அதிகாரம்/Chapter: வான்சிறப்பு / The Blessing of Rain
குறள் 12: துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை. உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும். The rain makes pleasant food for eaters rise; As food itself, thirst-quenching draught supplies Rain produces good food, and is itself food Thuppaarkkuth Thuppaaya Thuppaakkith Thuppaarkkuth Thuppaaya Thoou Mazhai Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx ஆண்: எந்த ஊர் என்றவனே இருந்த ஊரை சொல்லவா அந்த ஊர் நீயும் கூட அறிந்த ஊர் அல்லவா ஆண்: எந்த ஊர் என்றவனே இருந்த ஊரை சொல்லவா அந்த ஊர் நீயும் கூட அறிந்த ஊர் அல்லவா ஆண்: உடலூரில் வாழ்ந்திருந்தேன் உறவூரில் மிதந்திருந்தேன் உடலூரில் வாழ்ந்திருந்தேன் உறவூரில் மிதந்திருந்தேன் ஆண்: கருவூரில் குடி புகுந்தேன் மண்ணூரில் விழுந்து விட்டேன் கருவூரில் குடி புகுந்தேன் மண்ணூரில் விழுந்து விட்டேன் ஆண்: கண்ணூரில் தவழ்ந்திருந்தேன் கையூரில் வளர்ந்திருந்தேன் காலூரில் நடந்து வந்தேன் காளையூர் வந்துவிட்டேன் ஆண்: வேலூரைப் பார்த்து விட்டேன் விழியூரில் கலந்து விட்டேன் பாலுறும் பருவமெனும் பட்டணத்தில் குடி புகுந்தேன் ஆண்: எந்த ஊர் என்றவனே இருந்த ஊரை சொல்லவா அந்த ஊர் நீயும் கூட அறிந்த ஊர் அல்லவா ஆண்: காதலூர் காட்டியவள் காட்டூரில் விட்டுவிட்டாள் காதலூர் காட்டியவள் காட்டூரில் விட்டுவிட்டாள் ஆண்: கன்னியூர் மறந்தவுடன் கடலூரில் விழுந்துவிட்டேன் கன்னியூர் மறந்தவுடன் கடலூரில் விழுந்துவிட்டேன்! ஆண்: பள்ளத்தூர் தன்னில் என்னை பரிதவிக்க விட்டு விட்டு மேட்டூரில் அந்த மங்கை மேலேறி நின்று கொண்டாள் ஆண்: கீழுரில் வாழ்வதற்கும் கிளிமொழியாள் இல்லையடா மேலூர் போவதற்கு வேளை வரவில்லையடா ஆண்: எந்த ஊர் என்றவனே இருந்த ஊரை சொல்லவா அந்த ஊர் நீயும் கூட அறிந்த ஊர் அல்லவா 1. Entha oor endravane, Iruntha oorai chollavaa, Antha oor neeyum kooda , Arintha oor allava? 1.When you ask me which place , Shall I tell the place I lived, And that place is a place , Known to you also. 2. Udalooril vazhndhu irunthen, Uravooril mithanthirunthen, Karuvooril kudi pugundhen, Mannoril vizhundu vitten. 2.I lived in the body place , I floated in the relationship place , I entered the place of pregnancy , And at alst fell on the place of mud. 3.Kannoril thavazhndhirundhen, Kayyoril valarnthirunthen, Kalooril nadanthu vandhen, Kalayoor vandhu vitten 3.I started crawling in the eye place, And started growing up in the hand place, And started walking on the leg place , And have arrived in the youth place. 4.Veloorai parthu vitten, Vizhiyooril kalandhu konden, Paloorum paruvamennum , Pattinathil kudi pugundhen I started seeing the place of victory, I got mixed to place of her eye, And reached the age of teens , I then started living in the town. 5.Kadaloor kattiyaval , Kattooril vittu vital, Kanniyoor marantha udan , Kadalooril vizhundu vitten. 4=5,She showed me the ocean place , And left me in this forest place , When I forgot that maid place And fell in the place of love. 6.Pallathoor thannil yennai , Parithavikka vittu vittu , Metturil antha mangai , Meleri nindru kondal. 6.Leaving me in the pit place , For undergoing suffering , That lady started living in the rich place, And started standing on the top 7.Keezhooril vaazhvadarkkum , Kili mozhital illayada, Melooru povatharkkum , Velai varavillayada. 7.For living in the low place , There is no lady who talks like a parrot , And also the time has not come , For me to go to the top place. K RAJARAM IRS 221224 ---------- Forwarded message --------- From: Chittanandam V R <[email protected]> Date: Sun, 22 Dec 2024 at 05:51 Subject: Fwd: Thirumazhisai Aalvar To: *" திருமழிசை ஆழ்வாரின்.... சொற்சிலம்பம்"* *திருமழிசை ஆழ்வாரின் திருசந்த விருத்தம் ஓசை நயம் உடையது மட்டுமல்ல, பொருள் நயமும் மிக்கது. இதற்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்கும் ஓர் பாசுரமும், அதன் பொருளையும் காண்போம்.* *ஆழ்வார் தம் திருச்சந்த விருத்தப் பாசுரம் ஒன்றில் புள் என்ற ஒரு வார்த்தையை வைத்துக்கொண்டு சொற்சிலம்பம் சுழற்றுகிறார்.* *புள் என்ற வார்த்தை பொதுவாக பறவையைக் குறிக்கும். எம்பெருமானுடன் சம்பந்தப்பட்ட பறவைகள் அனைத்தையும் ஒரே பாசுரத்தில் குறிப்பிட்டுக் காட்டும் விதம் இலக்கிய ரசனையின் உச்சகட்டம்.* *திருக்கரத்தில் ஜொலிக்கும் சக்கரத்தாழ்வானை வைத்திருக்கும் எம் பெருமானே! அன்னப்பறவையாக அவதாரம் செய்து நான்கு வேதங்களையும் உபதேசித்தாய்.* *கிருஷ்ணாவதாரத்தில் கொக்கு வடிவத்தில் உம்மைக் கொல்ல வந்த பகாசுரனின் வாயைக் கிழித்து அழித்தாய்.* *பெரிய திருவடியாகிய கருடன் உமது வாகனமாகவும் கொடியாகவும் கொண்டிருக்கிறாய்.* *இத்தனை பறவைகளுடன் தொடர்புடைய நீர் கருடனுக்கு பகையாகிய ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டிருப்பது மிகுந்த ஆச்சரியத்தை தருகிறது என்பதை* *"புள்ளதாகி வேத நான்கும் ஓதினாய், அதன்றியும்* *புள்ளின்வாய் பிளந்து புட்கொடிப்பிடித்த பின்னரும்..* *புள்ளை ஊர்தி ஆதலால் அதென் கொல்? மின் கொள் நேமியாய்!* *புள்ளின் மெய்ப்பகைக் கடல் கிடத்தல் காதலித்ததே."* *(நேமி - சக்கராயுதம்)* *என்று இப்பாசுரத்தில் தம் அழகான புலமையை வெளிப்படுத்துகிறார்....* *அடியேன் * *வகுளாபரணராமாநுஜதாசன்* ***************************************************** *சித்தானந்தம் * -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZor7vO77BZv_wpHdcPuqd8Tn6EMNyaAuiuTuSBUSQ7smug%40mail.gmail.com.
