Vara madha idhazh and water shortage ration do not fit for computer
pisasu,  developments. KR IRS 15924

---------- Forwarded message ---------
From: Chittanandam V R <[email protected]>
Date: Sun, 15 Sept 2024 at 05:35
Subject: Fwd: Sujatha - Anna Salai 2094
To:



*அண்ணாசாலை - 2094! *
*(சின்னஞ்சிறுகதை)*

* சுஜாதா *


*கடிதத்தைப் பிரித்து படித்த டேவிட் மிக மகிழ்ந்தான் .*

*மகிழ்ச்சியை உடனே மனைவியுடன் பகிர்ந்துகொள்ளவும் விரும்பினான். *

*பாக்கெட் தொலைதொடர்பு சாதனத்தை எடுத்து சில பொத்தான்களை அழுத்த*

*சின்னத்திரையில் தேதி மினுக்கியது . *

*03-01-2094*

*பிறகு அவனது குடியிருப்பு பகுதி தெரிந்தது.*

*அதற்குப்பின் 1,2,3,4, -- --- -- 47வது மாடி. *

*வீடு எண் 383 .*

*வீட்டு வாசலில் பூட்டு. *

*" மன்னிக்கவும். உங்கள் வீடு பூட்டப்பட்டிருக்கிறது . சற்று கழித்து நானே
அழைக்கிறேனே! *
*காலம் தண்ணீர் போன்றது. அதுவரை உங்கள் வேலையை கவனியுங்கள்." *

*வேலை? அதைத்தான் இந்தக் குட்டி கம்ப்யூட்டர் பிசாசுகள் செய்துவிடுகின்றனவே .*

*வார இதழைப் பிரித்தான்.*

*மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்கை , திருச்சி எட்டிலிருந்து ஒன்பதாம் தமிழழகன்
கேட்க --*

*அதற்கு இன்னும் சி.நா.கா. என அரசு பதில் தந்திருந்தார்.*

*இருக்கையைவிட்டு எழுந்து கீழே ஜன்னல் வழியே நோக்கினான் .*

*நெட்டிலிங்க மரங்கள் குட்டைக் காளான் சைஸில் தோன்றின .*

*பீப் --- பீப் --- பீப். *

*தொலை தொடர்பு சாதனம் சிணுங்கி உயிர்த்தது.*

*திரையில் ஞானம் அவன் மனைவி தெரிந்தாள் .*

*மேனியில் வெண்ணெய் வளப்பம் . *

*"தொடர்பு கொண்டீர்களாமே . எது விஷயமாக?"*

*"நல்ல செய்திதான்.  அது சரி, நீ எங்கு போயிருந்தாய்?"*

*"மறந்து விட்டீர்களா இன்று ரேஷன் கிழமை!"*

*" மை குட்னஸ்! ரேஷன் கடைக்கு சென்றிருந்தாய் அல்லவா? எவ்வளவு கிடைத்தது?"*

*" வழக்கமான ஐந்து லிட்டர்தான் . உங்க அப்பா அம்மா பெயர்களை சேர்த்திருந்தால்
இன்னும் இரண்டு லிட்டர் தண்ணீர் அதிகமாக  கிடைத்தி**ருக்கும். "*

*" இறந்து போனவர்களின் பெயரை  ரேஷன் அட்டையில் சேர்ப்பது பாவமில்லையா?"*

*"பாவ புண்ணியத்தைப் பார்த்தால் மாதத்துக்கு இரண்டு தடவைதான் குளிக்க
முடியும். என் வாயைக் கிளறாமல் நீ சொல்ல வந்ததை சொல்"*

*"அண்ணாசாலைக்குச் செல்ல நமக்கு அனுமதி கிடைத்திருக்கிறது !"*

*" வா-- வ் ! நம்முடைய நீண்ட நாள்  கனவு . என்றைக்கு ?" *

*"14-01-2094  அன்றைக்கு!".*

*"அன்றைக்கு தமிழர் திருநாள் அல்லவா ?"*

*" ஆம். அதனால்தான்  கொஞ்சம்  அதிகமானவர்களுக்கு அனுமதி கிடைத்திருக்கிறது .
பை-- மாலையில் பேசுவோம்".*
*               **** *

*ஸ்பரிசம் பட்டதும் கதவு திறந்துகொண்டது .*

*ஓடிவந்த ஞானம் அவனைக் கட்டிக்கொண்டாள் .*

*காலையில் அவன் சொன்ன சந்தோஷ செய்திக்காக ஒரு முத்தம் தந்தாள் .*

*" டேவிட் ! நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் . நீ ஏன் இப்படி
வாடிப்போய் இருக்கிறாய்?"*

