்கெங்கு பார்த்தாலும் மனிதத் தலைகளாம். மேலே
இருந்து உழுந்து (உளுந்து) போட்டால் கூடக் கீழே விழாதாம்.



அதனை அவர் மிக அழகாக,



«இடம் இலை உழுந்து இட உலகம் எங்கணும்

அழுந்திய உயிர்க்கும் எலாம் அருட் கொம்பு ஆயினான்

எழுந்திலன் எழுந்து இடைப் படரும் சேனையின்

கொழுந்து போய்க் கொடி மதில் மிதிலை கூடிற்றே»



என்று விளக்குகிறார் பாடலில்.



எள் போட்டால் எள் விழ இடமில்லை என்பது தான் வழக்கில் இருக்கும் சொல். ஆனால்
கம்பர் அதனைப் பயன்படுத்தாமல் அதற்கு மாறாக உழுந்து போட்டால் விழ இடமில்லை
என்று கூறியிருக்கிறார். ஏன் தெரியுமா?



அவர்கள் அனைவரும் செல்வது இராமனின் மணவிழாவைக் காணவும், அதன் வெற்றியைக்
கொண்டாடவும் தான். அது ஒரு மங்கல நிகழ்ச்சி. ஆனால் எள் என்பது அமங்கல
நிகழ்ச்சிகளில், குறிப்பாக நீத்தார் கடனுக்கான சடங்குகளில் மட்டுமே
பயன்படுத்தப்படக் கூடியது. அதனை ஒரு மங்கலகரமான நிகழ்வுக்காகச் செல்லும்
இடத்தில் பயன்படுத்தக் கூடாது என்பதற்காக மிக நுணுக்கமாக கம்பர் «எள் விழவும்
இடம் இல்லை» என்று சொல்லாமல் «உழுந்து இட இடம் இலை உலகம் எங்கணும்»

என்று மிக அழகாகப் பயன்படுத்தி உள்ளார்.



அதே சமயம் இராமனின் அம்புகளால் துளைக்கப்பட்டு இராவணன் வீழ்ந்து கிடக்க, அவனை
அணுகிப் புலம்பும் மண்டோதரியின் கூற்றாக,



« சடைமுடியான் வெள்ளெருக்கஞ்

வெற்பெடுத்த திருமேனி மேலும் கீழும்

எள்ளிருக்கும் இடமின்றி உயிரிருக்கும்

இடம் நாடி இழைத்தவாறோ

கள்ளிருக்கும் மலர்க் கூந்தல் சானகியை

மனச்சிறையில் கரந்த காதல்

உள்ளிருக்கும் எனக் கருதி உடல் புகுந்து

தடவியதோ ஒருவன் வாளி »



என்று கூறுமிடத்தில் “எள்ளிருக்கும் இடமின்றி” என்ற சொல்லாடலைப் பயன்படுத்தி,
அதன் அமங்கல நிகழ்வை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். அதுவும் இராவணனைத்
துளைத்த இராம பாணமானது, சீதையின் நினைவு மேலும் எங்காவது உள்ளே இருக்குமோ
என்று உடல் முழுவதும் துளைத்ததாகக் குறிப்பிடுள்ள நயம் வியந்து போற்றத்தக்கது.



கம்பனின் இந்தச் சொல்லாற்றல் என்றும் எண்ணி எண்ணி வியக்கத்தக்கதல்லவா?



கம்பனைப் போற்றுதூம் கம்பனைப் போற்றுதூம்

கவி ஆற்றலில் ஈடின்மையால் …



Although some say that this poem ‘Kamban Veetuk Katthariyum Kavipadum’ was
written for the sake of exaltation, it is true that Kamban was a poet of
such great power. It is true that Kamban is called the emperor of poets; it
is not just praise. Various songs can be cited as examples of Kamban’s
poetic talent, metaphorical skill, and ability to choose words according to
the situation.

Here is Bala Kanda. The rising sun.

The news reaches Dasharatha that Rama has broken Shiva’s bow and won. He
immediately prepares to leave for Mithilā with his army and retinue. He and
his troops start leaving together like a sea that swells during the monsoon
season. Dasaratha waits for a long time, thinking that he will be the last
of his army to go. The one who waits, waits for a long time.

The first line of the army has reached Mithilā. But the final line has not
yet crossed Ayodhya. Kambar describes the line as being that long. And that
too, human heads everywhere you look. Even if you throw it from above, it
will not fall down.

He explains it very beautifully,

«Wherever the leaves are thrown, the world is thrown,

Wherever the life is thrown,

Elam has become a blessing horn,

The army that rises and spreads its wings,

The flag has gathered on the wall,

The common saying is that if you throw sesame seeds, there is no place for
sesame seeds to fall. But Kambar does not use it and says that if you throw
sesame seeds, there is no place for sesame seeds to fall. Do you know why?

They are all going to see Rama's wedding and celebrate its success. It is
an auspicious event. But sesame seeds can only be used in inauspicious
events, especially in the rituals for the debt of Neethar. In order to
avoid using it in a place where one is going for an auspicious event,
Kambar has used it very beautifully, not by saying, “There is no place for
the sesame to fall,” but by saying, “The world is where the leaves fall.”

At the same time, when Ravana, pierced by Rama’s arrows, lies down,
Mandodari approaches him and laments,

“Just as Thirumeni, who has braided his hair and combed his hair, has
searched for the place where life is, without any place for sesame, or
someone has entered the body of Chanaki, who has a flowery hair, thinking
that there is love in the prison of his mind, and has felt it, he has used
the expression “without any place for sesame,” and has wonderfully
expressed its inauspicious event. That too, the beauty of the poet who
mentions that the arrow of Rama that pierced Ravana pierced his entire
body, hoping that the memory of Sita might still be somewhere inside is
admirable.

Isn't this eloquence of Kamban always admirable?

Praise Kamban Praise Kamban

KR IRS 15125

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZooe7J-2f9zSwF%2B%3DGXF9pwvNiyXT4Bo20R7HrwRTjP6LLA%40mail.gmail.com.

Reply via email to