welcome Nandri KR On Sat, 28 Dec 2024 at 14:21, Chittanandam V R <[email protected]> wrote:
> Excellent Ji! > > On Sat, Dec 28, 2024 at 2:19 PM Rajaram Krishnamurthy < > [email protected]> wrote: > >> வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து >> நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர் >> பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும் >> தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான் >> >> Translation – ஆயிரம் யானைகள் சூழ்ந்து வர என் தலைவன் நாராயணன் வருகின்றான் >> என்ற செய்தியைக் கேட்டதும், அவனை எதிர்கொண்டழைக்க ஊரார் எல்லாம் பொன்னால் >> செய்து புனித நீர் நிறைத்தக் குடங்களை எல்லாத் திசைகளிலும் வைத்து வீதி வாசல் >> எங்கும் தோரணம் நாட்டினார்கள். அதனை என் கனவில் நான் கண்டேனடி தோழீ. >> KR IRS 281224 >> >> ---------- Forwarded message --------- >> From: Chittanandam V R <[email protected]> >> Date: Sat, 28 Dec 2024 at 05:45 >> Subject: Fwd: Indhira Priyadarshini - Nambi >> To: >> >> >> >> >> *நம்பி* >> >> *இந்திரா ப்ரியதர்ஷிணி * >> >> *நம்பி என்ற சொல்லோடு மிகுந்த பிரேமை எனக்குண்டு. நம்பி என்றால் ஆண்தகை, >> இறைவன், பூரணன், இளைஞன், குலம் குணத்தில் ஏற்றமுடையான் மற்றும் செல்லப் பிள்ளை >> என்று பல பொருள் உண்டு. இந்தச் செல்லப் பிள்ளை என்ற பொருள் தான் நமக்கு >> அணுக்கம் தருகிறது. * >> >> *நம்பி ஆருரன், நாற்கவிராச நம்பி, நம்பியாண்டர் நம்பி, திருநறையூர் நம்பி, >> திருநாரையூர் நம்பி, திருக்கச்சி நம்பி, திருமலை நம்பி என்று ஆன்றோர் பலர் >> இத்திருநாமம் உள்ளவர். நம்ப வல்லவன் நம்பி என்பதாகுமோ? எங்கள் திருவள்ளூர்ப் >> பாசுரத்தில் பெரிய திருமொழியில் இரண்டாம் பத்தில் திருமங்கையாழ்வார் அருளிச் >> செய்தது. "காசையாடை மூடியோடிக் காதல் செய்தான் அவனூர் நாசமாக நம்பவல்ல நம்பி >> நம்பெருமான்" (காஷாயம் தரித்து ஔித்துக் கரந்து பிராட்டி மேல் ஆசை வைத்த >> இராவணன் ஊர் நாசமாக சங்கல்பம் தீர்மானம் செய்த நம்பி நம் பெருமான் திருஎவ்வுள் >> கிடந்தான்.) எவ்வுள் கிடக்கும் எம்பெருமான் ஸ்ரீ வீரராகவன். * >> >> *திருநறையூர் என்னும் நாச்சியார் கோயிலில் குடி கொண்டுள்ள நம்பி நறையூர் >> நம்பி ஸ்ரீ நிவாஸன். நம்பியின் திவ்ய மகிஷி வஞ்சுளவல்லி என்னும் நம்பிக்கை >> நாச்சியார். நம்பியை நம்பினோர் கெடுவதில்லை. இது நான்கு மறைத் தீர்ப்பு.* >> >> *திருநாரையூர் நம்பி சைவத்தில் பொல்லாப் பிள்ளையாரின் அருள் பெற்று பதினொரு >> திருமுறைகளைத் தொகுத்தார். திருவிரட்டை மணிமாலை போன்ற நூல்களையும் இயற்றியவர். >> இவர் வழியில் வந்த பெரும்பற்றப்புலியூர் நம்பி திருவாலவாய் உடையார் >> திருவிளையாடற்புராணம் என்னும் நூலை இயற்றியுள்ளார். * >> >> *சோழ மண்டலத்தில் புலியூர் என்ற பெயர் கொண்ட பல திருத்தலங்கள் உள்ளன. ஒரு >> நாள் வியாக்ரபாத முனிவர் தொழுத அத்தலங்களை சேவிக்க வேண்டும். நம்பி ஆரூரர் >> என்ற இயற்பெயர் கொண்ட சுந்தர மூர்த்திப் பெருமான் தியாகேசப் பெருமானை நம்பி >> இம்மையும் மறுமையும் சிறக்க வாழ்ந்தார். நாம் நம்பியிருக்க திருப்பாட்டுப் >> பதிகங்கள் செய்து தந்தார். ஸ்ரீ வைணவத்தில் திருக்கச்சி நம்பியும் கச்சி >> தேவராஜப் பெருமாளும் உரையாடுதல் இயல்பாகும்.