*" மாடிகளில் இறங்கி வந்தேன் . கொஞ்சம் குடிக்க தண்ணீர் தருகிறாயா?"*

*" விளையாடுகிறாயா? அடுத்த வாரம் வரை நம்முடைய அத்யாவசிய தேவைகளுக்கே தண்ணீர்
போதுமா என நான் கவலைப் பட்டுக் கொண்டிருக்கிறேன் . பால் கொணர்கிறேன். நல்ல
பிள்ளையாக சாப்பிடு."*

*" சற்று நேரம் கழித்து சாப்பிடுகிறேன் . நீ இதற்கு முன் அண்ணாசாலைக்கு
போயிருக்கிறாயா? "*

*" சின்ன வயதில் அப்பாவின் கைகளை பற்றிக்கொண்டு, அங்கே சென்றது புகைமூட்டம்
போல தெரிகிறது . தெளிவாக நினைவில்லை. நீ? "*

*"கல்லூரியில் படிக்கும்போது ஹாஸ்டல் சுவர் ஏறிக்குதித்து நண்பர்களுடன்
திருட்டுத்தனமாக ஒரு தரம் போனதோடு சரி"*

*"பதினான்காம் தேதி காலையில் புறப்பட்டால் போதுமல்லவா?"*

*"எதற்கும் முதல் நாள் இரவே புறப்பட்டு விடலாம்".*

*"போகலாமா?" என்றாள் ஞானம் . *

*கீழே வந்தார்கள்.*

*கார் நகர்ந்தது.*

*தாம்பரம் நுழைவாயிலில் கான்ஸ்டபிள் காரை நிறுத்தினார்.*

*"நீங்கள் எங்கே போகிறீர்கள்?"*

*"அண்ணாசாலைக்கு".*

*"மவுண்ட் ரோடுக்கு செல்ல தங்களிடம் அனுமதி சீட்டு உள்ளதா?" *

*சீட்டைக்காட்டினான் .*

*"எனக்கு ஒரு சந்தேகம் . மவுண்ட் ரோடு அண்ணாசாலை இரண்டுமே ஒன்றுதானே?"*

*"மவுண்டுரோடு என்ற பெயரை அண்ணாசாலை என மாற்றி  சுமார் 120 ஆண்டுகளுக்கு மேல்
ஆகிறது . எனினும் மிகப் பெரும்பாலோர் மவுண்ட் ரோடு என்றுதான்
சொல்லுகிறார்கள்."*

*"சரி டேவிட்! இப்படி ஊர்ந்தபடி போனால் நாம் எப்போது அங்கே போய் சேருவது? ம்..
இதற்குத்தான் ஒரு ஹெலிகாப்டர் வாங்கு என்று சொல்கிறேன் நீ கேட்பதாக
தெரியவில்லை."*

*சிரித்தான் டேவிட்.*

*"எதற்கு,  ஏன் இந்த சிரிப்பு?"*

*"மேலே பார். புரியும்."*

*போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டு மேலே நிறைய ஹெலிகாப்டர்கள்  நின்ற
இடத்திலேயே சுழன்றுகொண்டிருந்தன . *

*                      *******

*நடந்தார்கள் .*

*"கூட்டம் அதிகம் இல்லையே டேவிட்!"*

*"தினமும் அதிகபட்சம் ஐந்தாயிரம் பேர்களுக்குத்தான் அனுமதி. அதுவும் இல்லாமல்,
நாம் வந்திருப்பது அதிகாலை வேளை!"*

*அண்ணா மேம்பாலத்தில் ஏறி இறங்கினார்கள் .  *

*இன்னும் சற்றுத் தொலைவுதான். *

*அந்த பகுதியில் கூட்டம் அடர்த்தியாக இருந்தது .*

*மெஷின்தனமாக ' கைடி' ன் குரல் ஒலித்தது .*

*"அண்ணாசாலையிலேயே மிகப் பழமையான கட்டிடம் இது. 150 ஆண்டுகளுக்கு முன்
கட்டியது . *

*" அம்மாடியோவ் ! இவ்வளோ சின்ன கட்டிடத்தை எப்படி கட்டியிருப்பாங்க ! "*

*டேவிட்டும் ஞானமும் வியப்புடன்  வேடிக்கை பார்த்தார்கள்-- எல்.ஐ.சி
கட்டிடத்தை ! *

*      ************************ *

*(சுஜாதாவின் "ஓலைபட்டாசு" என்ற கதைத்தொகுப்பில் சின்னசிறிய கதை என
இடம்பெற்றது )*

*******************************
*சித்தானந்தம் *

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopSHFpPpcDR5m0fQpeQOjVvcx3iBtuEkUpHA%2BroFPU0iw%40mail.gmail.com.

Reply via email to