1          *விரகு*, பெயர்ச்சொல்.

   1. வழிவகை
   2. திறமை
   3. தந்திரம்
   4. சூழ்ச்சி
   5. விவேகம்
   6. ஊக்கம்
   7. தின்பண்டம்.

2
திகாரம்/Chapter: ஊழ் / Fate
<https://www.ytamizh.com/thirukural/chapter-38/>
 குறள் 380 <https://www.ytamizh.com/thirukural/kural-380/>:


*ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்றுசூழினுந் தான்முந் துறும்.*
ஊழை விட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன, ஊழை விலக்கும் பொருட்டு மற்றோரு
வழியைஆராய்ந்தாலும் அங்கும் தானே முன் வந்து நிற்கும்.
3      In the Mahabharata, Abhimanyu decided to enter the Chakravyuha
formation because he was ordered by Yudhisthira to do so, with the plan
being that Abhimanyu would break through the formation, creating a path for
the other Pandavas to follow and attack the Kaurava army from within; however,
due to other warriors blocking their entry, Abhimanyu was left alone to
fight inside the deadly formation, ultimately leading to his death.

   - *Strategic move:*
   Breaking the Chakravyuha was seen as a crucial tactic to disrupt the
   enemy lines and gain a significant advantage in the battle.
   - *Partial knowledge:*
   While Abhimanyu knew how to enter the formation, he was not aware of how
   to exit it, as he had only heard his mother Subhadra explain the entry
   process while still in her womb.
   - *Duty to the Pandavas:*
   As a skilled warrior, Abhimanyu felt obligated to follow his king's
   orders and attempt to break through the challenging formation

                   That is an order abimanyu obeyed; panning of Dharma
failed; And Krishna was far away to be consulted; where Fate strikes, even
GOD isn't helpful; from nowhere or far away Krishna was able to send sarees
on a beck and call; DID ABIMANYU CALL KRISHNA HIS EX GURU OR ARJUNA ANOTHER
GURU FOR HELP?
Lesson:  do not do what you do not know even if ordered 2 if you were
forced to call for proper help; when you are planning to have Plan A B and
C to alter the course by surprise; and if nothing works, stay cool as only
after the toofan, things will settle.  KR IRS 241224
---------- Forwarded message ---------
From: Chittanandam V R <[email protected]>
Date: Tue, 24 Dec 2024 at 07:01
Subject: Fwd: Tamilnayagam - Villibharatham
To:




வில்லி பாரதம் - விதியை வெல்லும் விரகு

*தமிழ்நாயகம் *

ஏன் தமிழ் படிக்க வேண்டும்? இலக்கியம் ஏன் படிக்க வேண்டும்?  மொழி சோறு
போடுமா? வேலை வாங்கித் தருமா? தமிழ் படிக்கும் நேரத்தில் வேறு ஏதாவது
உருப்படியாகப் படித்தால் இன்னும் நாலு காசு சம்பாதிக்கலாமே என்று
நினைக்கலாம். அது சரிதான். இல்லை என்று சொல்லுவதற்கு இல்லை. ஆனால், பணம்
மட்டும் போதுமா? வாழ்க்கைக்குப் பணம் மட்டும் போதும் என்றால், இலக்கியம்
வேண்டாம் என்று தள்ளிவிடலாம். வெறும் பணம் மட்டுமே வாழ்க்கையாகிவிடுமா?

அது புறம் இருக்கட்டும். நாம் நினைக்கிறோம், பணம் இருந்துவிட்டால் எந்தப்
பிரச்சனையையும் சரி செய்துவிடலாம் என்று. பணத்தால் சாதிக்க முடியாதது ஒன்றும்
இல்லை என்று.  அது சரியா?

வயது ஏற ஏற, பணத்தால் சாதிக்க முடியாத பலவற்றை நாம் அனுபவபூர்வமாக
அறிவோம். அப்போது என்ன செய்வது?

மிகப் பெரிய பிரச்சனை. பெரிய துக்கம். தாங்க முடியவில்லை. பெட்டி பெட்டியாக
பணம் இருக்கிறது. ஒரு பலனும் இல்லை. எத்தனை கோடி கொட்டிக் கொடுத்தாலும் நம்
துக்கம் தீராது என்ற நிலைகள் வரும். அப்போது என்ன செய்வது?

பணத்தால் சரி செய்ய முடியவில்லையே என்ற இயலாமை ஒரு புறம்.  இந்தப் பணத்தைச்
சேர்க்கவா என் வாழ்நாள் எல்லாம் செலவழித்தேன்? கடைசியில் இந்தப் பணத்தால் ஒரு
பலனும் இல்லை. என் முயற்சிக்கு கிடைத்த பலன் இதுவா என்ற வெறுமை மறுபுறம். அந்த
நிலை வரும் முன், மனதைப் பக்குவப்படுத்த வேண்டாமா? தயார் செய்து கொள்ள
வேண்டாமா?