* >> >> *திருமலை நம்பியை திருவேங்கடவன் ஆட்கொண்ட வரலாறு நாம் வாசிக்கிறோம். >> நாற்கவிராச நம்பி சித்ரகவி, வித்தாரக் கவி, ஆசு கவி, மதுரகவி என நாலுவகைக் கவி >> பொழியும் ஆற்றல் பெற்றவர். திருமங்கையாழ்வாரும் நாலுகவிப் பெருமாள் என்று >> இதனால் போற்றப்படுகிறார். * >> >> *நம்பிகளில் மிகச் சிறந்த நம்பி ஒருவன் உண்டு. அவன் குறுங்குடி நம்பி. ஸ்ரீ >> இராமனுஜரிடம் உபதேசம் பெற்ற வைணவ நம்பி. அழகிய நம்பி, வடுக நம்பி. >> பெரியாழ்வார் நம்மாழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வார் மங்களாசாஸனம். * >> >> *நம்பி ராஜன் என்ற வேடர் குலத் தலைவர்தான் ஸ்ரீ வள்ளியம்மை தகப்பனார். கம்ப >> ராமாயணத்தில் "நன்றே நம்பி நம் குடி வாழ்க்கை" என்ற பாடல் மிகவும் சிறப்பு. >> "ஒன்றே என்னின் ஒன்றேயாம், பல என்று உரைக்கின் பலவேயாம் அன்றே என்னின் >> அன்றேயாம், ஆமே என்னின் ஆமேயாம் இன்றே என்னின் இன்றேயாம், உளது என்று >> உரைக்கின் உளதேயாம் நன்றே நம்பி குடி வாழ்க்கை நமக்கு இங்கு என்னோ பிழைப்பு >> அம்மா!” இறைவன் ஒன்று என்று சொன்னால் ஒன்றுதான்; பல என்றால் பலவேதான்; அப்படி >> அல்ல என்றாலும் அல்லதான்; அப்படித்தான் என்றால் ஆம் அப்படித்தான்; இல்லை >> என்றாலும் இல்லைதான்; உண்டு என்றாலும் உண்டுதான்; எல்லாம் நமது நம்பிக்கையில் >> தான் இருக்கிறது. இதனை உணர்ந்து கொண்டால் நம் வாழ்வு நன்று. இது தான் நம்பி >> என் தலைவா இறைவா எம் வாழ்வு என உணர்ந்து கொண்டோம் என்றும் பொருள் கொள்ளலாம். * >> >> *இந்த நம்பி சொல் பிரயோகத்தில் இந்தப் பாசுரம் மிக அழகானது.* >> >> * "சோத்த நம்பி யென்று தொண்டர்* >> *மின்டித் தொடர்ந்தழைக்கும்,* >> *ஆத்தனம்பி செங்கணம்பி* >> *யாகிலும் தேவர்க்கெல்லாம்,* >> *மூத்த நம்பி முக்கணம்பி* >> *யென்று முனிவர்தொழு* >> *தேத்தும், நம்பியெம்பெருமா* >> *னெவ்வுள் கிடந்தானே" * >> >> *தொண்டர்கள் அடர்ந்து "ஐயனே உனக்கு ஸ்தோத்திரம்" அஞ்சலி என்று அயராது >> அழைக்கும் நம்பி. என்றும் உற்ற துணையாய் இருக்கும் ஆப்த(ஆத்த) நம்பி. >> செங்கணம்பி. சிவந்த தாமரை போன்ற நேத்ரங்களை உடைய எம் நம்பி. அவன் நேத்ரங்கள் >> சிவக்கக் காரணம் தசகண்ட ராவணனை அழித்த சினம். ஸ்ரீ வீரராகவன் அன்றோ? தேவாதி >> தேவர்க்கெல்லாம் முன்னவன். மூத்தவன். தேவரும் அயனும் முக்கண் ஈசனும் தொழும் >> நம்பி. இத்தகைய சிறப்பு வாய்ந்த நம்பி உறைவதற்குரிய உள் எவ்வுள் என்று ஸ்ரீ >> சாலிஹோத்ர மஹரிஷியிடம் கேட்டு திருஎவ்வுள்ளில் கிடந்த திருக்கோலம் கொண்டது >> நம்முடைய பெரும்பயனாகும். கிம் கிருஹசேம் (எந்தக் கிருஹம் யாம் உறைவதற்கு?") >> என்று சம்ஸ்கிருதத்திலும் திருஎவ்வுள் என்று அழகுத் தமிழிலும் விளிக்கப்படும் >> இந்த திவ்ய தேசம் அவசியம் சேவிக்க வேண்டும். எம்பெருமான் மரவுரி எனும் பப்ளி >> துப்பட்டி சார்த்திக் கொண்டு இங்கு வருவோரின் சங்கடங்கள் நீக்குவேன் என்று >> ஸ்ரீ சாலி ஹோத்ர மஹரிஷி தலையில் கை வைத்துச் சொல்கிறான். இராவணன் நாசமாக நம்ப >> வல்ல நம்பி நம் குறை தீர்ப்பான் என்று நம்பிச் செல்லுங்கள். நிச்சயம் >> நடக்கும். இந்த நம்பியை நம்பாமல் இந்தக் கலியில் யாரை நம்புவது? கநகவல்லி >> நாயீக சமேத ஸ்ரீ வீரராகவஸ்வாமி சரணம். நாள் இனியது. * >> >> >> -- இந்திரா ப்ரியதர்ஷிணி >> ************************************************* >> சித்தானந்தம் >> >> -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoqVeW3qmjEf3xuJMdfbMFS5jau0oOByV7ox2yj-LSHJXw%40mail.gmail.com.
