Myths and Facts 8: முடி கட்டினால் மரு உதிர்ந்துவிடுமா? <https://www.vikatan.com/author/2710-r-vaidehi> மரு, பாலுண்ணி, ஸ்கின்டேக் என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது இந்தப் பிரச்னை. முதலில் மரு என்பதற்கும் ஸ்கின் டேக் (skin tag) என்பதற்குமான வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். உதட்டுக்கு மேலோ, கன்னத்திலோ, கழுத்திலோ சின்னதாக ஒரு மச்சம் இருந்தால் அதை அழகு என கொண்டாடுகிறோம். அதுவே, மச்சத்துக்கு பதில் மரு வந்தால், கவலை கொள்கிறோம். எப்பாடு பட்டாவது அதை உடனே அகற்றிவிடத் துடிக்கிறோம். கடைகளில் விற்கப்படும் அமிலத்தன்மைமிக்க களிம்பை பூசுவது முதல் மருவை சுற்றி தலைமுடியை இறுக்கமாகக் கட்டிவைப்பதுவரை வீட்டு சிகிச்சைகளை முயற்சி செய்வோரும் உண்டு. உண்மையில் மரு என்பது என்ன... அதை நீக்க வேண்டுமா... எப்படி நீக்க வேண்டும்? எல்லாவற்றையும் விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் செல்வி ராஜேந்திரன். டாக்டர் செல்வி ராஜேந்திரன் மருவா... ஸ்கின் டேகா?
மரு, பாலுண்ணி, ஸ்கின் டேக் (skin tag) என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது இந்தப் பிரச்னை. முதலில் மரு என்பதற்கும் ஸ்கின் டேக் என்பதற்குமான வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். மரு என்பது ஒருவகையான வைரஸ் தொற்றால் உருவாவது. இதை ஆங்கிலத்தில் 'வார்ட்' (wart ) என்கிறோம். இது ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (ஹெச்பிவி) தொற்றுவதால் ஏற்படுவது. இது முகம், கைகள், கால்களில் வரும். பார்ப்பதற்கும் தொடுவதற்கும் சொரசொரப்பாக இருக்கும். செருப்பு அணியாமல் நடப்பவர்களுக்கும், நீச்சல் பயிற்சி எடுப்போருக்கும் அதிகம் வரும். ஷூக்கள் சுத்தமின்றி இருந்து, அவற்றால் இன்ஃபெக்ஷன் ஏற்பட்டாலும் பாதத்தில் மருக்கள் வரலாம். இது ஒருவரிடமிருந்து மற்றவர்க்குப் பரவும். ஸ்கின் டேக் (skin tag) என்பதை சரும வளர்ச்சியின் நீட்சி என்பதாகப் புரிந்துகொள்ளலாம். இது பெரும்பாலும் மரபியல் ரீதியாகவோ, ஹார்மோன்களின் சமநிலையின்மை காரணமாகவோ வருவது. இது பார்ப்பதற்கு மென்மையாக, குட்டி பலூன் போல இருக்கும். மிகச் சிறிய அளவிலிருந்து, பெரிதாக தொங்கும் அளவு வரை இது அளவில் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். முகம், அக்குள், கழுத்து, தொடையிடுக்கு என சதை மடிப்புகள் உள்ள இடங்களில் இது அதிகம் வரும். கழுத்தில் செயின் அணிந்திருக்கும் சிலருக்கு அந்த உராய்தல் காரணமாக ஸ்கின் டேக் வரலாம். நீரிழிவு உள்ளவர்களுக்கு இந்தப் பிரச்னை அதிகம் பாதிப்பதைப் பார்க்கலாம். ஸ்கின் டேக் என்பது ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவாது. pixabay பிய்த்து எடுக்கலாமா... முடி கட்டிவைக்கலாமா? மருவோ, ஸ்கின் டேகோ... எதுவானாலும் இப்படிப்பட்ட விஷயங்களைச் செய்வது மிகவும் தவறானது. மருவைப் பிய்த்து எடுப்பதால், அது இன்னும் அதிகமாகப் பரவும். இது வைரஸ் தொற்று என்பதால் நம் உடலிலும் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குப் பரவும். நம்மிடமிருந்து மற்றவர்களுக்கும் பரவும். மருவை அகற்றினால், மீண்டும் வருமா என்ற கேள்வி நிறைய பேருக்கு இருக்கிறது. பெரும்பாலும் வர வாய்ப்பில்லை என்றாலும், நோய் எதிப்புசக்தி குறைவாக உள்ளவர்கள், நீரிழிவு உள்ளவர்கள் போன்றோருக்கு அது மீண்டும் வரலாம். சின்னதாக இருக்கும்போதே மருவை நீக்க முறையான சிகிச்சை பெறுவதுதான் சிறந்தது. மருக்களை நீக்க, ஆசிட் வைப்பது போன்ற வீட்டு சிகிச்சைகளைப் பின்பற்றுவது ஆபத்தானது. மருவைச் சுற்றி இறுக்கமாக முடி கட்டும் வழக்கம் இன்னும் சிலரிடம் இருக்கிறது. அப்படிச் செய்தால் அந்த இடத்தில் ரத்த ஓட்டம் தடைப்பட்டு மரு உதிர்ந்துவிடும் என்று நம்புகிறார்கள். இத்தகைய சிகிச்சைகள் எல்லாம் பிரச்னையை மேலும் தீவிரமாக்கலாம், இன்ஃபெக்ஷனை ஏற்படுத்தலாம். ixabay என்ன சிகிச்சை? மருவா, ஸ்கின் டேகா என உங்களால் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாவிட்டால், சரும மருத்துவர் அதைச் சரியாகக் கண்டுபிடித்து சிகிச்சை தருவார். மருவாக இருந்தால் அதன்மீது மட்டும் தடவும்படியான திரவ மருந்தை மருத்துவர் பரிந்துரைப்பார். இரவில் அதை மருவின் மேல் தடவிவிட்டு, மறுநாள் காலையில் கழுவிவிட வேண்டும். அது மெள்ள மெள்ள மென்மையாக மாறும். பிறகு சரும மருத்துவர் அதை ரேடியோ ஃப்ரீக்வன்சி (Radio Frequency) அல்லது எலக்ட்ரோகாட்டரி (Electrocautery) சிகிச்சையின் மூலம் முற்றிலும் அகற்றிவிடுவார். லிக்விட் நைட்ரஜன் பயன்படுத்திச் செய்யப்படுகிற க்ரையோதெரபி (Cryotherapy ) மூலமாகவும் வைரஸின் மூலம் பரவும் மருக்களை நீக்கலாம். வராமல் தடுக்க முடியுமா? கைகளையும் கால்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அடிப்படை. உடல் சுகாதாரமும் முக்கியம். குறிப்பாக, வெளியே போய்விட்டு வீட்டுக்குள் வந்ததும் கைகளையும் கால்களையும் கழுவ வேண்டும். தினமும் இருவேளைகள் குளிக்க வேண்டும். செருப்பு அணியாமல் வெறுங்கால்களில் நடக்கக்கூடாது. மற்றவர்களின் செருப்பை அணியக்கூடாது. ரொம்பவும் கடினமான காலணிகளை அணியாமல், பாதங்களுக்கு மென்மையான செருப்பு அணிய வேண்டும். எம்சிஆர் (MCR -Multicellular rubber) மெட்டீரியலில் செய்யப்படும் செருப்பு அணியலாம். KR IRS 18824 -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZorTyg6cSDq2V5D2t2LaEKwph0Du0uJmkVNbH%3Dz1-MD0Ug%40mail.gmail.com.