அதற்குத்தான் இலக்கியம். மகாபாரதத்தில் அபிமன்யு இறந்து
கிடக்கிறான். அர்ஜுனன், தருமன், கண்ணன், பீமன் எல்லோருக்கும் முன்னால்
வில்லிப்புத்துராழ்வார் அழுது புலம்புகிறார். அவரால் அதை சகிக்க முடியவில்லை.

அபிமன்யு யார்? அவனுடைய தந்தை உலகின் மிகப் பெரிய வீரன் அர்ஜுனன். அவன் மாமன்,
உலகைக் காக்கும் கண்ணபிரான். பெரியப்பா, மிகப் பெரிய பலசாலி பீமன். தாத்தா,
தேவர்களின் அரசனான இந்திரன். அப்படிப்பட்ட அபிமன்யு அனாதையாக இறந்து
கிடக்கிறான் என்றால் காரணம் என்ன?  விதி. இத்தனை பேர் இருந்தும் அவனைக் காக்க
முடியவில்லை என்றால் விதியை நம்புவதைத் தவிர வேறு என்ன செய்வது?

பாடல்

*மாயனாம் திருமாமன்; தனஞ்சயனாம் திருத்தாதை; **வானோர்க்கு எல்லாம்*

*நாயனாம் பிதாமகன்; மற்று ஒரு கோடி நராதிபராம் **நண்பாய் வந்தோர்; *

*சேயனாம் **அபிமனுவாம், செயத்திரதன் கைப்படுவான்! செயற்கை**வெவ்வேறு*

*ஆய நாள், அவனிதலத்து, அவ் விதியை வெல்லும் **விரகு ஆர் வல்லாரே?*

பொருள்

மாயங்களில் வல்லவன் மாமனாகிய கண்ணபிரான்; வில் வீரத்தில் ஒப்பற்றவன் தந்தையாக
அர்ஜுனன்; தேவர்களுக்கு எல்லாம் தலைவனாம் தாத்தாவாகிய இந்திரன்; மேலும் ஒரு
கோடி பேர்கள் மக்களின் அதிபர்கள், அரசர்கள் நண்பர்களாக
உள்ளவர்கள் பிள்ளையாம் அபிமன்யு   செயத்திரதன் என்ற அரசனின் கையால்
இறந்தான் வேறு வேறு விதமாக நடக்கும் செயல்கள் எல்லாம் அன்றில் இருந்து இந்த
உலகில் அந்த விதியை வெல்லும் வழி யாரிடம் இருக்கிறது? யாரிடமும் இல்லை!
(விரகு - வழிவகை)

இவ்வளவு இருந்தும், அபிமன்யுவை காக்க முடியவில்லை. கடவுளான கண்ணனால்கூட
முடியவில்லை. கண்ணன் நினைத்து இருந்தால் காப்பாற்றியிருக்கலாம்.

விதி!

விதி என்று ஒன்று இருக்கிறதோ இல்லையோ, தெரியாது. சில சமயம், தாங்க முடியாத
துக்கம் வரும் போது, மனதுக்கு ஒரே மருந்து விதியை நம்புவதுதான். இல்லை என்றால்
எப்படி மனச்சமாதானம் அடைய முடியும்.

விதி என்று ஒன்று இல்லை என்று சொல்லிவிடுவது எளிது. பெரிய துக்கத்தில்
இருக்கும் ஒருவருக்கு இருக்கும் ஒரே ஆறுதல் அதுதான் என்றால், அதை பறிப்பானேன்?

நம் இலக்கியம் முழுவதிலும் விதி அழுத்தமாக நம்பப்படுகிறது. இலக்கியம்
படித்துப் பழகிவிட்டால் வாழ்வில் வரும் துன்பங்களைப் பொறுத்து, சகித்து, அதைத்
தாண்டி மேலே வர முடியும். இல்லை என்றால் மன அழுத்தம், மன நோய், மருந்து,
மாத்திரை என்று துன்பப்பட வேண்டிவரும்.

இலக்கியம் துன்பத்தை ஆற்றும். மனதைத் தேற்றும். மன வலிக்கு மருந்து போடும்.
சாய்ந்து கொள்ள தோள் தரும். கண்ணீர் துடைக்கும்.

*-- தமிழ்நாயகம்*

***************************************

*சித்தானந்தம் *

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZooEoGqRvVrnhrGy3-9GzXqtKK1joJZ%2B1zTN%2BVxTLbM1oQ%40mail.gmail.com.

Reply via email to